பணச் சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதித்துறையில் பணச் சந்தை என்பது குறுகிய கால கடன் வாங்க மற்றும் கொடுக்க இருக்கும் உலக நிதிச் சந்தையாகும். இது உலக நிதி அமைப்பிற்கு குறுகிய-கால நிதிப் புழக்கத்தைத் தருகிறது. பணச் சந்தையானது குறுகிய-கால கடன்களை குறிப்பாக அரசு பத்திரங்கள், வணிகப் பத்திரங்கள் மற்றும் வங்கிகளின் ஒப்பந்தப்பத்திரங்கள் போன்றவற்றை வாங்கவும் விற்கவும் உள்ள இடமாகும்.

மேலோட்டப் பார்வை[தொகு]

பணச் சந்தையானது நிதி நிறுவனங்கள் மற்றும் பணம் அல்லது கடன் வழங்க அல்லது பெற விரும்பும் முகவர்களைக் கொண்டுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் குறுகிய காலத்திற்கு, வழக்கமாக 13 மாத அளவுக்குரிய கடன்களை வாங்கவும் கொடுக்கவும் செய்கிறார்கள். பணச் சந்தை குறுகிய காலத்திற்கு "பத்திரம்" என பொதுவாக அழைக்கப்படும் நிதியாவணங்களைக் கொண்டு வணிகம் செய்கிறது. இது நீண்ட கால நிதிக் கருவிகளான கடன் ஈட்டுறுதிப் பத்திரங்களையும் பங்குப் பத்திரங்களையும் கொண்டு மூலதனச் சந்தைக்கு முரணானதாக உள்ளது.

வணிகப் 'பத்திரங்களையும்' மறுஒப்பந்தப்பத்திரங்களையும் அது போன்ற பிற பத்திரங்களையும் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று கடன் வாங்கும் மற்றும் கொடுக்கும் வங்கிகள் பணச் சந்தையின் மையமாக உள்ளன. இத்தகைய ஒப்பந்தப்பத்திரங்கள் சரியான கால அளவு மற்றும் நாணயம் இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்காக பெரும்பாலும் London Interbank Offered Rate (LIBOR) அடிப்படையில் குறிப்புத் தர நிர்ணயம் செய்யப்படுகின்றன (அதாவது குறிப்பாகக் கொண்டு விலையிடப்படுகின்றன).

GMAC போன்ற நிதி நிறுவனங்கள் வழக்கமாக சொத்துகளால் ஆதரிக்கப்படும் வணிகப் பத்திரங்களை (ABCP) அதிக அளவில் வழங்குவதன் மூலம் தங்களுக்கான நிதியைத் திரட்டிக்கொள்கின்றன. இவை தகுதிவாய்ந்தச் சொத்துகளை ABCP நிதி அமைப்புகளில் கடனீடாக வைப்பதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. வாகன கடன்கள், கடன் அட்டை வரவுகள், வீடு/வணிக அடமான கடன்கள், அடமான ஆதரவு கொண்ட கடனீடுகள் மற்றும் அது போன்ற நிதிக் கருவிகள் போன்றவை தகுதி வாய்ந்த சொத்துக்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகும். வலுவான வரவுத் தரங்கள் கொண்ட ஜெனரல் எலக்ட்ரிக் (General Electric) போன்ற குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்கள் தங்கள் சொந்தக் கடன்கள் மீதே வணிகப் பத்திரங்களை வெளியிடுகின்றன. பிற பெரிய நிறுவனங்கள் வணிகப் பத்திரம் நிறுவனங்களின் மூலமாக தங்கள் சார்பாக வணிகப் பத்திரங்களை வழங்க வங்கிகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன.

அமெரிக்க ஒன்றியத்தில் மைய, மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் அனைத்தும் தங்கள் நிதி தேவைகளுக்காக பத்திரங்களை வழங்குகின்றன. மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் நகராட்சிப் பத்திரங்களை வெளியிடுகின்றன, அமெரிக்க அரசின் கருவூலம் பொதுக் கடன்களை அடைக்க கருவூலப் பத்திரங்களை வெளியிடுகிறது.

  • வர்த்தக நிறுவனங்கள் அந்நிய சரக்கு/சேவை அளிப்பாளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியின் ஒப்பந்த பத்திரங்களை பெரும்பாலும் வாங்குகின்றனர்.
  • சில்லறை மற்றும் நிறுவனஞ்சார்ந்த பணச் சந்தை நிதிகள்
  • வங்கிகள்
  • மைய வங்கிகள்
  • பண மேலாண்மைத் திட்டங்கள்
  • அதிக இலாபம் தரும் பத்திரங்களை வாங்கி குறைந்த விலைப் பத்திரங்களை விற்க முயற்சிக்கும் வர்த்தக ABCP அமைப்புகள்.
  • வர்த்தக வங்கிகள்

வரலாறு[தொகு]

பணச் சந்தை உருவரலாறு[தொகு]

விரிவாக்கம் தேவைப்படுகின்ற அனைத்து கட்டுரைகள்}}

பொதுவான பணச் சந்தை ஆவணங்கள்[தொகு]

  • வங்கிகளின் ஒப்புதல் பத்திரம்- வங்கியினால் வெளியிடப்படும் ஓர் ஆவணம். இது காசாளரின் காசோலைப் போன்ற பயனுறுதியுள்ளதும் பணமளிக்க ஒப்புக்கொள்ளப்படுவதுமாகும்.
  • வைப்புச் சான்றிதழ்கள்- ஒரு வங்கியில் குறிப்பிட்ட முதிர்வு தேதியுடன் கால வைப்பு செய்யப்பட்டது; அதிக -பண வகைக் கொண்ட வைப்புச் சான்றிதழ்கள் முதிர்வு தேதிக்கு முன்பாகவே விற்பனை செய்யப்படலாம்.
  • மறுவாங்கல் ஒப்பந்தங்கள்-குறுகிய கால கடன்கள் - பொதுவாக இருவாரங்களுக்கானது மற்றும் பெரும்பாலும் ஒரு நாளுக்கானது - இவை ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட விலையில் மீண்டும் வாங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்கீழ் முதலீட்டாளர் ஒருவருக்கு பங்குகளை விற்பதன் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
  • வணிகப் பத்திரம்- காப்புறுதி அளிக்கப்படாத உறுதியளிப்பு பத்திரங்கள் குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட முதிர்வு ஒரு நாள் முதல் 270 நாட்கள் வரை வழக்கமாக முகப்பு விலையிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்டு விற்கப்படும்.
  • யூரோ டாலர் வைப்பு- அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள ஒரு வங்கி அல்லது வங்கியின் கிளையில் அமெரிக்க டாலர்களில் வங்கிகளில் செய்யப்பட்ட வைப்புத்தொகை.
  • மைய முகமையின் குறுகிய கால பங்கு பத்திரங்கள் - (அமெரிக்காவில்). ஃபார்ம் கிரெடிட் சிஸ்டம் (Farm Credit System), மைய கடன் வங்கிகள் மற்றும் ஃபெடரல் நேஷனல் மார்ட்கேஜ் அசோசியேஷன் போன்ற அரசு நிதி உதவி செய்யும் நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால கடனீடுகள்.
  • அரசு நிதிகள்- (அமெரிக்காவில்) மைய இருப்பில் உள்ள வங்கிகளிலும் பிற வைப்புத் தொகை நிறுவனங்களிலும் உள்ள வட்டி ஈட்டித்தரும் வைப்புத் தொகைகள்; இவை வழக்கமாக ஒரு நாள் அடிப்படையில் நிறுவனங்கள் வாங்கவோ அல்லது கொடுக்கவோ உடனடியாக கிடைப்பவையாகும். அவை மைய நிதி வீதத்தில் கொடுக்கப்படுகின்றன.
  • நகராட்சி பத்திரங்கள்- (அமெரிக்காவில்) வரி அல்லது பிற வருவாய் வகைகளை எதிர்பார்த்து நகராட்சிகளால் வெளியிடப்படும் குறுகிய கால பத்திரங்கள்.
  • கருவூல உறுதிச்சீட்டு- அரசு வெளியிடும் மூன்று முதல் பன்னிரெண்டு மாதங்கள் வரையிலான முதிர்வு கொண்ட குறுகிய கால கடன் பொறுப்புப் பத்திரங்கள். அமெரிக்காவிற்கு கருவூல உறுதிச்சீட்டுக்கள் என்பதைக் காண்க.
  • பண நிதிகள் - குறுகிய முதிர்வுக் காலமும் அதிக தரமும் கொண்ட முதலீடுகளின் தொகுப்பு. இது சில்லறை அல்லது முதலீட்டு நிறுவனங்களின் சார்பாக பணச் சந்தை பங்கு பத்திரங்களை வாங்குகிறது.
  • அந்நிய செலாவணி பரிமாற்றுக்கள் - குறிப்பிட்ட ஒரு தேதியில் நாணயங்களை மாற்றிக் கொள்வதும் அதேபோல முன் தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் மறு பறிமாற்றம் செய்வதுமாகும்.

மேலும் காண்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணச்_சந்தை&oldid=3531998" இலிருந்து மீள்விக்கப்பட்டது