உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாவது எசுப்பானியக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுப்பானியக் குடியரசு
República Española
1931–1939
கொடி of எசுப்பெயின்
கொடி
சின்னம் of எசுப்பெயின்
சின்னம்
குறிக்கோள்: "Plus Ultra"  (இலத்தீன்)
"இன்ன்னும் அப்பால்"
நாட்டுப்பண்: El Himno de Riego
தலைநகரம்மாட்ரிட்
பேசப்படும் மொழிகள்எசுப்பானியம்
அரசாங்கம்குடியரசு
குடியரசுத் தலைவர் 
• 1931–1936
Niceto Alcalá-Zamora
• 1936–1939
Manuel Azaña
சட்டமன்றம்பேராளர் அவை
வரலாற்று சகாப்தம்உலகப் போர்களுக்கு இடையிலான காலப்பகுதி
ஏப்ரல் 14 1931
• எசுப்பானிய உள்நாட்டுப் போர்
1936–1939
• நாட்டுக்கு வெளியிலமைந்த குடியரசு கலைக்கப்பட்டது
சூலை 15 1939
நாணயம்எசுப்பானிய பெசேட்டா
முந்தையது
பின்னையது
Spain under the Restoration
பிராங்கோவின் கீழ் எசுப்பெயின்

இரண்டாவது எசுப்பானியக் குடியரசு (Second Spanish Republic) என்பது 1931, ஏப்ரல் 14 முதல் 1939 ஏப்ரல் 1 வரையான காலப்பகுதியில் எசுப்பெயினில் இருந்த அரசைக் குறிக்கும். 1931 ஆம் ஆண்டில் நகரப் பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல்களில் குடியரசுவாதிகள் பெரும்பான்மையாக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அப்போதைய எசுப்பானிய மன்னரான 13ம் அல்போன்சோ நாட்டைவிட்டு வெளியேறியதன் பின் இந்த அரசு பதவிக்கு வந்தது. எசுப்பானிய உள்நாட்டுப் போரின் இறுதியில், 1939 ஆம் ஆண்டு, பிரான்சிசுக்கோ பிராங்கோவின் தலைமையிலான தேசியவாதப் படைகளிடம் குடியரசுப் படை தோல்வியடையும் வரை இது நீடித்தது.