பனி நிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் படகோனிய பனி நிலம்
ஆர்டிங்கு பனி நிலம்

ஒரு பனி நிலம் (Ice field) என்பது உலகின் குளிர்ச்சியான காலநிலை மற்றும் அதிக உயரமான இடங்களில் போதுமான மழைப்பொழிவை.[1] உடைய, பெரும்பாலும் பனிகட்டி நிறைந்த சுமார் 50,000 கி.மீ2 குறைவான பரப்பளவை கொண்ட பகுதி ஆகும். இது பள்ளத்தாக்கு பனிமலைகள் சேர்த்திணைத்த விரிவான பிரதேசம் ஆகும், இவைகிளில் உயரமான சிகரம் நுனாடக்-காக உயர்ந்து நிற்கிறது. பனி நிலங்கள் ஆல்ப் பனிமலைகளை விட மிக பெரியவை பனிக்கட்டிப்படலத்தை விட மிக சிறியவை மற்றும் பனிப்படுக்கையின் பரப்பளவிற்கு ஒப்பானவை. பனிக்கட்டியின் நிலவியல்பு அதனைச் சுற்றியுள்ள நிலவடிவங்கள் தீர்மானிக்கின்றன.

உருவாக்கம்[தொகு]

மிக அதிக அளவில் குவிந்திருந்த வெண்பனி, பல வருட அழுத்தம் மற்றும் உறைதலால் பனிக்கட்டியாக மாறிவிட்டதால் பனி நிலங்கள் உருவாகின. பனிப்படுக்கையை நிலவடிவங்கள் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் பனி நிலங்களை நிலவடிவங்கள் தீர்மானிக்கின்றன. குவிமாடம் இல்லாமல் இருப்பது பனி நிலங்களை பனிப்படுக்கையில் இருந்து வேறுபடுத்துகின்றது.[2]

உலகின் பனிநிலங்கள்[தொகு]

ஆசியா[தொகு]

இமயமலை மற்றும் அட்லை மலைகளில் (மத்திய ஆசிய குடியரசுகள் மற்றும் சீனாவிற்கு இடையில் இம்மலை எல்லையாக இருக்கின்றது) உள்ள பல்வேறு பனி நிலங்கள். கோபி பாலைவனத்தில் உள்ள யோலின் ஆம் என்ற மலைப் பள்ளத்தாக்கு, என்பது ஒரு எதிர்பார்க்காத ஒரு பனி நிலம் ஆகும்.

ஓசியானியா[தொகு]

ஆத்திரேலியாவில் பனிநிலங்கள் இல்லை. நியூசிலாந்தில் சில பனி நிலங்கள் உள்ளன.[3]

ஐரோப்பா[தொகு]

ஐரோப்பாவின் தலை நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரே மிகப்பெரிய பனி நிலம் நார்வேவில் உள்ளன.[4]

வட அமெரிக்கா[தொகு]

வடஅமெரிக்காவில் ராக்கி மலையில் அமைந்துள்ள கொலம்பிய பனி நிலம் மிக முக்கியமான ஒன்றாகும்.

தென் அமெரிக்கா[தொகு]

தென் அமெரிக்காவில் இரண்டு முக்கிய பனி நிலங்கள் உள்ளன. ஒன்று சிலி நாட்டிலும் மற்றொன்று சிலி அர்சண்டினா, இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_நிலம்&oldid=3219668" இலிருந்து மீள்விக்கப்பட்டது