உள்ளடக்கத்துக்குச் செல்

பதிமூன்றாம் அல்பான்சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதிமூன்றாம் அல்பான்சோ
Alfonso XIII
கௌலக்கி எடுத்த ஒளிப்படம், 1916
எசுப்பானிய மன்னர்
ஆட்சிக்காலம்17, மே, 1886- 14, ஏப்ரல், 1931
அரியாசனம்17 மே 1902
முன்னையவர்நான்காம் அல்பான்சோ
பின்னையவர்Niceto Alcalá-Zamora
(as President of Spain)
பிரதிநிதிMaria Christina (1886–1902)
பிறப்பு(1886-05-17)17 மே 1886
மாட்ரிட்டின் அரண்மனை, மத்ரித், எசுபானிய இராச்சியம்
இறப்பு28 பெப்ரவரி 1941(1941-02-28) (அகவை 54)
உரோம், இத்தாலி இராச்சியம்
புதைத்த இடம்
துணைவர்விக்டோரியா யூஜீனியா
குழந்தைகளின்
#Legitimate and illegitimate children
பெயர்கள்
மரபுBourbon-Anjou
தந்தைAlfonso XII of Spain
தாய்Maria Christina of Austria
மதம்Catholicism
கையொப்பம்பதிமூன்றாம் அல்பான்சோ Alfonso XIII's signature

பதிமூன்றாம் அல்பான்சோ (Alfonso XIII[a] ( 17, பிப்ரவரி 1886 - 28 மே 1941 ; எல் ஆப்பிரிக்கோ அல்லது ஆப்பிரிக்காவாக, [b] என்றும் அழைக்கபடுகிறார்) என்பவர் எசுப்பானிய மன்னராக 17 மே 1886 அன்று பதவி ஏற்றார். 14 ஏப்ரல் 1931 அன்று எசுப்பானியா குடியரசாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவி இழந்தார். இவர் பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்பே இவர் தந்தை பனிரெண்டாம் அல்பான்சா இறந்ததால் இவர் பிறந்தவுடனேயே எசுப்பானியாவின் மன்னரானார். 1902ஆம் ஆண்டு இவரது பதினாறாம் வயதில் இவர் முழு அதிகாரத்தை ஏற்றார். அதுவரை இவரின் தாயார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மரியா கிறிஸ்டினா அரசப் பிரதிநிதியாக இருந்தார்.

அல்பான்சாவின் வளர்ப்பு மற்றும் பொதுத் தோற்றம் படைத்துறை உடைமை அலுவலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டது. இவர் பெரும்பாலும் தன்னை படைத்துறையில் ஆர்வமுள்ள ஒரு மன்னராக காட்டிக் கொண்டார். [1] 1898 பேரழிவு என்று அழைக்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது திறமையான ஆட்சி தொடங்கியது. பல்வேறு சமூகப் பிரிவுகள் தேசிய மீளுருவாக்கம் குறித்த எதிர்பார்ப்புகள் இவர் ஆட்சியில் உரு கொண்டன. [2] இவரது காலத்தின் மற்ற ஐரோப்பிய மன்னர்களைப் போலவே, முக்கிய அரசியல் பாத்திரத்தை வகித்தார். இவரது அரசியலமைப்பு நிறைவேற்று அதிகாரங்களை மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தினார். [3] 1906 இல் விக்டோரியா அரசியின் பேர்த்தியான விக்டோரியா யூஜீனியாவை அல்பான்சோ மணந்துகொண்டார். இவரது திருமண நாளன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து இவர் காயமின்றி தப்பினார்.

இவர் ஆட்சிக் காலத்தில் நாட்டில் குழப்பங்கள் எழுந்தன. இவரைக் கொல்ல எட்டு முறை முயன்ற்சிகள் மேற்கொள்ளபட்டன. 1923 இல் இவர் நாட்டின் ஆட்சியை பிரீமா டெ ரீவெரா என்னும் படைத்துறைச் சர்வாதிகாரி வசம் ஒப்புவித்தார். 1931 இல் எசுப்பானியாவின் குடியரசு ஆதரவாளர்கள் முடியாட்சியைக் கவிழ்த்து, மன்னரை நாடுகடத்தி குடியரசை நிறுவினர். எசுபானிய நாடாளுமன்றம் அல்பான் சோவை தேசத் துரோகி என்று அறிவித்தது. நாடுகடத்தபட்ட இம்மன்னன் 1941 இல் ரோம் நகரில் இறந்தார்.

வெளி இணைப்புகள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. எசுப்பானிய மொழிகளில், இவரது பெயர்:
  2. Due to his active involvement and support of the Spanish colonisation effort in Africa

குறிப்புகள்

[தொகு]
  1. Harris, Carolyn (2020). "Raising Heirs to the Throne in Nineteenth Century Spain: The Education of the Constitutional Monarchy". Royal Studies Journal 7 (2): 178. doi:10.21039/rsj.270. 
  2. Javier Moreno Luzón (2013). "Alfonso el Regenerador. Monarquía escénica e imaginario nacionalista español, en perspectiva comparada (1902-1913)". Hispania (Madrid: Editorial CSIC) LXXIII (244): 319. doi:10.3989/hispania.2013.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0018-2141. https://hispania.revistas.csic.es/index.php/hispania/article/view/398/400. 
  3. Moreno Luzón 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிமூன்றாம்_அல்பான்சோ&oldid=3672719" இலிருந்து மீள்விக்கப்பட்டது