பயனர் பேச்சு:Manisarangam

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Manisarangam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


--பாஹிம் 17:47, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்[தொகு]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (டிசம்பர் 12, 1950 அன்று பிறந்தார்) ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் . ரஜினி தன்னுடைய மானசீக குருவான கோலிவுட் புகழ் கே.பாலசந்தர், இயக்கிய படம் அபூர்வ ராகங்கள் [1975] மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அறிமுகமானார். பின்னர் அவருடைய நடிப்பு திறமையாலும், நடிப்பு மேல் கொண்ட ஆர்வத்தினாலும் தமிழ் சினிமா வரலாற்றில் முத்திரையை பதித்தார்.ரஜினியின் வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது.அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து,வறுமையின் பிடியில் சிக்கி,தன்னை நோக்கி வரும் சோதனைகளை சாதனையாக மாற்றிய உச்சம் கண்ட உயர்ந்த உள்ளம் ரஜினி.

ரஜினியின் ஆரம்பகால வாழ்கை:

ரஜினிகாந்த் இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாத். தாயார் ஜிஜாபாய்,தந்தை ராமோஜி ராவ் கேக்வாத்க்கும் நான்காவதாக பிறந்த குழந்தை தான் ரஜினி.இவர் டிசம்பர் 12, 1950 மைசூர் மாநிலம் பெங்களூரில் மராத்திய குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார்கள். இவருடைய ஐந்தாம் வயதில், தனது தயாராய் இழந்து வாடினார். அதன் பிறகு தனது அடிப்படை கல்வியை பெங்களூரில் உள்ள அரசு மாதிரி பிரைமரி பள்ளியில் பயின்றார்.

1966 மற்றும் 1973 இடையே அவர் சென்னை மற்றும் பெங்களூரில் பல இடங்களில் பணிபுரிந்தார். அவர் பெங்களூர் போக்குவரத்து சேவை (BTS) நடத்துனராக சேர்வதற்கு முன் பல்வேறு வேலைகள் செய்தார். கன்னட நாடக ஆசிரியரும் இயக்குநருமான பிறகு டோபி முனிஅப்பா மூலம் மேடை நாடகம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவர் வில்லத்தனம் நிறைந்த துரியோதனன் வேடத்தில் நடித்து அசத்தினார். 1973 இல், அவரது நண்பர் மற்றும் சக தொழிலாளி ராஜ் பகதூர், ரஜினியின் திறமையை கண்டு சினிமாவில் நடிப்பதற்கு உந்துதலாக இருந்தார். ரஜினி இரண்டு ஆண்டுகள் சென்னை திரைப்பட நிறுவனத்தில் பயில்வதற்கும் ராஜ் பகதூர் உதவியாக இருந்தார். ஒரு நிலையில் அவரது நடிப்பு திறமையை பார்த்த இயக்குனர் கே.பாலசந்தர் அவரிடம் சொன்ன வார்த்தை விரைவில் தமிழ்க்கற்று கொள் என்பதுதான். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தமிழை கற்று கொண்டார். பின்னர் இதுதான் அவரின் சினிமா வாழ்கையில் தனக்கென தனி இடத்தை பிடிக்க உதவியது.


தனிப்பட்ட வாழ்க்கை குடும்பம்

அவருடைய 31 ஆம் வயதில்ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதியில், பிப்ரவரி 26, 1981 அன்று லதா ரங்கசாரி என்ற ஐயங்கார் குலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மனைவி, லதா ரஜினிகாந்த், தற்போது ஆசிரமம் என்ற பெயரில் உள்ள ஒரு பள்ளியை நிர்வகித்து வருகிறார். தனது மூத்த மகள், ஐஸ்வர்யா, நவம்பர் 18, 2004 அன்று நடிகர் தனுஷ்யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது இளைய மகள், சௌந்தர்யா , இயக்குநர் , தயாரிப்பாளர் மற்றும் கிராபிக் டிசைனர் போன்ற பல்வேறு துறையில் அனுபவமுள்ளவராக திகழ்கிரறார். இவர் செப்டம்பர் 3, 2010 அன்று தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை பெற்றோகள் சம்மதத்துடன் மணந்தார்.


குருவின் பேச்சுக்கு மரியாதை

2011 ஆம் ஆண்டு சினிமா நிகழ்ச்சி ஒன்றில் தனது குருவான கே.பாலசந்தர் கேட்டு கொண்டதின் பேரில் தனது புகை பழக்கத்தை விட்டு இருக்கிறார்.பணம் மற்றும் புகழ் சேர்ந்தாலே தலைக்கணமும் கூடே வந்துவிடும் இந்த உலகில், தனது குருவின் பேச்சை கேட்டு புகை பழக்கத்தை விட்டு இருக்கிறார் ரஜினி.அதனால் தான் என்னவோ மக்கள் மனதில் இன்று வரை சூப்பர் ஸ்டாரக நிலைத்து உள்ளார்.

ரஜினி தத்துவம்:

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜினி பேசியதாவது,எல்லாரும் எங்கிட்ட கேக்குறது ஈடற்ற உயரத்தில் இருந்தும் அதற்கான தோரணை எதுவும் இல்லமால் இருக்கீறிகளே எதற்காக என்று கேட்கின்றனர்.ரஜினியின் பதில்.கண்ணா...தரையிளுருந்து கிழே விழுந்தா லேசாதான் அடிப்படும்,ரொம்ப உயர்த்திலுருந்து விழுந்தா ஆள் இருக்கிற தடமே தெரியாது அதனால்தான் என்று சொல்லி முடித்தார்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு:

ரஜினிகாந்த் ஆன்மீகம் மீது ஒரு வலுவான நம்பிக்கை உள்ளவராக திகழ்கிறார். ஒரு வாசகர் என்ற முறையில், ஆன்மீக தலைப்புகளில் உள்ள புத்தகங்களை படிப்பதில் மிக ஆர்வமுள்ளவரவர். அவர் யோகா மற்றும் தியானம் செய்வதில் ஈடுபாடு உள்ளவர். முன்னதாக தனது படங்களில் ஒவ்வொரு வெளியீட்டுக்கு கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.உதாரணமாக, அவர் 2007 ல் சிவாஜி வெளியிடுவதற்கு முன் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலை பார்வையிட்டார். அவர் எப்போதாவது இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சுவாமி சச்சிதானந்தா, ராகவேந்திர சுவாமி, மகாவீர் பாபாஜி, மற்றும் ரமண மகரிஷி இவர்கள் அனைவரும் ரஜினிக்கு பிடித்த ஆன்மீகவாதிகள்.

அரசியலில் செல்வாக்கு

1995 இல், ரஜினிகாந்த் மற்றும் பிரதமர் நரசிம்ம ராவ் சந்திப்பிற்கு பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார். குமுதம் இதழ் நடத்திய ஒரு கருத்து கணிப்பில் ரஜினிகாந்த் ஆதரவை கொண்டு காங்கிரஸ் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 130 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என்று கணிக்கப்பட்டது. 1996 ல், காங்கிரஸ் கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) உடன்- கூட்டணி சேர முடிவு செய்தபோது, ரஜினிகாந்த் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.), தமிழ் மாநில காங்கிரஸ் (TMC ) கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். TMC தங்களது தேர்தல் சின்னமாக ஒரு சைக்கிள் பயன்படுத்தியது மற்றும் அவர்களின் சுவரொட்டிகளில் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் சைக்கிள் சவாரி செய்த படத்தை பயன்படுத்தப்பட்டன.அச்சமயத்தில், "அதிமுக ஆட்சிக்கு வந்தால் கடவுள் கூட தமிழ்நாடை காப்பாற்ற முடியாது", என்று ரஜினிகாந்த் சூளுரைத்தார். முழுமனதுடன் தி.மு.க. TMC கூட்டணி மக்கள் ஆதரித்தனர் மற்றும் அந்த கூட்டணி வாக்களிக்க அவரது ரசிகர்கள் மக்களிடம் கேட்டு கொண்டனர். இந்த கூட்டணி 1996 ல் ஒரு முழுமையான வெற்றி பெற்றது.

2010 இல், திரைப்பட துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் குறிப்பாக அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட விழாவில் நடிகர் அஜீத் குமார் பேசியதாவது, பொது நிகழ்ச்சிகளுக்கு நடிகர்களை வரச்சொல்லி வற்புறுத்த கூடாது என்று பகிரங்கமாக மேடையில் அறிவித்தார்.இதே மேடையில் அமர்ந்திருந்த ரஜினி கைதட்டி அதனை வரவேர்த்தார். முதல்வர் இருக்கும் மேடையில் தனக்கு சரி என்று பட்டதும் சக கலைஞனை கைதட்டி வரவேர்த்த ஒன்றே போதும் அவருடைய தைரியத்துக்கு எடுத்துக்கட்டாக.

தமிழ் சினிமாவில் ரஜினி :(1975 -1977 )

1975 இல், ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். இதில் அவருடன் கமல்ஹாசன், நடிக்க இந்த படத்தை கே. பாலசந்தர் இயக்கினார். இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லத்தனம் நிறைந்த வேடத்தில் நடித்தார். இந்த படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை தட்டி சென்றது. அவரது இரண்டாவது படம், ஒரு கன்னட திரைப்படம், கதா சங்கமா, 1976 ல் வெளியிடப்பட்டது. அடுத்தாக கே பாலசந்தர் இயக்கிய அந்துலெனி கதா என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடித்த்தார். பின் வரும் ஆண்டுகளில், அவர் எதிர்மறை வேடங்கள் ஏற்று நடித்து வந்தார்.இதில் மூன்று முடிச்சு,அவர்கள், 16 வயதினிலே போன்ற படங்கள் குறிப்பிடத்தகுந்தன. ரஜினிகாந்த்க்கு கே.பாலசந்தர் ஒரு அனுபவம் வாய்ந்த மற்றும் நம்பிக்கைக்குரிய அறிவுரையாளராக இருந்தார். அதன் பிறகு புவனா ஒரு கேள்விக்குறி (1977) படத்தில் மூலம் நல்ல கதாபாத்திரம் இவருக்கு அமைந்தது. எஸ்.பி. முத்துராமன் மற்றும் ரஜினிகாந்த்ன் இந்த வெற்றி கூட்டணி 25 படங்களில் 1990 வரை தொடர்ந்தது.

திருப்புமுனை: 1978-89

பைரவி(1978 ) திரைப்படம் மூலம் கதாநாயகனாக மாறினார். பின்னர், முள்ளும் மலரும் படம் அவருக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுத்தந்தன. புவனா ஒரு கேள்விக்குறி படம் மூலம் அமைந்த வெற்றி கூட்டணி ஆறிலிருந்து அறுபது வரை (1979) மூலம் தொடர்ந்தது. இந்த படத்தில் அவரது உடன்பிறப்புகளுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யும் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார்.

மலையாள படத்தில் ரஜினி:

அவர் அலாவுதினும் அற்புத விளக்கும் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார்.அதே ஆண்டில், அவர் தனது பெற்றோரின் மரணத்திற்கு பழி வாங்க ஒரு மனநிலை சரியில்லாத நபராக தர்ம யுத்தம் படத்தில் நடித்திருந்தார். அவர் தனது 50 வது படம் "புலி" ல் என்.டி. ராமா ராவ் உடன் நடித்தார். இந்த காலத்தில் வெளியிடப்பட்ட பிரபலமான படங்களில் நினைத்தாலே இனிக்கும் , ப்ரியா, மற்றும் தெலுங்கு படமான அம்மா எவரிக்கின அம்மா போன்ற படங்கள் வெற்றி நடை போட்டன.

1980 ஆம் ஆண்டுகளின் இறுதியில், அவர் தென் இந்திய சினிமாவில் ஒரு பிரபல நடிகர் ஆனார். தனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், ரஜினிகாந்த் திடீரென நடிப்பு விட்டு விலக , ஆனால் மீண்டும் நடிப்பை தொடர்ந்தார். அவர் தமிழ் சினிமா வரலாற்றில் மீண்டும் பில்லா படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார்.இது பாலிவுட் படமான "டான்" ரீமேக் ஆகும். ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து முதல் வணிக வெற்றியை பெற்றது. இந்த படத்தை அஜித் ரீமேக் செய்து நடித்தார். ஜானி படம் மூலம் ஸ்ரீதேவி உடன் இணைந்து அவர் மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்தார். தொடர்ந்தது, முரட்டு காளை படத்தில் நடிப்பின் மூலம் நிஜ காளையாக மாறி அதிரடி வெற்றியை கொடுத்தார். இந்த படத்தில் இடம் பெற்ற " பொதுவாக என் மனசு தங்கும் " பாடல் இன்று உள்ள இளசுகளையும் ஆட்டம் போடா வைக்கும். கே.பாலசந்தரின் முதல் தயாரிப்பான நெற்றிக்கண் இல், ரஜினி ஒரு பெண் ஆசையுள்ள தந்தை மற்றும் ஒரு பொறுப்புள்ள மகன் என இரட்டை வேடங்களில் நடித்தார். தில்லு முள்ளு ரஜினிகாந்த்ன் முதல் முழு நீள காமெடி படமாகும். 1982 இல், அவர் போக்கிரி ராஜா மற்றும் தனிகாட்டு ராஜா மற்றும் மூன்று முகம் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். மூன்று முகம் படத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்தார்.

ரஜினி,அமிதாப் பச்சன் மற்றும் ஹேம மாலினி உடன் இணைந்து, அவரது முதல் பாலிவுட் திரைப்படமான, அந்தா கானூன்(1983) இல் நடித்தார். அந்த நேரத்தில் அதிக வருமானம் அளித்த திரைப்படங்களில் இந்த படமும் ஒன்றாக மாறியது. அவரது 1984 ல் வெளிவந்த நான் மகான் அல்ல படம் முத்துராமன் இயக்க கே. பாலசந்தர் மூலம் தயாரிக்கப்பட்டது. "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட பாத்திரத்தில் நடித்தார். நல்லவனுக்கு நல்லவன் படம் மூலம் சிறந்த தமிழ் நடிகர் விருதை பெற்றார். அவரது 100 வது படம், ஸ்ரீ ராகவேந்திரா (1985) இல், அவர் இந்து மத துறவி ராகவேந்திரா சுவாமியாக நடித்தார்.

ரஜினிகாந்த்ன் நான் சிகப்பு மனிதன்(1985), படிக்காதவன் (1985), மிஸ்டர் பரத் (1986), வேலைக்காரன் (1987), குரு சிஷ்யன்(1988) மற்றும் தர்மத்தின் தலைவன் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் இன்றும் பலராலும் பார்க்கப்படும் சூப்பர் ஹிட் திரைப்படம்.

ஆங்கிலம் படத்தில் ரஜினி:

1988 இல்,  ட்வைட் லிட்டில் இயக்கிய புளூட் ஸ்டோன் என்ற ஆங்கில படத்தில் நடித்து அசத்தினார்.ஒரு சில பாலிவுட் தயாரிப்புகளில் அவ்வபோது நடித்து வந்தார்.  ராஜாதி  ராஜா, சிவா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை மற்றும் அதிசய  பிறவி  உள்ளிட்ட திரைப்படங்கள்  வெற்றி நடை போட்டன. ராஜா சின்ன ரோஜா  படம் மூலம் நடிகர்களுடன் அனிமேஷன் பாத்திரங்களை பயன்படுத்திய  முதல் இந்திய படம் என்ற பெருமையை  பெற்றது.

சூப்பர் ஸ்டாராக மாறிய ரஜினி: (1990-2001 )

இந்த தசாப்தத்தில், ரஜினிகாந்த் தமிழ் மக்களின் மனதில் நீங்காத தனக்கென தனி இடத்தை பிடித்ததார். இந்த காலத்தில் ரஜினி நடித்து வெளிவந்த அனைத்து படங்களுமே வசூலை வாரிக் குவித்தன. அவரின் பணக்காரன் (1990) படம் மூலம் வெற்றி படிக்கட்டுகளை ஏற ஆரம்பித்தார். பாலிவுட்லும் அவரது பங்களிப்பு கடந்த பத்தாண்டுகளுக்கு பின்னர் தொடர்ந்தது. 1991 இல் வெளிவந்த ஹம் படம் மூலம் மீண்டும் அமிதா பச்சன் உடன் ஜோடி சேர்ந்தார் . 1991 இல், தளபதியில் மணிரத்னம் உடன் இணைந்து பணியாற்றினார். தளபதி படத்தில் மம்முட்டி உடன் ஜோடி சேர்ந்த ரஜினி நட்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர்.இதில் இடம் பெற்ற "ராக்கம்மா கையை தட்டு" என்ற பாடல் உலக அளவில் புகழ் பெற்றது.1992 ஆம் ஆண்டு வெளிவந்த அண்ணாமலை, நட்பை மையமாக கொண்டு வந்த மற்றொரு படம். பி வாசு இயக்கிய மன்னன் படம் மூலம் அனைத்து தாய்குலங்களுக்கும் செல்ல பிள்ளையானார். ரஜினிகாந்த் வள்ளி (1993) படம் தனது முதல் திரைக்கதையை எழுதியிருந்தார். வீரா(1994) அதிக வருவாய் ஈட்டிய தந்தது. பாட்ஷா(1995) படம் மூலம் சுரேஷ் கிருஷ்ணா உடன் கை சேர்ந்தார். பாட்ஷா படம் இமாலய வெற்றி பெற்றது. இவரின் தொடர் வெற்றிகளால் கடவுளின் முழு ஆசீர்வாதம் பெற்ற மனிதராக ரசிகர் மற்றும் விமர்சகர்களால் நம்பப்படுகின்றது. முத்து படம் மூலம் கே.எஸ். ரவிக்குமார் உடன் ஜோடி சேர்ந்தார் ரஜினி. ஒடொரு மகாராஜா என்ற பெயரில் ஜப்பானீஸ் மொழிமாற்றம் செய்த முதல் தமிழ் படம் . முத்து படம் 1998 ல் ஜப்பானில் $ 1.6 மில்லியன் வசூலித்து, ஒரு பெரிய ஜப்பனீஸ் ரசிகர் தளத்தை ரஜினிக்கு உருவாக்க்கி கொடுத்தது. இந்தி படம் ஆடங்க் ஹை ஆடங்க் இல் அமீர் கான் உடன் இணைந்து நடித்தார். அமெரிக்காவில் வெளியே சர்வதேச திரைப்பட நட்சத்திரங்கள் மத்தியில் தனிப்பட்ட இடத்தை ரஜினிகாந்த் பிடித்தார்.அமெரிக்க செய்தி இதழ் ஒன்று ரஜினிகாந்த்ன் முத்து வெற்றியை பற்றி 1999ல் ஒரு கட்டுரையில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் 1995 ஆம் ஆண்டின் இறுதியில் பாக்ய தேபாட படம் மூலம் பெங்காலி சினிமாவில் நுழைந்தார்.

அவரது படங்களை பொறுத்தவரை ஒரு முழு புதிய பரிணாமம் எடுக்க தொடங்கியது. இவருடைய அருணாசலம்(1997) மற்றும் 150 வது படம் படையப்பா அந்த நேரத்தில் அவருடைய வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையாக மாறிவிட்டது.சினிமாத்துறையில் இவருடைய வருமானம் உயர்ந்தன.அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய செல்வாக்கை பெற்றார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி:

நீண்ட இடைவெளிக்கு பிறகு, ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி, 2002 ல் பாபா படத்தில் நடித்தார்.ஆன்மீகம் மற்றும் அரசியலை மையமாக கொண்டு கதை இருந்தது.இந்த படம் வணிக ரீதியாக விநியோகஸ்தர்களுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியது. விநியோகஸ்தர்களின் இந்த இழப்பை ரஜினிகாந்த் திருப்பி கொடுத்தார். இந்த படத்தில் ரஜினி பீடி மற்றும் மது உடன் தோன்றிய காட்சிகளால், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கே.எஸ்.ராமதாஸ் தரப்பில் பலத்த எதிர்ப்பு வந்தன. படத்தில் தோன்றும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்திய காட்சிகள் தமிழ் இளைஞர்களை கெடும் வகையில் உள்ளது என விமர்சிக்கப்பட்டது. பாபா படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பா.ம.க. தொண்டர்கள் திரைப்பட பேனர்கள் மற்றும் பிலிம் சுருள்களை எரித்தனர். இந்த செயல்கள் இந்த படத்தின் தோல்விகளுக்கு முக்கிய காரணம் ஆனது.சர்ச்சைகள் மற்றும் எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியில், ரஜினிக்கு தமிழ் மக்களிடம் உள்ள செல்வாக்கு குறையவில்லை.

இமாலய வெற்றி மற்றும் பாராட்டு: (2005-தற்போது)

ரஜினிகாந்த் மற்றும் பி.வாசு சந்திரமுகி படம் மூலம் மீண்டும் இணைந்தனர். திகில் நிறைந்த நகைச்சுவை படம் 2005 ஆம் ஆண்டு வெளியடப்பட்டது.தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு வரை திரையரங்குகளை விட்டு நீங்காமல், அதிக நாள் ஓடிய தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பிடித்தது. இது டர்கிஷ் மற்றும் ஜெர்மன் (Der Geisterjäger) மொழிகளில் டப்பிங் செய்து அந்த அந்தந்த நாடுகளில் வெளியிடப்பட்டது.

சந்திரமுகி வெற்றியை தொடர்ந்து , ஏ.வி. எம் புரொடக்ஷன்ஸ் -ல் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் எஸ் ஷங்கர் ஜோடி சேர்ந்தனர் . படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து, 2007 கோடை காலத்தில் வெளியிடப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் (uk) மற்றும் தென் ஆப்ரிக்கா வெளியீட்டின் போது அந்நாட்டில் பத்து சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக வந்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை தட்டி சென்றது. ரஜினிகாந்த்க்கு சிவாஜி படம் மூலம் ஏறத்தாழ 26 கோடி சம்பளம் கிடைத்தது. அது அவரை ஆசியா இரண்டாவது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகரானர். அவர் அடுத்த படமான குசேலன் தோல்வியை தழுவியது.

புகழ்

இந்திய மக்களால் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் ரஜினிகாந்த் சினிமாவில் தனக்கென தனி பாதையில் பயணித்தார். படங்களில் அவரது தனிப்பட்ட வசனம் மற்றும் ஸ்டைல், அதே போல் அவரது மக்களுக்கு உதவும் குணம் கொண்ட மனப்பான்மை மக்கள் செல்வாக்கு நிறைந்த மனிதனாக மாற்றியது. சோ.ராமசாமி போன்ற சில சக நடிகர்கள், அவரது புகழ் மற்றும் ரசிகர் அடிப்படை காரணமாக தமிழக அரசியலில் போட்டியிட்டால் வெற்றி பெறும் சாத்திய கூறுகள் உள்ளன என்று மக்கள் மத்தியில் வெளிப்படையாக கூறி வருகின்றன.

2006 ல் ஜப்பான் ஒரு விஜயத்தின் போது, இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங், இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு நியாயப்படுத்தும் வகையில், ஒரு பேச்சின் போது நாட்டில் முத்து பட வெற்றி குறிப்பிட்டு பேசியிருந்தார்.அகமதாபாத் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட்-ல் உள்ள மாணவர்கள் வணிக ரீதியாக வெற்றி பெரும் விதம் மற்றும் வெற்றி பெற்ற படத்தின் கதை இதை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்ய உள்ளதாகவும் அதற்காக "எந்திரன்" படத்தை தேர்வு செய்ததாககுவும் டிசம்பர் 2010 இல் தெரிவித்தனர். ஏற்கனவே ரஜினி நடித்த முத்து படமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. அவருடையை நகைச்சுவைகள் ஐபாட் போன்ற நவீன கருவிகளில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

ரஜினிகாந்த் நவீன அறிவியல் சார்ந்த திரைப்படம் எந்திரன் மூலம் எஸ் சங்கர் உடன் மீண்டும் பணிபுரிந்தார். இந்த படம் வெளியான பொழுது இதுவரை வந்த இந்திய படங்களில் எந்திரன் படம் தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது என்ற சாதனையை பெற்றது. இந்தியாவில் அதிக வசூல் செய்த படமாகவும் தேர்வானது. ரஜினிகாந்த்க்கு எந்திரன் படத்துக்காக இந்திய மதிப்பில் 45 கோடி ஒரு ஊதியம் வழங்கப்பட்டது.

ரஜினிகாந்த் ராணா(2011) என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகின. இந்த திரைப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். இந்த படம் தொடங்கிய சில நாட்களில் ரஜினிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் ரஜினிகாந்த் இறந்துவிட்டார் என்ற வதந்தி உலகம் முழுவதும் பரவியது.இதற்கு விடை கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என்ற செய்தி அவர் மனைவி மூலம் அறிவிக்கப்பட்டது. ரஜினி குணமடைவதற்க்காக இவருடைய ரசிகர்கள் அன்னதானம்,பால்குடம் ஏந்துதல்,மொட்டை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டனர். தற்போது உடல்நிலை சரியாகி மீண்டும் படபிடிப்பு தொடங்கின. ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா இயக்கி வரும் ஹர என்ற அனிமேஷன் படத்தில் நடித்தி வருகிறார்.

விருதுகள்

முதன்மை கட்டுரை: ரஜினிகாந்த் பெற்ற விருதுகள் மற்றும் பரிந்துரைகளின் பட்டியல்

ரஜினிகாந்த் பெரும்பாலும்  தனது படங்களுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். அவர் நல்லவனுக்கு  நல்லவன் 1984 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் நடிகருக்கான தனது முதல் பிலிம்பேர் விருது பெற்றார்.  பின்னர் அவர் சிவாஜி (2007) மற்றும் எந்திரன் (2010) தனது நடிப்புக்காக பிலிம்பேர் விருது பரிந்துரைகளை பெற்றார். முத்து (1995), படையப்பா (1999), சந்திரமுகி (2005), மற்றும் சிவாஜி (2007) அவரது பாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான பிரிவில் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் கிடைத்தது. அவர்  எழுதிய திரைக்கதை மற்றும் திரைப்பட தயாரிப்புகளின் அவரது  பங்களிப்புக்காக  சினிமா எக்ஸ்பிரஸ் மற்றும் பில்ம்பேன்ஸ் சங்கம் பல விருதுகளை அளித்தன  .

தமிழ்நாடு அரசு வாயிலாக, 1984 இல் கலைமாமணி விருது மற்றும் 1989 ஆம் ஆண்டு எம்.ஜி. ஆர் விருது கிடைத்தது. 1995 ல், தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கம் கலைச்செல்வம் விருதை அளித்தன. இந்திய அரசு 2000 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டார், இது இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் என்று அங்கீகரிக்க படுவதற்காக கொடுக்கப்படும் விருது ஆகும். என்டிடிவி 2007 ஆம் ஆண்டின் இந்திய சிறந்த பொழுதுபோக்கர் என ரஜினி தேர்வு செய்யப்பட்டார் .இவ்விருதுக்காக பரிந்துரைக்க பட்டியலில் ஷாருக்கான் இருந்தார் என்பது குறிப்பிட தகுந்தது.மகாராஷ்டிரா அரசு அதே ஆண்டு ராஜ் கபூர் விருது அளித்து கவுரவித்தது. அவர் விஜய் விருதுகள் 2010 விழாவில் இந்திய சினிமா சிறப்புக்கான செவாலியே சிவாஜி கணேசன் விருது பெற்றார்.

ரஜினிகாந்த் ஆசியாவீக் பத்திரிக்கை மூலம் தென் ஆசியாவில் மிக செல்வாக்கான நபர்களின் ஒருவர் அறிவிக்கப்பட்டது. அவர் 2010 ஆம் ஆண்டில் இந்தியவில் மிக செல்வாக்கு மிக்கவர்களில் ரஜினியும் ஒருவர் என இந்திய ஃபோர்பஸ் மூலம் அறிவிக்கப்பட்டது .இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மூலம் 2011 ல் என்டிடிவி மூலம் 'கடந்த பத்தாண்டின் பொழுதுபோக்கர் விருது ' வழங்கப்பட்டது.

நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

Year Title Role(s) Language Awards
1975 அபூர்வ ராகங்கள் அபஸ்வரம் தமிழ்
1976 மூன்று முடிச்சு தமிழ்
1977 16 வயதினிலே பரட்டை தமிழ்
புவனா ஒரு கேள்விக்குறி அரவிந்த் தமிழ்
1978 முள்ளும் மலரும் காளி தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
1979 நினைத்தாலே இனிக்கும் தீபக் தமிழ்
ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம் தமிழ்
1980 பில்லா பில்லா,
ராஜா
தமிழ்
முரட்டு காளை காளையன் தமிழ்
1981 தில்லு முல்லு இந்திரன் /
சந்திரன்
தமிழ்
1982 மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்
தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
1984 நல்லவனுக்கு நல்லவன் மாணிக்கம் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
1985 ஸ்ரீ ராகவேந்திரா ராகவேந்திர சுவாமி தமிழ்
1991 தளபதி சூர்யா தமிழ்
1992 அண்ணாமலை அண்ணாமலை தமிழ்
1993 எஜமான் வாணவராயன் தமிழ்
1995 பாட்சா மாணிக்கம் தமிழ்
முத்து முத்து,
எஜமான்
தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
1997 அருணாசலம் அருணாசலம் ,
வேதாசலம்
தமிழ்
1999 படையப்பா ஆறுபடையப்பன் தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
2005 சந்திரமுகி டாக்டர். சரவணன் ,
கிங் வேட்டையன்
தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
2007 சிவாஜி சிவாஜி ஆறுமுகம் தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
Nominated—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2010 எந்திரன் டாக்டர். வசீகரன்,
சிட்டி
தமிழ் Nominated—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2011 கோச்சடையான் (படப்பிடிப்பில் உள்ளது) தமிழ்

வெளி இணைப்புகள்[தொகு]

ரஜினி ரசிகரின் வலைத்தளம்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Manisarangam&oldid=3184445" இலிருந்து மீள்விக்கப்பட்டது