உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2005ல் ஐ.பி.ஆர்.டி.யின் கடன்கள் மற்றும் ஐ.டி.ஏ யின் கடன்கள்

பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐ.பி.ஆர்.டி) (International Bank for Reconstruction and Development) என்பது உலக வங்கிக் குழுமத்தில் உள்ள ஐந்து வங்கிகளில் ஒன்றாகும். இரண்டாம் உலகப்போரில் பாதிப்படைந்த நாடுகளுக்கு உதவ உருவாக்கப்பட்ட இந்த வங்கி பிற்காலத்தில் வறுமை ஒழிப்பிற்கு உதவி வருகிறது. இறைமையுள்ள நாடுகளின் மூலம் நிதி ஆதரங்களைத் திரட்டிக்கொண்டு அந்நாடுகளின் உறுப்பினர்களால் நிர்வாகிக்கப்படுகிறது.

இவ்வங்கி அரசாங்கத்திற்கும், பொதுத்துறை நிறுவனத்திற்கு அரசு உத்திரவாதத்தின் அடிப்படையில் கடன் வழங்குகிறது.[1] 187 உறுப்பு நாடுகளின் மேம்பாட்டுக்காக கூட்டுறவு அடிப்படையில் இயங்குகிறது. உலக வங்கியின் பிணைப்பத்திரங்களை சர்வதேச சந்தையில் வெளியிட்டு திரட்டப்படும் நிதியே இதன் முக்கிய நிதி ஆதாரமாகும். இவ்வங்கியின் பங்குகள் வளர்ந்த நாடுகளிடம் இருப்பதாலும், உத்திரவாதத்துடன் கடன் வழங்குவதாலும் இதன் பிணைப்பத்திரங்கள் மிக அதிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மிககுறைந்த வட்டியில் மத்திய வருவாய் கொண்ட நாடுகளுக்கு நிதிக்கடன் வழங்கப்படுகிறது.

உறுப்பினர்கள்

[தொகு]

2010ல் சேர்ந்த துவாலு உட்பட 187 ஐக்கிய நாடுகள் அவை உறுப்பு நாடுகள் மற்றும் கொசோவோ இதன் உறுப்பினர்களாகும்.

உறுப்பினரல்லாத நாடுகள்: அண்டோரா, குக் தீவுகள், கூபா, லீக்டன்ஸ்டைன், மொனாக்கோ, நவூரு, நியுவே, வடகொரியா மற்றும் வத்திக்கான் நகர். இதர உறுப்பினரல்லாத நாடுகள் குறைந்த ஒப்புதலுடன் உள்ளன.

இதன் உறுப்பினர்களெல்லாம் அனைத்துலக நாணய நிதியத்திலும் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வரலாறு

[தொகு]

1944 ஜூலை 1 முதல் 22 வரை அமெரிக்க பிரிடன்வுட்ஸ் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் நாணைய மற்றும் நிதி மாநாட்டில் இவ்வங்கி தொடங்க முடிவெடுக்கப்பட்டு, 1945 டிசம்பர் 27ல் தொடங்கப்பட்டது. 1946 ஜூன் 25லிருந்து இதன் வணிக செயல்பாடுகள் தொடங்கியது, போருக்குப் பிந்திய புனரமைப்பிற்காக 1947 மே 9ல் $250மி பிரான்சு நாட்டிற்கு வழங்கப்பட்டதே இதன் முதல் பரிவர்தணையாகும். ஐ.பி.ஆர்.டி முக்கியமாக இரண்டாம் உலகப்போருக்குப் பின் புனரமைப்பிற்காக ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு உதவ தொடங்கப்பட்டது. மேலும் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவ முன்வந்தது. அரம்பக் காலத்தில், நெடுங்சாலைகள், விமான நிலையங்கள், மின் நிலையங்கள் போன்ற கட்டுமான வளர்ச்சிக்கு உதவி வந்தது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலா வருமானம் இதன் உச்ச வரம்பிற்கு மேல் அதிகரித்ததையடுத்து வளரும் நாடுகளுக்கு நிதியுதவி அளித்துவருகிறது

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]