பயனர் பேச்சு:Limat2020

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Limat2020, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தினி (பேச்சு) 16:06, 10 மே 2019 (UTC)[பதிலளி]

வணக்கம், Limat2020!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 01:06, 13 மே 2019 (UTC)[பதிலளி]

May 2019[தொகு]

Information icon தயவு செய்து கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தகுதியற்ற பக்கங்களை விக்கிபீடியாவில் எழுதவோ தொகுக்கவோ வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். கட்டுரைகளை உருவாக்குவதற்குரிய மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியா:முதல் கட்டுரையை அல்லது விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) என்பதை வாசியுங்கள். நீங்கள் கட்டுரை உருவாக்கல் வழிகாட்டியைப் பயன்படுத்தியும் புதிய கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கலாம். தங்களது சோதனை முயற்சிகளை தங்களது பிரத்தியேக மணல்தொட்டியில் மேற்கொள்ளலாம். நன்றி. AntanO (பேச்சு) 17:00, 14 மே 2019 (UTC)[பதிலளி]

மேலதிக விபரம் தேவை.[தொகு]

முப்பது வருடங்களுக்கும் மேலாக பத்திரிகைகளில் எழுதி வரும், எழுத்துலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரின் பக்கம் உருவாக்க இயலாது என்றால் இங்கே எழுத்தாளர்களின் பக்கங்களைத் தீர்மானிப்பவர்கள் யார், அவர்களின் எழுத்துலகப் பரிச்சயம் என்ன என்பது குறித்த கேள்வி எழுகிறது. எதனால் இப்பக்கம் நீக்கப்படுகிறது, என்ன மாதிரியான சான்றுடன் பிற எழுத்தாளர் பக்கங்கள் இத்தளத்தில் உள்ளன என்ற விபரம் தெரிந்தால் நன்று. Limat2020 (பேச்சு) 17:38, 14 மே 2019 (UTC)[பதிலளி]

வணக்கம், விக்கிப்பீடியாவில் எழுத்தாளர்களை பற்றி எழுதலாம். ஆனால் அதற்கு முறையான சான்று இருந்தால் மட்டுமே விக்கியில் அனுமதிக்கப்படும். சமீக காலமாக எழுத்தாளர் என்ற பெயரில் பல கட்டுரைகள் விக்கியில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான சான்றுகளை இதுவரை யாரும் சேர்த்தபாடு இல்லை. விக்கியில் ஒரு கட்டுரை உருவாக்கினால் அதற்கு முறையான சான்றுகள் இணைப்பது மிகமிக அவசியம், அவ்வாறு சான்று இல்லாத கட்டுரை நீக்கம் செய்வது, விக்கியின் கொள்கையாகும்.

//எதனால் இப்பக்கம் நீக்கப்படுகிறது, என்ன மாதிரியான சான்றுடன் பிற எழுத்தாளர் பக்கங்கள் இத்தளத்தில் உள்ளன என்ற விபரம் தெரிந்தால் நன்று// சான்று என்றால் நடுநிலையோடு இருக்க வேண்டும். விக்கியில் தனியார் வலைதளம் (blog), முகநூல் பக்கம் (Facebook), டிவிட்டர் (Twitter) போன்ற வலைதளங்கள் விக்கியில் சான்றுகளாக இணைக்க அனுமதிக்கப்படமாட்டாது. நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:06, 15 மே 2019 (UTC)[பதிலளி]

விளக்கத்துக்கு நன்றி.[தொகு]

விளக்கத்துக்கு நன்றி. இந்த எழுத்தாளர் கல்கி வார இதழில் பரிசு பெற்ற கதைகளின் புகைப்படப்பிரதிகள் தரப்பட்டது. இவர் பங்களித்த திரைப்படத்தின் IMDb இணைப்புகள் வழங்கப்பட்டது. அப்படம் குறித்த தினமலர் விமர்சனத்தில் இவரது பெயரும் குறிப்பிடப்பட்ட இணைப்பு தரப்பட்டது. சமீபத்தில் இவர் குங்குமம் வார இதழில் எழுதிய சிறுகதைக்கான அப்பத்திரிகையின் இணையதளத்தில் உள்ள பக்கம் தரப்பட்டது. இவற்றில் எதையும் பொருட்படுத்தாமல் இப்பக்கம் நீக்கப்பட்டுள்ளது. இன்னொரு முறை நான் இப்பக்கத்தை உருவாக்க முயலப் போவதில்லை. வாழ்க தமிழுக்கான உங்கள் கலைக்களஞ்சிய சேவை. Limat2020 (பேச்சு) 02:07, 16 மே 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Limat2020&oldid=2815792" இலிருந்து மீள்விக்கப்பட்டது