பனி நிலம்
பனி நிலம் (Ice field) நீண்டு செல்லும் பாறை முகடுகள் அல்லது சிகரங்களைக் கொண்ட மலைத் தொகுதியில் உள்ள ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பள்ளத்தாக்கு பனிப்பாறைகள் (மலைப் பனிப்பாறைகள் அல்லது ஆல்பைன் பனிப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகிறது) ஆகும்..[1] இவை பெரும்பாலும் குளிர்ந்த காலநிலை மற்றும் உலகின் அதிக உயரத்தில் காணப்படுகின்றன. பனி நிலம் உருவாக மலைப்பொழிவு உள்ளது.
இது பெரும்பாலும் பனிக்கட்டி நிறைந்த சுமார் 50,000 கி.மீ2 குறைவான பரப்பளவை கொண்ட ஒரு பகுதி. பனிப்பொழிவுகள் வழியாக நீண்டு செல்லும் அடித்தள மலைப்பாறையின் உயரமான சிகரங்கள் நுனாடாக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. பனிக்கட்டிகள் ஆல்பைன் பனிப்பாறைகளை விட பெரியவை. பனி வயல்களின் நிலப்பரப்பு சுற்றியுள்ள நிலப்பரப்புகளின் வடிவத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பனிக்கட்டிகள் அவற்றின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளன. பனிக்கட்டியின் நிலவியல்பு அதனைச் சுற்றியுள்ள நிலவடிவங்கள் தீர்மானிக்கின்றன.
உருவாக்கம்
[தொகு]மிக அதிக அளவில் குவிந்திருந்த வெண்பனி, பல வருட அழுத்தம் மற்றும் உறைதலால் பனிக்கட்டியாக மாறிவிட்டதால் பனி நிலங்கள் உருவாகின. பனிப்படுக்கையை நிலவடிவங்கள் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் பனி நிலங்களை நிலவடிவங்கள் தீர்மானிக்கின்றன. குவிமாடம் இல்லாமல் இருப்பது பனி நிலங்களை பனிப்படுக்கையில் இருந்து வேறுபடுத்துகின்றது.[2]
உலகிலுள்ள சில பனிநிலங்கள்
[தொகு]ஆசியா
[தொகு]இமயமலை மற்றும் அல்தாய் மலைகளில் (நடு ஆசியக் குடியரசுகள் மற்றும் சீனாவிற்கும் இடையில் இம்மலை எல்லையாக இருக்கின்றது) பல பனி வயல்களும் உள்ளன. கோபி பாலைவனத்தின் வடக்கு முனையில் அமைந்துள்ள யோலின் ஆம் பகுதியில் ஒரு மலைப் பள்ளத்தாக்கில் எதிர்பாராத பனி நிலம் ஒன்று அமைந்துள்ளது.
ஓசியானியா
[தொகு]ஆத்திரேலியாவில் பனிநிலங்கள் இல்லை. நியூசிலாந்தில் சில பனி நிலங்கள் உள்ளன.[3][4][5]
ஐரோப்பா
[தொகு]ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரே மிகப்பெரிய பனி நிலம் நார்வேவில் உள்ளன.[6] ஆல்ப்ஸில் பல சிறிய பனி வயல்களும், சுவீடன், அபினைன், பிரனீசு மற்றும் பால்கன் ஆகிய பகுதிகளில் நிரந்தர பனிக்கட்டியின் சிறிய எச்சங்களும் உள்ளன.[7] 1913 இல் அந்தாலூசியாவிலுள்ள கோரல் டெல் வெலெட்டா பனிப்பாறை காணாமல் போனது. தற்போது பல்கேரியாவிலுள்ள ஸ்னெஸ்னிகா மட்டுமே கண்ட ஐரோப்பாவில் தென்கோடியில் எஞ்சியிருக்கும் நிரந்தர பனிப் புலம் ஆகும்
வட அமெரிக்கா
[தொகு]வட அமெரிக்காவில் ராக்கி மலையில் அமைந்துள்ள கொலம்பிய பனி நிலம் மிக முக்கியமான ஒன்றாகும்.
தென் அமெரிக்கா
[தொகு]தென் அமெரிக்காவில் இரண்டு முக்கிய பனி நிலங்கள் உள்ளன. ஒன்று சிலி நாட்டிலும் மற்றொன்று அர்கெந்தீனா. இரு நாடுகளும் இதை பகிர்ந்து கொள்கின்றன்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ H., Strahler, Alan (2013). Introducing physical geography. Wiley. p. 606. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-39620-9. இணையக் கணினி நூலக மைய எண் 816479914.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Summerfield (1999). [full citation needed]
- ↑ USGS SATELLITE IMAGE ATLAS OF GLACIERS OF THE WORLD, GLACIERS OF IRIAN JAYA, INDONESIA, AND NEW ZEALAND,GLACIERS OF NEW ZEALAND By TREVOR J.H. CHINN
- ↑ Map of the gardens
- ↑ Google map reference
- ↑ "Of glaciers and glacierets". hidden europe e-brief Issue 2011/35. 2011. http://www.hiddeneurope.co.uk/of-glaciers-and-glacierets. பார்த்த நாள்: December 10, 2011.