பயனர் பேச்சு:Siva Ganesh 2009
வாருங்கள்!
வாருங்கள், Siva Ganesh 2009, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- Commons sibi (பேச்சு) 19:31, 21 மே 2019 (UTC)
May 2019
[தொகு]வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையான மாற்றுக்கருத்துகளையும் கொண்டவர்களால் எழுதப்படுகின்றது. ஆயினும், கட்டுரைகள் நடுநிலை நோக்கில் எழுதப்படுவதை உறுதிசெய்வதில் நாம் கவனமாக உள்ளோம். உங்கள் அண்மைய தொகுப்பு நடுநிலை நோக்கில் அமைந்திராததாகத் தென்பட்டதால், அதனை நீக்கியுள்ளேன். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:56, 22 மே 2019 (UTC)
தெளிவு பெற விரும்புகிறேன்.
[தொகு]நண்பரே,
மாற்றுக் கருத்துக்களின் பேரில் நடை பெறும் ஆரோக்கியமான விவாதங்கள், பணிகளை மேம்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு (இந்தியாவின் முதன்மைச் சட்டம்), பல முறைகள் திருத்தப் பட்டு, மேம்படுத்தப் பட்டதாக, இப் பதிவில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. என்னால், இந்திய அரசியலமைப்பின் சிறு பகுதி, ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு, மேம்படுத்தப் படுமாயின், நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். மேற்கண்ட நீக்கப் பட்ட , எனது பதிவு சார்பாக, யாரை, எப்படித் தொடர்பு கொள்வது என்பதைப் பற்றித் தெரிவீப்பீர்கள் என்றால், நான் நன்றியுடன் மிக்க மகிழ்ச்சி அடைவேன். நன்றி ! Siva Ganesh 2009 (பேச்சு) 06:09, 22 மே 2019 (UTC)
- தாங்கள் அந்த கட்டுரையில் சேர்க்கப்படும் உரைகளுக்கு கட்டாயம் சான்றுகள்(Proof) சேர்க்க வேண்டும். அவ்வாறு சான்றுகள் இல்லையென்றால், நீங்கள் செய்த தொகுப்பானது மீளமைக்கப்படும் அல்லது நீக்கப்படும் என நினைவில் கொள்க. நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:15, 22 மே 2019 (UTC)
நன்றி கௌதம் சம்பத்!
நான் இணைத்துள்ள உரைக்கு சான்றாக, வழக்கு எண்ணைக் குறிப்பிட்டுள்ளேன். அதைக் குறிப்பாக வைத்துக் கொண்டு, அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். மேற்கொண்டு, இத் தளத்தில் உரையாட இயலாது என்றால் நிறுத்திக் கொள்கிறேன். 'இந்திய அரசியலமைப்பு' கட்டுரையில் இருந்து எனது உரையை நீக்கிய ஒன்றிய அரசு நிர்வாகக் குழுவினர் அல்லது 'இந்திய அரசியலமைப்பு' சம்பந்தப் பட்டவர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணைக் கொடுத்தீர்கள் என்றால், மேற்கொண்டு அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும், இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள உரிமைகளைப் பெறுவதற்கும் மட்டுமல்லாது, அவர்களது கடமைகளைச் செய்வதற்கும் உரிமையுண்டு.காலத்திற்கு ஏற்றவாறு, இந்திய அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்பட தாங்கள் உதவுவீர்கள் என நம்புகிறேன். நன்றி!
கலைக்களஞ்சியக் கட்டுரை
[தொகு]வணக்கம், Siva Ganesh 2009!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--Kanags \உரையாடுக 08:14, 22 மே 2019 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
[தொகு]Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.