முன்பேர ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதியியலில் எதிர்கால ஒப்பந்தம் என்பது எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு தரநிலையான அளவு மற்றும் தரம் கொண்ட ஒரு குறிப்பிட்ட சொத்தை குறிப்பிட்ட விலைக்கு (எதிர்கால விலை ) வாங்க அல்லது விற்க இரு தரப்பினரிடையே செய்துகொள்ளப்படும் தரநிலையாக்கப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலப் பரிவர்த்தனையகத்தில் விற்கப்படுகின்றன. எதிர்கால ஒப்பந்தங்கள் பங்குகள், பங்குப் பத்திரங்கள், உரிமைகள் அல்லது பற்றாணைகள் போன்று "நேரடி" கடனீடுகள் அல்ல. இருப்பினும் வழித்தோன்றல் ஒப்பந்தங்களே ஆனாலும் அவை கடனீடுகளே. அதில் குறிப்பிடப்பட்ட சொத்தை எதிர்காலத்தில் வாங்க ஒப்புக்கொள்ளும் தரப்பினர் நெடுநிலை (long position) வகிப்பார், அதே போல் எதிர்காலத்தில் அச்சொத்தை விற்க ஒப்புக்கொள்ளும் தரப்பினர் குறுநிலை (short position) வகிப்பார்.

விலையானது, ஒப்பந்தம் வாங்கப்படும் அல்லது விற்கப்படும் தேதியில் பரிவர்த்தனையகத்தில் போட்டியிடும் வாங்குதல் மற்றும் விற்றல் ஆணைகளின் தேவை மற்றும் வழங்கல் சக்திகளிடையே நிலவும் அப்போதைய சமநிலையால் நிர்ணயிக்கப்படுகிறது.

பல நிகழ்வுகளில் ஓர் எதிர்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் சொத்து வழக்கமான "பொருளாக" இல்லாமல் இருக்கலாம். அதாவது நிதியியலிலான எதிர்காலத்தில் ஒப்பந்ததில் குறிப்பிடப்படும் சொத்து, நாணயம், கடனீடுகள் அல்லது நிதி பத்திரங்கள் மற்றும் பங்குக் குறியீடுகள் மற்றும் வட்டிவீதங்கள் போன்ற புலப்படா சொத்துகளாகவும் இருக்கலாம்.

எதிர்காலத் தேதியானது வழங்கல் தேதி அல்லது இறுதிக் கணக்கு முடித்தல் தேதி என அழைக்கப்படுகிறது. பரிவர்த்தனையகத்தில் ஒரு நாளின் வர்த்தக நேர அளவின் இறுதியில் உள்ள எதிர்கால ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வமான விலை பரிவர்த்தனையகத்திலான அன்றைய வணிகத்திற்கான கணக்குத் தீர்வு விலை என அழைக்கப்படுகிறது.[1]

முன்னோக்கு ஒப்பந்தம் என்பது இதனுடன் நெருங்கிய தொடர்புடைய ஒப்பந்தமாகும். இவை இரண்டும் ஒரு சில அம்சங்களில் வேறுபடுகின்றன. எதிர்கால ஒப்பந்தங்களும் முன்னோக்கு ஒப்பந்தங்களும் பெரிதும் ஒத்தவையே. ஆனால் எதிர்கால ஒப்பந்தங்கள் தரநிலையாக்கப்பட்ட சொத்துகளின் மீதே வரையறுக்கவும் வர்த்தகமும் செய்யப்படுகின்றன என்பது மட்டுமே இவை இரண்டுக்குமுள்ள வேறுபாடாகும்.[2] முன்னோக்கு ஒப்பந்தங்களைப் போலன்றி, எதிர்கால ஒப்பந்தங்களில் வழக்கமாக வரம்பளவுத் தேவைகளில் இடைக்கால கணக்குத் தீர்த்தல்கள் அல்லது “மெய் உயர்வுகள்” இருக்கும். இதில் இரு தரப்பினரும் இலாபத்தில் இரு தரப்பினருக்கும் கடனீடாக அமையும் வகையில் கூடுதல் சொத்துகள் எதனையும் பரிமாற்றம் செய்துகொள்வதில்லை, அது மட்டுமின்றி ஒப்பந்தம் திறக்கப்படும்போது மட்டுமே அறியாத மொத்த இலாபம் அல்லது நட்டம் தெரியும்.

எதிர்கால ஒப்பந்தம் அதன் ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கிணங்க குறிப்பிட்ட அந்த வழங்கும் வழங்கலை ஏற்கும் பொறுப்பை வழங்குகிறது. இதில் ஒரு விருப்பத் தெரிவு வாங்குபவருக்கு உரிமையை வழங்குகிறதே தவிர அந்த விருப்பத் தெரிவின் விற்பனையாளர் அதற்கு முன்பு வைத்திருந்த நிலையை நிறுவும் பொறுப்பை அல்ல . வேறொரு விதத்தில் கூறுவதென்றால், விருப்பத் தெரிவுகள் ஒப்பந்தத்தின் உரிமையாளர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தலாம் ஆனால் ஓர் "எதிர்கால ஒப்பந்தத்தின்" இரு தரப்பினரும் கணக்குத் தீர்த்தல் தேதி அன்று ஒப்பந்த விதிமுறைகளை நிறைவு செய்ய வேண்டும் . விற்பவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்தை வாங்குபவருக்கு வழங்குகிறார் அல்லது ரொக்கத்தின் மூலமாகக் கணக்குத் தீர்க்கப்படும் எதிர்கால ஒப்பந்தமெனில், நட்டத்தைக் கொண்டிருந்த எதிர்கால வர்த்தகரிடமிருந்து இலாபம் பெற்ற தரப்பினருக்கு ரொக்கம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. எதிர்கால பொறுப்பு நிலையை வகிக்கும் ஒரு தரப்பினர் கணக்குத் தீர்த்தல் தேதிக்கு முன்பு பொறுப்பிலிருந்து பின்வாங்குவதற்கு ஒரு நீண்ட பொறுப்புநிலையை விற்பதன் மூலம் அல்லது ஒரு குறுகிய பொறுப்பு நிலையை விற்பதன் மூலம் தனது பொறுப்பு நிலையைத் தொடங்கலாம்.

எதிர்காலங்களின் ஒப்பந்தங்கள் அல்லது வெறும் எதிர்காலங்கள் (futures), (எதிர்காலம் (future) அல்லது எதிர்கால ஒப்பந்தம் அல்ல) பரிவர்த்தனையக வர்த்தகம் செய்யப்படும் வழித்தோன்றல் நிதிக் கருவிகளாகும். பரிவர்த்தனையகத்தின் கணக்குத் தீர்வு மையம் (clearing house) அனைத்து ஒப்பந்தங்களிலும் எதிர்த்தரப்பினராக செயல்பட்டு வரம்பெல்லை தேவைகளை அமைத்து முக்கியமாக கணக்குத் தீர்த்தலுக்கான ஒரு இயங்குமுறையையும் வழங்குகிறது.[3]

தோற்றம்[தொகு]

அரிஸ்டாட்டில் (Aristotle) தேல்ஸ் (Thales) கதையைக் கூறியுள்ளார். அவர் மிலேட்டஸைச் (Miletus) சேர்ந்த ஒரு ஏழை தத்துவவாதி ஆவார். அவர் ஒரு "நிதி சாதனத்தை உருவாக்கினார், அதில் உலகளாவிய பயன்பாட்டின் தத்துவம் சம்பந்தப்பட்டதாகும்." தேல்ஸ் தனது முன்கணிக்கும் திறனைப் பயன்படுத்தி விதிவிலக்காக அமையும் விதத்தில் அடுத்த இலையுதிர் காலத்தில் ஆலிவ் அறுவடை மிகவும் சிறப்பாக இருக்கும் என ஊகித்தார். அவரது முன்கணிப்பில் நம்பிக்கையுடன் இருந்த அவர் உள்ளூர் ஆலிவ் ஆலை உரிமையாளர்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டார், அதன்படி அறுவடை தயாரானதும் பிரத்யேகமாக அவர்களது ஆலிவ் ஆலைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கு உத்தரவாதமளிக்கும் விதத்தில் தனது பணத்தை முன்பணமாக செலுத்தினார். அறுவடை எதிர்காலத்தில் நடக்கப்போவதாக இருந்ததாலும் அறுவடை சிறப்பாக அமையுமா அல்லது குறைவாக இருக்குமா என்பதை யாரும் அறியமாட்டார்கள் என்பதாலும் குறைந்த விளைச்சலினால் வரும் ஆபத்தைத் தடுக்கவே ஆலிவ் ஆலை உரிமையாளர்கள் நினைத்தனர் என்பதாலும் தேல்ஸ் வெற்றிகரமாக குறைந்த விலைகளுக்கு பேரத்தை முடித்தார். முதல் அறுவடைக் காலம் வந்ததும் ஒரே நேரத்தில் பல ஆலைகள் தேவைப்பட்டன, அதனால் அவர் தான் விரும்பிய விலைக்கு அவற்றை வாடகைக்கு வழங்கி பெரும்பணம் ஈட்டினார்.[4]

1730களில் ஜப்பானில் சாமுராயின் (samurai) தேவைகளைப் பூர்த்தி செய்ய நடைபெற்ற டோஜிமா அரிசி பரிவர்த்தனையே (Dōjima Rice Exchange) முதல் எதிர்கால பரிவர்த்தனை. அதன்படி முதலில் பணத்திற்கு பதிலாக அரிசியை வழங்கிவிட்டு பின்னர் சில குறைந்த விளைச்சல்களுக்குப் பிறகு நாணயமாக மாற்றப்பட்டது.

தர நிர்ணயம்[தொகு]

எதிர்கால ஒப்பந்தங்கள் மிகவும் தரநிலையாக்கப்பட்டதாக இருப்பதால் அவற்றின் எளிதில் மாறும் தன்மை உறுதியானதாக உள்ளது, அவை பின்வருபவற்றைக் குறிப்பிடுகின்றன:

 • குறிப்பிடப்படும் சொத்து அல்லது நிதிக் கருவி. இது கச்சா எண்ணெய் முதல் குறுகிய கால வட்டிவீதம் வரையிலுள்ள எதுவாகவும் இருக்கலாம்.
 • கணக்குத் தீர்த்தலின் வகை ரொக்க கணக்குத் தீர்த்தலாகவோ அல்லது பௌதிக முறையாகவோ இருக்கலாம்.
 • ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் அளவு மற்றும் அலகுகள். இது பத்திரங்களின் உத்தேச அளவு, எண்ணெய் பேரல்களின் குறிப்பிட்ட எண்ணிக்கை, வெளிநாட்டு நாணயங்களின் அலகுகள், குறுகிய கால வட்டி வீதம் வர்த்தகம் செய்யப்படும் உத்தேச அளவிலான வைப்புநிதிகளாக இருக்கலாம்.
 • எதிர்கால ஒப்பந்தம் குறிப்பிடப்படும் நாணயம்.
 • வழங்கப்படும் தயாரிப்பின் தரம் (grade). பத்திரங்கள் பயன்படுத்தப்பட்டால், எந்தப் பத்திரங்கள் வழங்கப்படும் என்பதை இது குறிக்கும். பௌதிக பொருள்கள் பயன்படுத்தப்பட்டால், வழங்கப்படுவதாகக் குறிக்கப்படும் பொருள்களின் தரத்தை மட்டுமின்றி வழங்கப்படும் விதம் மற்றும் இடத்தையும் இது குறிக்கும். எடுத்துக்காட்டுக்கு, NYMEX லைட் இனிப்பு கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தில் ஏற்கக்கூடிய கந்தக அளவு மற்றும் API தன்னீர்ப்பு அதுமட்டுமின்றி விலையிடல் புள்ளி ஆகியவையும் அத்துடன் வழங்கப்படும் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
 • வழங்கப்படும் மாதம்.
 • கடைசி வர்த்தகத் தேதி.
 • குறைந்தபட்ச அனுமதிக்கத்தக்க விலை ஏற்ற இறக்கமான சரக்கு பரிமாற்ற முறை போன்ற பிற விவரங்கள்.

வரம்பெல்லை[தொகு]

美國期貨變遷
美國期貨變遷

பரிவர்த்தனையகத்தின் வரவு ஆபத்தைக் குறைக்க வர்த்தகர்கள் ஒரு வரம்பெல்லை அல்லது செயல்திறன் பத்திரத்தை அமைக்க வேண்டும். வழக்கமாக அது ஒப்பந்த மதிப்பின் 5%-15% மதிப்புடையதாக இருக்கும்.

வர்த்தகர்களின் எதிர்த்தரப்பு ஆபத்தைக் குறைக்க ஒழுங்குபடுத்தப்பட்ட எதிர்கால ஒப்பந்தப் பரிவர்த்தனையகங்களில் வர்த்தகம் செய்யப்படும் வர்த்தகங்களுக்கு கணக்குத்தீர்வு மையங்கள் உத்தரவாதமளிக்கின்றன. ஒவ்வொரு விற்பனையாளருக்கும் கணக்குத்தீர்வு மையமே வாங்குபவராகவும் ஒவ்வொரு வாங்குபவருக்கும் விற்பனையாளருமாக அமைகிறது. இதனால் எதிர்த்தரப்பினர் கணக்குத்தீர்த்தல் மையத்திற்கு பணம் செலுத்தத் தவறுவதன் ஆபத்து மையத்திற்கே உடையதாகிறது. இதனால் வர்த்தகர்கள் தங்கள் எதிர்த்தரப்பினருக்கு நிலுவை ஆபத்தை ஏற்படுத்தாமல் தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது.

சில சந்தர்ப்பங்களில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் பொருள்களின் உரிமையாளர்களான நிதி பாதுகாப்பாளர்களுக்கு அல்லது பொறுப்பு நிலையை சமாளிக்கும் ஒப்பந்தங்களைத் தொடங்கும் பரவல் வர்த்தகர்களுக்கு (spread traders) வரம்பெல்லைத் தேவைகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன.

கணக்கத்தீர்வு வரம்பெல்லை - இவை நிறுவனங்கள் அல்லது பெருநிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் திறந்த நிலை எதிர்கால ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பத் தெரிவு ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் நிதியியல் பாதுகாப்பு அம்சங்களாகும். கணக்குத்தீர்த்தல் வரம்பெல்லைகள் - இவை வாடிக்கையாளர் வரம்பெல்லையிலிருந்து வேறுபட்டவையாகும். ஏனெனில் எதிர்கால மற்றும் விருப்பத்தெரிவு ஒப்பந்தங்களின் தனிப்பட்ட வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் தரகர்களிடம் முன்பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

வாடிக்கையாளர் வரம்பெல்லை - எதிர்கால ஒப்பந்தத் தொழிற்துறையில் எதிர்கால ஒப்பந்தங்களின் வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இரு தரப்பினரும் மற்றும் விருப்பத் தெரிவு ஒப்பந்தங்களின் விற்பனையாளர்களும் ஒப்பந்தத்திலுள்ள விதிமுறகளைப் பூர்த்தி செய்வார்கள் என்பதற்கான உறுதியளிக்கத் தேவைப்படும் நிதியியல் உத்தரவாதங்களாகும். வாடிக்கையாளர் வரம்பெல்லை கணக்குகளை கவனித்துக்கொள்வதற்கு எதிர்கால ஒப்பந்த தரகு வத்தகர்களே பொறுப்பாவார்கள். வரம்பெல்லைகள் சந்தை ஆபத்து மற்றும் ஒப்பந்த மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. இது செயல்திறன் பத்திர வரம்பெல்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.

தொடக்க வரம்பெல்லை என்பது எதிர்கால ஒப்பந்தங்களின் பொறுப்பு நிலைகளைத் தொடங்க தேவைப்படும் சமப்பங்காகும். இது செயல்திறன் பத்திரத்தின் ஒரு வகையாகும். அதிகபட்ச பாதிக்கப்படுமளவானது தொடக்க வரம்பெல்லையின் அளவின் வரம்புக்குட்பட்டதன்று, இருப்பினும் தொடக்க வரம்பெல்லைத் தேவையானது ஒரு வர்த்தக நாளிலான மதிப்பீடு செய்யப்பட்ட அதிகபட்ச ஒப்பந்த மதிப்பின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. பரிவர்த்தனையகமே தொடக்க வரம்பெல்லையை அமைக்கும்.

ஒரு பொறுப்பு நிலையில் பரிவர்த்தனையக வர்த்தகம் செய்யப்படும் தயாரிப்பு சம்பந்தப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையகமே தொடக்க வரம்பெல்லையின் அளவு அல்லது சதவீதத்தை நிர்ணயிக்கும்.

நட்டம் ஏற்பட்டாலோ அல்லது தொடக்க வரம்பெல்லையின் மதிப்பு குறைந்துபோனாலோ கிடைக்கக்கூடிய தொடக்க வரம்பெல்லையின் அளவை மீட்டமைப்பதற்காக தரகர் ஒரு வரம்பெல்லை அழைப்பை மேற்கொள்வார். பெரும்பாலும் “மாறும் வரம்பெல்லை” என அழைக்கப்படும் இதற்காக மேற்கொள்ளப்படும் வரம்பெல்லையானது தினசரி அடிப்படையில் செய்யப்படும். இருப்பினும் அதிக மாறும் தன்மை கொண்ட நேரங்களில் ஒரு தரகர் வரம்பெல்லை அழைப்புகளையோ அல்லது ஒரு நாளில் செய்யப்படும் அழைப்புகளையோ மேற்கொள்வார்.

வரம்பெல்லைக்கான அழைப்புகள் வழக்கமாக ஒரே நாளில் பெறவும் செலுத்தப்படவும் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றன. அப்படி இல்லையெனில் வரம்பெல்லையின் மூலமாக குறிப்பிடப்பட்ட அளவுக்கு இணங்கும்படியான போதிய பொறுப்பு நிலைகளைப் பூர்த்தி செய்வதற்கான உரிமை தரகருக்கு உள்ளது. பொறுப்பு நிலைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் கிளையண்ட்டின் கணக்கில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்படின் அதற்கு கிளையண்ட்டே பொறுப்பாவார்.

சில அமெரிக்க பரிப்வர்த்தனையகங்கள் “பராமரிப்பு வரம்பெல்லை” (maintenance margin) என்ற சொல்லையும் பயன்படுத்துகின்றன. வரம்பெல்லை அழைப்பு மேற்கொள்ளப்படும் முன்பு தொடக்க வரம்பெல்லையின் மதிப்பில் எவ்வளவு குறைக்கப்பட முடியுமோ அந்த அளவே பராமரிப்பு வரம்பெல்லை என அது வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்காவல்லாத தரகர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர் “தொடக்க வரம்பெல்லை” மற்றும் “மாறும் வரம்பெல்லை” ஆகிய சொற்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

பிற கடனீடுகளின் தொடக்க வரம்பெல்லையைப் (இதை அமெரிக்க சந்தையிலுள்ள கூட்டிணைய சேமிப்பகம் (Federal Reserve) அமைக்கிறது) போலன்றி தொடக்க வரம்பெல்லைத் தேவையை எதிர்கால ஒப்பந்தப் பரிவர்த்தனையகம் அமைக்கிறது.

சந்தையில் தினசரி ஓர் எதிர்கால கணக்கு குறிக்கப்படுகிறது. வரம்பெல்லையானது எதிர்கால ஒப்பந்தங்களைப் பட்டியலிடும் பரிவர்த்தனையகம் அமைத்திருக்கும் வரம்பெல்லைப் பராமரிப்புத் தேவைகளுக்கும் குறைவாகச் சென்றால், தேவையான அளவிற்கு கணக்கை அமைப்பதற்காக ஒரு வரம்பெல்லை அழைப்பு மேற்கொள்ளப்படும்.

பராமரிப்பு வரம்பெல்லை - ஒரு வாடிக்கையாளர் தனது வரம்பெல்லைக் கணக்குக்கில் பராமரிக்க வேண்டிய, நிலுவையிலுள்ள எதிர்கால ஒப்பந்தம் ஒன்றிற்கான குறைந்தபட்ச வரம்பெல்லைகளின் தொகுப்பு.

வரம்பெல்லை சமப்பங்கு விகிதம் - இது இடர் முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வரம்பெல்லையாகப் பிடிக்கப்படும் அவர்களின் வர்த்தக முதலீட்டைக் குறிக்கிறது. எதிர்கால ஒப்பந்தங்களின் குறைந்த வரம்பெல்லைத் தேவைகளால் அதன் விளைவாக ஏற்படும் முதலீட்டு உதவி ஏற்படுகிறது. இருப்பினும், பரிவர்த்தனையகங்களுக்கு ஒப்பந்தம் மற்றும் வர்த்தகர் ஆகியவர்களைப் பொறுத்து மாறும் குறைந்த பட்ச அளவு தேவைப்படுகிறது. தரகர் தேவைகளை அதிகமாக அமைக்கலாம் ஆனால் குறைவாக அமைக்க முடியாது. ஒரு வர்த்தகர் வரம்பெல்லை அழைப்புகளைத் தவிர்க்க விரும்பினால் இத் தேவைகளை அதிகமாகவும் அமைக்க முடியும்.

செயல்திறன் பத்திர வரம்பெல்லை எதிர்கால அல்லது விருப்பத் தெரிவு ஒப்பந்தத்தின் வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆகிய இரு தரப்பினரும் விதிமுறைகள் மற்றும் ஒப்பந்தத்தின் செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக செலுத்தும் பணத்தின் அளவாகும். பொருள்களிலான வரம்பெல்லை என்பது சமப்பங்குப் பணச்செலுத்தலோ அல்லது பொருள்களுக்கான முன் பணமோ அல்ல. அது பாதுகாப்பு முன்பணமே ஆகும்.

வரம்பெல்லை மீட்சி (Return on margin) (ROM) பெரும்பாலும் செயல்திறனை முடிவு செய்யப் பயன்படுகிறது. ஏனெனில் அது தேவையான வரம்பெல்லையில் உள்ளபடி பரிவர்த்தனையகம் கணிக்கும் இலாபம் அல்லது நட்டத்தைக் குறிக்கிறது. ROM மதிப்பைக் கணக்கிட முடியும் (உணரப்படும் மீட்சி) / (தொடக்க வரம்பெல்லை). வருடத்திற்குக் கணக்கிடப்பட்ட ROM: (ROM+1)(ஆண்டு/வர்த்தக காலம்)-1. எடுத்துக்காட்டுக்கு, ஒரு வர்த்தகர் இரண்டு மாதங்களில் வரம்பெல்லையின் 10% இலாபம் பெற்றால் அவரது வருடாந்திர இலாப மதிப்பு 77% ஆக இருக்கும்.

கணக்குத் தீர்வு - பௌதிக முறை மற்றும் ரொக்கக் கணக்குத்தீர்வு எதிர்கால ஒப்பந்தங்கள்[தொகு]

கணக்குத்தீர்த்தல் என்பது ஒப்பந்தத்தை நிறைவேற்றும் செயலாகும். அதற்கு ஒவ்வொரு எதிர்கால ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளபடி இரு வழிகள் உள்ளன:

 • பொருளாக வழங்கல் - விற்பனையாளர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட சொத்தின் அளவை பரிவர்த்தனையகத்திற்கு வழங்குகிறார், பின்னர் அதை பரிவர்த்தனையகம் ஒப்பந்தத்திலுள்ள வாங்குபவர்களுக்கு வழங்குகிறது. பொருள்கள் மற்றும் பத்திரங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் பொருளாக வழங்கும் முறையே பொதுவான முறையாகும். நடைமுறையில், சிறிதளவு ஒப்பந்தங்களுக்கு மட்டுமே இம்முறை பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான ஒப்பந்தங்கள் காக்கும் பொறுப்பு நிலையை வாங்குவதன் மூலம் ரத்தாகின்றன - அதாவது முந்தைய விற்பனை ஒன்றை ரத்து செய்வதற்காக ஓர் ஒப்பந்தத்தை வாங்குதல் (குறுகிய பொறுப்புநிலையை சமாளித்தல்) அல்லது முந்தைய வாங்குதல் ஒன்றை விரைவில் பணமாக மாற்றுவதற்காக ஓர் ஒப்பந்தத்தை விற்றல் (ஒரு நீண்ட பொறுப்பு நிலையை சமாளித்தல்). நிமெக்ஸ் பண்படா எதிர்கால ஒப்பந்தங்கள் ஒப்பந்த முடிவில் இந்த முறை கணக்குத்தீர்வைப் பயன்படுத்துகின்றன
 • ரொக்க கணக்குத்தீர்த்தல் - ரொக்கச் செலுத்தல் என்பது யூரிபோர் போன்ற குறுகிய கால வட்டிவீதம் போன்ற குறிப்பிடப்பட்ட குறிப்பு வீதம் அல்லது ஒரு பங்கு சந்தைக் குறியீட்டின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது. ஒப்பந்தத்தில் ஈடுபடும் இரு தரப்பினர்களும் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய இலாபம் அல்லது நட்டத்தை ஒப்பந்தம் முடிவுறும் போது ரொக்கமாக பெறுவர்/செலுத்துவர்.[5] நடைமுறையில் குறிப்பு உருப்படிகளின் வழங்கலால் கணக்குத் தீர்க்க முடியாதவையே ரொக்கக் கணக்குத்தீர்த்தல் எதிர்கால ஒப்பந்தங்களாகும், அதாவது ஒருவர் குறிப்பை வழங்க முடியாது. எதிர்கால ஒப்பந்தத்தில் தொடர்புடைய ஓர் உடனடிச் சந்தையிலான (spot market) வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட குறியீட்டைப் பொறுத்து கணக்குத் தீர்த்தலை மேற்கொள்ளத் தெரிவு செய்துகொள்ளும் வசதியும் இருக்கலாம். ஐஸ் ப்ரெண்ட் எதிர்கால ஒப்பந்தங்கள் இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.

காலாவதி (அல்லது அமெரிக்காவில் காலாவதியாதல் ) என்பது ஒரு எதிர்கால ஒப்பந்தத்தின் ஒரு குறிப்பிட்ட வழங்கல் மாதம் வர்த்தகம் செய்யப்படுதலும் ஒப்பந்தத்தின் இறுதி கணக்குத்தீர்த்தல் விலையும் நிறுத்தப்படும் தேதியும் நேரமும் ஆகும். பெரும்பாலான சமப்பங்குக் குறியீடு மற்றும் வட்டிவீத எதிர்கால ஒப்பந்தங்களுக்கு (மற்றும் பெரும்பாலான சமப்பங்கு தெரிவுகளுக்கு) இது வர்த்தக மாதங்களின் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் நிகழ்கிறது. இந்த நாளில் t+1 எதிர்கால ஒப்பந்தம் t எதிர்கால ஒப்பந்தமாக மாறும். எடுத்துக்காட்டுக்கு, பெரும்பாலான CME மற்றும் CBOT ஒப்பந்தங்களுக்கு டிசம்பர் ஒப்பந்தங்களின் காலவதியின் போது மார்ச் மாதத்திற்கான எதிர்கால ஒப்பந்தமே அருகாமையிலுள்ள ஒப்பந்தமாக அமையும். வர்த்தக மையங்களுக்கு இது மிகவும் பரபரப்பான நேரமாகும். குறிப்பிடப்பட்ட ரொக்க விலையும் எதிர்கால ஒப்பந்தங்களின் விலையும் சந்திக்கப் போராடும் இந்தக் குறுகிய நேரத்தில் (30 நிமிடங்கள் எனலாம்) அந்த வர்த்தக மையங்கள் விரைவாக இலாபம் காண முயற்சிக்கும். இந்த நேரத்திலேயே எதிர்கால ஒப்பந்தங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகளும் மிக அதிக அளவில் பணமாக மாறுகின்றன. மேலும் ஒரு குறியீட்டுக்கும் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கும் இடையே வேறுபாடு ஏதேனும் இருப்பின் பாதுகாப்பு முதலீட்டாளர்களால் அது உடனடியாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த நேரத்திலேயே வர்த்தகர்கள் பொறுப்பு நிலைகளை அடுத்த ஒப்பந்தத்திற்கு மாற்றுவதால் அல்லது சமப்பங்கு குறியீட்டு எதிர்கால ஒப்பந்தங்களின் நிகழ்வுகள், நடப்பு குறியீட்டு பொறுப்பு நிலைகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதற்காக அந்த குறியீட்டின் கூறுகளை வாங்குவதல் போன்றவற்றல் அளவில் அதிகரிப்பும் ஏற்படுகிறது. காலாவதி தேதியில், லண்டன் அல்லது ஃப்ராங்க்ஃப்ரூட்டிலுள்ள ஐரோப்பிய சமப்பங்கு பாதுகாப்பு வர்த்தக மையம் ஒன்று ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் கிட்டத்தட்ட எட்டு பெரிய சந்தைகளிலும் காலாவதியாகும் பொறுப்பு நிலைகள் ஏதேனும் உள்ளதா எனப் பார்த்துக்கொண்டே இருக்கும்.

விலையிடல்[தொகு]

வழங்கத்தக்க சொத்துகள் அதிக வழங்கல் அளவில் இருந்தால் அல்லது எளிதில் உருவாக்க முடியும் வகையில் இருந்தால் ஓர் எதிர்கால ஒப்பந்தத்தின் விலையானது பாதுகாப்பு முதலீட்டு அளவுருக்களால் தீர்மானிக்கப்படுகிறது. இது வழக்கமாக பங்கு குறியீட்டு எதிர்கால ஒப்பந்தங்கள், கருவூலப் பத்திர எதிர்கால ஒப்பந்தங்கள் மற்றும் இயல்பான பொருள்களின் மீதான எதிர்கால ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் (எ.கா. அறுவடைக்குப் பின்பு சோளம்). இருப்பினும், வழங்கத்தக்க பொருள் அதிகமாக கிடைக்காவிட்டால் அல்லது அது இல்லாவிட்டால், எடுத்துக்காட்டுக்கு அறுவடைக்கு முன்பு கோதுமை அல்லது யூரோடாலர் எதிர்கால ஒப்பந்தங்கள் அல்லது ஃபெடரல் நிதி வீத எதிர்கால ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு இது பொருந்தும் (இவற்றில் குறிப்பிடப்பட்ட நிதிக் கருவிகள் வழங்கல் தேதியில் உருவாக்கப்பட வேண்டும்) - எதிர்கால ஒப்பந்தங்களின் வீதங்களை வர்த்தக மையம் நிர்ணயிக்க முடியாது. இந்த நிலையில், எதிர்காலத்தில் சொத்துக்கான தேவை மற்றும் வழங்கல் என்பது மட்டுமே விலையை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது. அது எதிர்கால ஒப்பந்தங்களுக்கான தேவை மற்றும் வழங்கலில் குறிப்பிடப்படும்.

பாதுகாப்பு முதலீட்டு அளவுருக்கள்[தொகு]

வழங்கத்தக்க சொத்தானது அதிக அளவில் கிடைக்கும்போது அல்லது எளிதில் உருவாக்கப்பட முடியும் என்ற நிலையில் பாதுகாப்பு முதலீட்டு அளவுருக்கள் ("அறிவார்ந்த விலையிடல்") என்பது பொருந்தும். இங்கு, முன்னோக்கு விலையானது குறிப்பிடப்பட்டிருக்கும் இடரில்லா வீதத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையைக் குறிக்கும். கோட்பாட்டு ரீதியான விலையில் ஏற்படும் ஏதேனும் விலைகளினால் முதலீட்டாளர்களுக்கு பாதகமில்லா இலாப வாய்ப்பு கிடைக்கும் மற்றும் அவை பாதுகாப்பு முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதே இதற்குக் காரணமாகும்.

இவ்வாறாக ஓர் எளிய பிரிக்கப்படாத பணம் செலுத்தல் சொத்துக்கு, எதிர்கால/முன்னோக்கு விலை மதிப்பை, பின்வருமாறு கணக்கிடலாம்:

இதில், S(t) என்பது நடப்பு மதிப்பு, t என்பது நேரம், T என்பது முதிர்வு மற்றும் r என்பது இடரில்லா இலாப வீதம் ஆகும். இதையே தொடர்ச்சியான கூடுதலாக பின்வருமாறு எழுதலாம்:

சேமிப்பு செலவுகள், இலாபப் பங்குகள், இலாப வருமானங்கள் மற்றும் பயன்படு இலாபங்கள் போன்றவற்றுக்கு இந்தத் தொடர்பானது மாறலாம்.

முழுமையான சந்தையில் எதிர்கால ஒப்பந்தங்களுக்கும் உடனடி விலைகளுக்குமுள்ள இந்தத் தொடர்பானது மேலே கூறியுள்ள மாறிகளைச் சார்ந்துள்ளது; நடைமுறையில் பல்வேறு சந்தைக் குறைபாடுகள் (பரிவர்த்தனை செலவுகள், வேறுபடும் பெறுதல் மற்றும் கடன் வழங்குதல் வீதங்கள், குறுகிய கால விற்றலுக்கான கட்டுப்பாடுகள்) உள்ளன. அவை முழுமையான பாதுகாப்பு முதலீடுகளைத் தடுக்கின்றன. இவ்வாறு உண்மையில் எதிர்கால ஒப்பந்தங்களின் விலையானது ஒரு பாதுகாப்பு முதலீட்டு மையத்திற்குள்ளேயே கோட்பாட்டு விலையிலிருந்து மாறுகிறது.

எதிர்பார்த்தலின் மூலம் விலையிடல்[தொகு]

வழங்கத்தக்க பொருள் மிகவும் அதிகமாகக் கிடைக்காமல் இருக்கும்பட்சத்தில் (அல்லது அது கிடைக்காத போது) அல்லது பகுத்தறிவு ரீதியான விலையிடல் பொருந்தாத போது இந்த பாதுகாப்பு முதலீடு முறையைப் பயன்படுத்த முடியாது. இங்கு, எதிர்கால ஒப்பந்தங்களின் விலையானது எதிர்கால ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கான இன்றைய தேவை மற்றும் வழங்கலினால் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆழமான மற்றும் எளிதில் பரிமாறும் சந்தையில், தேவை மற்றும் வழங்கல் ஆகியவை ஒரு குறிப்பிட்ட விலையில் சமநிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும். அந்த விலையானது உண்மையான சொத்தின் எதிர்கால விலையின் சார்பற்ற எதிர்பார்ப்பை குறிப்பதாக இருக்கும். அதனால் அதற்கு எளிய தொடர்பே உள்ளது.

.

இதற்கு மாறாக, மேலோட்டமான பரிமாற்றம் குறைவான சந்தை அல்லது வழங்கத்தக்க சொத்துக்களின் பெருமளவு வேண்டுமென்றே சந்தைப் பங்கேற்பாளர்களினால் பிடித்துவைக்கப்பட்டிருக்கும் நிலையுள்ள (சந்தைப் பதுக்கல் என அழைக்கப்படும் சட்டவிரோதமான செயல்) சந்தையில் எதிர்கால ஒப்பந்தங்களுக்கான சந்தைக் கணக்குத்தீர்வு விலையானது விலைக்கும் சொத்தை அப்புறப்படுத்தப் போதுமானதாக எதிர்பார்க்கப்படும் எதிர்கால விலைக்குமுள்ள தொடர்பைக் குறிக்கிறது.

பாதுகாப்பு முதலீட்டு அளவுருக்களுக்கும் எதிர்பார்ப்புக்கும் உள்ள தொடர்பு[தொகு]

நமது எதிர்பார்ப்புகள் இடர்-நடுநிலை நிகழ்தகவு மதிப்பைப் பொறுத்து அமைந்திருக்கும்பட்சத்தில் எதிர்பார்ப்பு அடிப்படையிலான தொடர்பு பாதுகாப்பு முதலீடில்லா அமைப்பிலும் இருக்கும். வேறொரு விதத்தில் கூறுவதானால்: எதிர்கால விலையானது இடர்-நடுநிலை நிகழ்தகவைப் பொறுத்து ஒரு மூக்கனாங்கயிறாக உள்ளது. இந்த விலையிடல் விதியின்படி, எதிர்கால ஒப்பந்த சந்தையானது வழங்கத்தக்க பொருளுக்கு அரிதாகவே விலையிடுகிறது என்ற நிலையிலும் ஒரு இடர்துணி முதலீட்டாளர்கள் செயல்படத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இழுத்தடிப்பு மற்றும் பின்னோக்கு நகர்வு[தொகு]

எதிர்கால வழங்கலுக்கான பொருளின் விலையானது உடனடி விலையை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில் அல்லது எதிர்கால வழங்கல் விலையானது தொலைவிலுள்ள எதிர்கால விலையை விட அதிகமாக இருக்கையில் அந்த சூழ்நிலை இழுத்தடிப்பு என அழைக்கப்படுகிறது. இதற்கு மாறாக நிலையான ஒரு பொருளின் எதிர்கால வழங்கலுக்கான விலையானது உடனடி விலையை விட குறைவாக இருந்தால் அல்லது எதிர்கால வழங்கல் விலையானது அருகாமை எதிர்காலத்திலுள்ள விலையை விட குறைவாக இருந்தால் அது பினோக்கு நகர்வு என அழைக்கப்படுகிறது.

எதிர்கால ஒப்பந்தங்களும் பரிவர்த்தனையகங்களும்[தொகு]

ஒப்பந்தங்கள்

பல வகையான எதிர்கால ஒப்பந்தங்கள் உள்ளன. அவை (ஒற்றைப் பங்கு எதிர்கால ஒப்பந்தங்கள் போன்ற), கடனீடுகள், நாணயங்கள் அல்லது வட்டிவீதங்கள் மற்றும் குறியீடுகள் போன்ற உணரமுடியா சொத்துகள் போன்ற பல வகையான "வர்த்தகம் செய்யத்தக்க" சொத்துகள் இருப்பதை உணர்த்துகின்றன. குறிப்பிட்ட அடிப்படை சரக்கு சந்தைகளின் எதிர்கால சந்தைகள் பற்றிய தகவலுக்கு பின்வரும் இணைப்புகளைப் பார்வையிடுக. வர்த்தகம் செய்யத்தக்க பொருள் எதிர்கால ஒப்பந்தங்களின் பட்டியலுக்கு வர்த்தகம் செய்யப்படும் பொருள்களின் பட்டியல் என்பதைக் காண்க. எதிர்கால ஒப்பந்தப் பரிவர்த்தனையகம் என்ற கட்டுரையையும் காண்க.

சரக்குகளைக் கொண்டு செய்யும் வர்த்தகம் ஜப்பானில் 18ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. ஜப்பானில் இது அரிசி மற்றும் பட்டு வர்த்தகத்தைக் கொண்டும் ஹாலந்தில் ட்யுலிப் குமிழ்களைக் கொண்டும் தொடங்கியது. மத்திய தானிய சந்தைகள் உருவாக்கப்பட்டு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொண்டு வந்து விற்பதற்கான சந்தையிடங்கள் உருவாக்கப்பட்ட 19ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் அமெரிக்க வர்த்தகம் தொடங்கியது. அங்கு அவர்கள் தங்கள் பொருள்களை உடனடி வழங்கலுக்கு (உடனடி அல்லது ரொக்கச் சந்தை எனவும் அழைக்கப்படும்) அல்லது முன்னோக்கு சந்தை முறையில் விற்பனை செய்தனர். இந்த முன்னோக்கு ஒப்பந்தங்கள் என்பவை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட ஒப்பந்தங்களாகும், இவை இன்றுள்ள பரிவர்த்தனையகத்தில் வர்த்தகம் செய்யப்படும் ஒப்பந்தங்களுக்கு முன்னோடிகளாகத் திகழ்கின்றன. பாரம்பரிய சரக்குகளான தானியங்கள், இறைச்சி மற்றும் பிராணிகள் போன்றவற்றின் வர்த்தகமாகவே ஒப்பந்த வர்த்தகங்கள் தொடங்கின எனினும், பரிவர்த்தனையக வர்த்தகத்தில் உலோகங்கள், மின்சாரம், நாணயம் மற்றும் நாணயக் குறியீடுகள் மற்றும் சமப்பங்குகள் மற்றும் சமப்பங்குக் குறியீடுகள், அரசாங்க வட்டிவீதங்கள் மற்றும் தனியார் வட்டிவீதங்கள் ஆகியவையும் உள்ளடங்கும்.

பரிவர்த்தனையகங்கள்

நிதிக் கருவிகளின் மீதான ஒப்பந்தங்கள் 1970களில் சிக்காகோ மெர்கண்ட்டைல் பரிவர்த்தனையகத்தினால் (CME) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிதிக் கருவிகள் மிகப் பெரும் வெற்றியடைந்து விரைவில் வர்த்தக அளவுகளிலும் சந்தைக்கான உலகளாவிய அணுகக்கூடிய தன்மையிலும் சரக்குகள் எதிர்கால ஒப்பந்தங்களை விஞ்சின. இந்தக் கண்டுபிடிப்பால் 1982 ஆம் ஆண்டில் உருவான லண்டன் சர்வதேச நிதி எதிர்கால ஒப்பந்தப் பரிவர்த்தனையகம் (இப்போது யூரோநெக்ஸ்ட்.லைஃப்), Deutsche Terminbörse (இப்போது யூரெக்ஸ்) மற்றும் டோக்யோ சரக்குப் பரிவர்த்தனையகம் (TOCOM) போன்ற பல புதிய எதிர்கால ஒப்பந்தப் பரிவர்த்தனையகங்கள் உலகெங்கிலும் உண்டாயின. இன்று உலகெங்கிலும் வர்த்தகத்தில் ஈடுபடும் 90 க்கும் மேற்பட்ட எதிர்கால ஒப்பந்த விருப்பத் தெரிவுகள் பரிவர்த்தனையகங்கள் உள்ளன. அவற்றில் பின்வருவனவும் அடங்கும்: [6]

எதிர்கால ஒப்பந்தங்களை யார் வர்த்தகம் செய்வது?[தொகு]

எதிர்கால ஒப்பந்த வர்த்தகர்கள் வழக்கமாக இரு குழுக்களாக உள்ளனர்: குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்தில் (குறியீடு அல்லது வட்டிவீதம் போன்ற புலனாகா சொத்தையும் உள்ளடக்கியது) ஆர்வமுடையவர்களும் விலை மாற்றங்களினால் விளையும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பவர்களுமான பாதுகாப்பு முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையின் போக்கை முன்கணித்து அதன் மூலம் இலாபம் ஈட்ட முயற்சிப்பவர்களும் "ஒப்பந்தத்திலுள்ள" சொத்துடன் தொடர்புடைய வழித்தோன்றல் நிதிக்கருவிகளின் ஒப்பந்தத்தை உருவாக்குபவர்களுமான இடர் தடுப்பு முதலீட்டாளர்கள் ஆகியோர் ஆவர். ஆனால் அவர்களுக்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்தின் வழங்கலை செய்யும் அல்லது பெறும் நோக்கமோ அல்லது அதனால் ஏதேனும் பயனோ இல்லை. வேறுவிதமாகக் கூறினால், முதலீட்டாளர் சொத்திற்கு நீண்ட கால எதிர்கால ஒப்பந்தங்களுக்கான வாய்ப்பைப் பெற அல்லது ஒரு குறுகிய கால எதிர்கால ஒப்பந்தத்தின் மூலம் எதிர் விளைவைப் பெற முயற்சிக்கிறார்.

வழக்கமாக ஒரு பொருளின் தயாரிப்பாளர்களும் நுகர்வோர்களும் அல்லது சொத்து அல்லது வட்டிவீதம் போன்ற குறிப்பிட்ட பாதிப்புகளுக்குட்படும் சொத்தின் உரிமையாளர்களுமே பாதுகாப்பு முதலீட்டாளர்கள் ஆவர்.

எடுத்துக்காட்டுக்கு, பாரம்பரிய சரக்கு சந்தைகளில், விவசாயிகள் பெரும்பாலும் எதிர்கால ஒப்பந்தங்களை நெல்லுக்காகவும் கால்நடைகளுக்காகவும் விற்பர். அவை அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலைக்கான உத்தரவாதத்தை அளிக்கவும் திட்டமிடலை எளிதாக்கவும் உதவியாக இருந்தது. அதே போல், கால்நடை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் அவற்றின் தீவன செலவுகளை ஈடுகட்டும்படியாக எதிர்கால ஒப்பந்தங்களை வாங்கினர். அதனால் அவர்கள் தீவனத்திற்கான ஒரு நிலையான செலவைப் பொறுத்து திட்டமிட முடிந்தது. தற்கால (நிதியியல்) சந்தைகளில் வட்டிவீத பரிமாற்றங்கள் அல்லது சமப்பங்கு வழித்தோன்றல் கருவி தயாரிப்புகளின் "தயாரிப்பாளர்கள்" பரிமாற்ற (swap) ஆபத்துகளை நீக்க அல்லது குறைக்க நிதியியல் எதிர்கால ஒப்பந்தங்கள் அல்லது சமப்பங்கு குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு பரஸ்பர நிதி அல்லது தனித்தனியாக நிர்வகிக்கப்படும் கணக்கு ஆகியவற்றை பாதுகாப்பு முதலீடு அல்லது இடர் காப்பு முதலீட்டு அம்சங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இவற்றில் முதலீடு செய்பவர்களின் நோக்கம் S&P 500 பங்குக் குறியீடு போன்ற பங்குக் குறியீட்டின் செயல்திறனைக் கண்காணிப்பதே ஆகும். சொத்துவிவர மேலாளர் (Portfolio manager) பெரும்பாலும் S&P 500 பங்குக் குறியீட்டு எதிர்கால ஒப்பந்தங்களில் எளிய மற்றும் விலைத்திறன் மிக்க விதத்தில் முதலீடு செய்வதன் மூலம் (நீண்ட கால ஒப்பந்தத்தை உருவாக்குதல்) ரொக்கப் புழக்கங்களை "சமப்பங்காக்குகின்றனர்". இதனால் சொத்துவிவரமானது குறியீட்டுக்கு உட்படுவதாக்குகின்றனர். குறியீடானது நிதி அல்லது முதலீட்டு அம்சத்துடன் இசைவானதாக உள்ளது. அதனால் தனித்தனியான 500 பங்குகளின் சரியான விகிதத்தை வாங்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இதனால் சமநிலையிலுள்ள வேறுபடுதன்மையும் பாதுகாக்கப்படுகிறது, சந்தையில் முதலீடு செய்யப்பட்ட சொத்துகளின் அதிக அளவு சதவீதம் இருக்கும்படியும் பராமரிக்கப்படுகிறது, மேலும் நிதி/கணக்கின் செயல்திறனிலான கண்காணிப்புப் பிழையைக் குறைக்கவும் உதவுகிறது. இது பொருளாதார ரீதியாக செயல்படுத்தக்கூடியதாக (நிதி அல்லது கணக்குக்குள்ளான ஒவ்வொரு பொறுப்பு நிலையின் கணிசமான அளவு பங்குகளை வாங்க முடியும் நிலை) இருக்கும்பட்சத்தில், சொத்துவிவர மேலாளர் ஒப்பந்த்தத்தை முடித்து ஒவ்வொரு தனித்தனி பங்கிற்குமான வாங்குதலைத் தொடங்கலாம்.

ஆபத்தை மாற்றிவிடுவதும் வெவ்வேறு ஆபத்து மற்றும் நேரச் செயல்திறன்கள் கொண்ட வர்த்தகர்களிடையேயான (எடுத்துக்காட்டுக்கு ஒரு பாதுகாப்பு முதலீட்டாளரிடமிருந்து இடர் காப்பு முதலீட்டாளருக்கு மாறுவது) எளிதில் மாறும் தன்மை அதிகரிப்பதும் எதிர்கால ஒப்பந்த சந்தைகளின் சமூக பயன்பாடாகும்.

எதிர்கால ஒப்பந்தங்களின் வாய்ப்புக்கள்[தொகு]

பல சந்தர்ப்பங்களில், விருப்பத் தெரிவு ஒப்பந்தங்கள் எதிர்கால ஒப்பந்தங்களில் வர்த்தகம் செய்யப்படுகின்றன, சில நேரங்களில் இவை எளிமையாக "எதிர்கால வாய்ப்புக்கள்" என அழைக்கப்படுகின்றன. உள்ளிடுதல் என்பதொரு எதிர்கால ஒப்பந்தத்தை விற்பதற்கான தெரிவாகும், அழைப்பு என்பது எதிர்கால ஒப்பந்தத்தை வாங்குவதற்கான தெரிவாகும். இரண்டிற்குமே, மாற்று குறிப்பு விலை என்பது குறிப்பிட்ட எதிர்கால விலையாகும் அதில் எதிர்கால ஒப்பந்தம் மாற்றும் செயல்படுத்தப்படும் எனில் வர்த்தகம் செய்யப்படும். ப்ளாக்-ஷோல்ஸ் மாதிரி என்பதைக் காண்க. அதுவே இத்தகைய தெரிவு ஒப்பந்தங்களை விலையிட மிகப் பிரபலமான முறையாகும்.

எதிர்கால ஒப்பந்தங்களுக்கான கட்டுப்பாடுகள்[தொகு]

அமெரிக்க ஒன்றியத்தில் அனைத்து எதிர்கால ஒப்பந்தப் பரிமாற்றங்களும் கம்மோடிடி ஃப்யூச்சர்ஸ் டிரேடிங் கமிஷனால் (CFTC) கட்டுப்படுத்தப்படுகிறது, அது ஓர் அமெரிக்க ஒன்றிய அரசின் தனித்தியங்கும் முகமையாகும். ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ விதிகளை மீறும் போது அவர்களுக்கு அபராதங்களையும் மேலும் இதர தண்டனைகளை விதிக்க அந்தக் கமிஷனுக்கு உரிமையுள்ளது. கமிஷன் அனைத்து பரிமாற்றங்களையும் சட்டப்படி கட்டுப்படுத்துகிறது எனினும், ஒவ்வொரு பங்குச் சந்தையும் அதற்கென பிரத்யேகமான விதிகளைக் கொண்டிருக்கலாம், மேலும் ஒப்பந்தத்தின் கீழ் நிறுவனங்களுக்கு பல்வேறு விஷயங்களுக்கு அபராதம் விதிக்கலாம அல்லது CFTC கையளிக்கும் அபராதத்தையும் நீட்டிக்கலாம்.

CFTC யானது வாராந்திர அறிக்கைகளை வெளியிடுகிறது. அதில் 20 ற்கும் மேறபட்ட பங்கேற்பாளர்களை கொண்டிருக்கும் ஒவ்வொரு சந்தைப் பிரிவிற்குமான சந்தையில் பங்கு கொள்வோரின் திறந்த நிலை வட்டிகளின் விவரங்கள் இருக்கும். இந்த அறிக்கைகள் பிரதி வெள்ளியன்று வெளியிடப்படுகின்றன (முந்தைய செவ்வாயிலிருந்தான தரவுகள் உட்பட), மேலும் திறந்தநிலை வட்டியின் பிரிவின் தெரிவிக்கக் கூடிய மற்றும் தெரிவிக்கக்கூடாத மற்றும் வர்த்தக மற்றும் வர்த்தகமற்ற திறந்தநிலை வட்டிகளைப் பற்றிய தரவும் அதிலடங்கும். இந்த வகையான அறிக்கை 'கமிட்மெண்ட்ஸ் ஆஃப் டிரேடர்ஸ் ரிப்போர்ட்', COT-அறிக்கை அல்லது COTR என குறிப்பிடப்படுகின்றன.

எதிர்கால ஒப்பந்தத்தின் வரையறை[தொகு]

ஜோர்க்கினை பின் தொடர்ந்து[7] நாங்கள் எதிர்கால ஒப்பந்தத்திற்கு ஓர் விளக்கம் அளிக்கிறோம். நாங்கள் எதிர்கால ஒப்பந்தத்தை J எனும் பொருளை T எனும் காலத்தில் விநியோகிப்பதுடன் விவரிக்கிறோம்:

 • சந்தையில் மேற்கோளிடப்பட்ட விலையொன்று உள்ளதுF(t,T) , அது t எனும் காலத்திலிருக்கும் எதிர்கால விலை T எனும் காலத்தில் J வை விநியோகிக்க
 • T எனும் காலத்தில், வைப்போர் F(T,T)யை அளிக்கிறார் அதனால் Jவைப் பெற உரிமையுள்ளவராகிறார்.
 • எவ்விதமான கால இடைவெளியின்போதும் , வைப்போர் தொகை யைப் பெறுகிறார்.
 • எதிர்கால ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான கள விலை பூஜயத்திற்குச் சமமானது அனைத்து காலங்களுக்கான t ற்கானது அதனால் ஆகும்.

மாற்றத்திற்குள்ளாகாதவை[தொகு]

சில பங்குச் சந்தைகள் மாற்றத்திற்குள்ளாகாதவையை, எதிர்கால ஒப்பந்தங்களின் தோல்வியையும் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் இயல்வகை பொருட்களின் மதிப்பையும், 'ஒப்பந்த தீர்வு நாளன்று' வரையறுக்கப்பட்ட விநியோக முனையங்களில் அதே மதிப்பில் அடைய தவறுகையிலும் பொறுத்துக் கொள்கின்றன. இதற்கான ஒரு உதாரணம் CBOT (சிகாகோ ஃபோர்ட் ஆஃப் டிரேட்) Soft Red Winter wheat (SRW) எதிர்காலப் பங்குகளாகும். SRW எதிர்கால ஒப்பந்தங்கள் தீர்வு நாள் தவிர 20¢ க்கும் மேலாக தீர்த்துள்ளன மற்றும் தீர்வு நாட்களுக்கு இடையில் $1.00 ற்கும் அதிகமான வேறுபாட்டில் தீர்த்துள்ளன. CBOT SRW எதிர்கால ஒப்பந்தங்களை வைத்திருக்கும் ஒரு சில பங்கேற்பாளர்களே CBOT டினால் எதிர்கால ஒப்பந்தங்களை தீர்பதற்கு பொருட்களை ஏற்படுத்துவதற்கோ அல்லது விநியோகித்தலை பெறுவதற்கோ தகுதியுடைவையாக ஆக்கப்பட்டுள்ளன. ஆகையால், எவ்வொரு தனி நபர் உருவாக்காளருக்கும் பெரும்பாலும் SRW ற்காக இறுதி தீர்வினை சாந்திருக்கும் போது 'இழப்புக் காப்பினை' திறமையாக செய்யச் சாத்தியமற்றதாகும். போக்கானது CBOT தொடர்ந்து உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில களங்களில் கப்பல் அல்லது பேரளவிலான இரயில் வண்டிகள் மற்றும் பல தெப்பங்களை பெறுபவற்றில் பொருள் ஒப்பந்தங்களை நிறைவேற்றும் நிறுவனங்களை தடைச் செய்கிறது. கம்மோடிடி ஃப்யூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன், அமெரிக்க ஒன்றியத்தில் எதிர்கால சந்தைகளில் கண்காணிப்பது, ஏன் இவ்வாறான போக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை; பொருளாதார கருத்தியலும் CBOT வெளியீடுகளும் ஒப்பந்தங்களின் மாற்றத்திற்குள்ளாகுபவையாக இருக்கக்கூடியவை பிரதிநிதித்துவப்படுத்தும் கீழுள்ள பொருளின் விலையுடன் இருப்பவை எதிர்கால சந்தையின் ஒருங்கிணைப்பின் அடிப்படையாகும். அது "விலை கண்டுபிடிப்பின்" செயல்பாடானது, தற்போதைய நிலைமைகளை பிரதிபலிக்ககூடிய பொருளின் பொருத்தமான மதிப்பை நுணுகிக் காணக்கூடிய சந்தைகளின் திறனை, விலை மாறுபாடுகளுடனான தொடர்பில் கீழ்மையாக்கப்படுகின்றன. மேலும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்களில் ஒப்பந்தத்தை வற்புறுத்தும் தன்மையின் சாத்தியமற்றதை பின் பற்றுகிறது.[8]

எதிர்கால ஒப்பந்தங்கள் எதிராக முன்னோக்கிய ஒப்பந்தங்கள்[தொகு]

எதிர்கால மற்றும் முன்னோக்கிய ஒப்பந்தங்கள் ஆகிய இரண்டும் எதிர்காலத் தேதியில் ஒப்பந்தத்தை முன் ஏற்பாடான விலையில் விநியோக்கிக்க இருக்கையில் அவை இரு முக்கிய விதங்களில் வேறுபட்டவை:

பங்குச் சந்தை எதிர்ப்பு விற்பனையிடம்[தொகு]

எதிர்கால ஒப்பந்தங்கள் எப்போதும் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுபவை, அதே சமயம் முன்னோக்கிய ஒப்பந்தங்கள் எப்போதும் விற்பனையிடத்தில் வர்த்தகம் செய்யப்படுபவை அல்லது எளிமையாக இரு நபர்களுக்கிடையில் கையொப்பமாகும் ஒப்பந்தமாக இருக்கலாம்.

ஆகவே

 • எதிர்கால ஒப்பந்தங்கள் தரநிலைபடுத்தப்படுபவை, பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுபவை, அதே சமயம் முன்னோக்கிய ஒப்பந்தங்கள் தனித்தன்மையுடன் விற்பனையிடத்தில் செய்யப்படுவதால் இருக்கலாம்.
 • இயல் நிலையின் விநியோக விஷயத்தில், முன்னோக்கிய ஒப்பந்தம் யார் விநியோகத்தை செய்வது என்பதைக் குறிப்பிடுகிறது. எதிர்கால ஒப்பந்தத்தின் விநியோகத்தின் எதிர் தரப்பு வெளியிடும் நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

விளிம்பு மதிப்புக் கொள்ளல்[தொகு]

முன்னோக்கிய ஒப்பந்தங்கள் தீர்வுத் தேதியில் வாங்கப்படிருந்தால் மட்டுமே பரிமாற்றப்படுகின்றன. எதிர்கால ஒப்பந்தங்கள், வேறொரு வகையில் தினசரி விளிம்பு விற்பனையிட விலையில் முன்னோக்கிய ஒப்பந்தத்தில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட விநியோக விலையிலும் கீழுள்ள சொத்திலும் வருகின்றன (குறியீட்டிலிருந்து சந்தை வரையிலானவற்றை அடிப்படையிலானது).

விளைவானது முன்னோக்கியவை எதிர்காலத்தியவற்றை விட அதிக கடன் இடர்பாட்டைக் கொண்டுள்ளன, மேலும் அந்த நிதியளிப்பு வேறுவிதமாக கட்டணம் விதிக்கப்படுகின்றன.

முன்னோக்கியவை தினசரி விளிம்பு நிலையில் இடப்படுபவையல்ல கீழுள்ள சொத்தின் விலையில் நகர்வுகளின் காரணமாக என்பது உண்மையானால், ஒரு பெரிய வேறுபாடு முன்னோக்கிய விநியோக விலைக்கும் தீர்வு விலைக்கும் இடையில் ஏற்படலாம், மேலும் ஏதேனும் ஒரு நிகழ்வில் காணப்படாத ஆதாயம் (இழப்பு) ஒப்பந்தத்தின் முழு ஆயுட்காலத்தின் மீது வெளிப்படையானது அல்லது தீர்வு வரை தீர்க்கப்படுவதில்லை. மீண்டும், இது எதிர்காலத்திலிருந்து வேறுபடுகின்றன அவை "உண்மையாக" வழக்கமாக தினசரி எதிர்கால சந்தை மதிப்பின் ஒப்பீட்டின் மூலம் ஒப்பந்தத்தை பெற இனையுறுதியை முகவரின் விளிம்புத் தேவைகளைகளுக்கு அதே வகையில் வைத்திருப்பதை பெறுகின்றன. இந்த உண்மையாக்கம் கூடுதலான இணையுறுதியை தரப்பு கொடுப்பதால் ஏற்படும் 'இழப்பு'பினால் நிகழ்வதாகும், ஆக ஒப்பந்தத்தை வாங்குபவருக்கு மதிப்பில் இழப்பு ஏற்பட நேர்ந்தால், குறைவு அல்லது விளிம்பு மாறுதல் வழமையாக முதலீட்டாளரால் முகவாண்மை கணக்கில் கூடுதல் பணத்தை மின் பரிமாற்றம் அல்லது வைப்பிடல் மூலம் அதிகரிக்கப்படுகிறது.

ஒரு மூன்னோக்கியதில் இருப்பினும், பரிமாற்று விலைகள் வழக்கமாக உண்மையாக்கப்படுவதில்லை, அது காணாத ஆதாயமாக (இழப்பு) வர்த்தகத்தின் எப்பக்கம் விவாதிக்கப்படுகிறது என்பதைச் சார்ந்து அதிகரிக்கிறது. இதன் பொருள் முழுமையாகக் காணாத ஆதாயம் (இழப்பு) விநியோகத்தின் காலத்தில் உண்மையாக்கப்பட ஆகின்றன (அல்லது எவ்வாறாக வழக்கமாக நிகழ்கின்றன, காலாவதியாவதற்கு முன்பே ஒப்பந்தம் முடிக்கப்படும் நேரத்தில்) - தரப்புக்கள் கீழுள்ள நாணயத்தின்படி இட விலையை பெற/விநியோகிக்க பரிமாற்றம் கட்டாயம் செய்வர் எனும் எண்ணப்படியாகும்.

நிறுவன முதலீட்டாளர்களை உட்கொண்டிருக்கும் பெரும்பாலான விஷயங்களில், தினசரி விளிம்பு வேறுபாட்டுத் தீர்வு கையேடுகள், எதிர்கால அழைப்புக்களுக்கான உண்மையான பண நகர்வுகள் சில குறிப்பிடவல்லாத தொகைக்கு மேலானது ஆகும் அது சிறு அளவிலான பணத்தை மின் மறு பரிமாற்றம் செய்வதைத் தவிர்க்கவாகும். நிறுவன முதலீட்டாளர்களின் தினசரி எதிர்கால மாறுபாட்டு குறைந்தபட்ச தொகையின் விளிம்பு பலமுறை $1,000 ஆகும்.

இருப்பினும், முன்னோக்கியதிற்கான சூழ்நிலை,அங்கு தினசரி உண்மையாக்கல் நடைபெறாதப்போது முறைப்படி கடன் இடர்பாட்டை முன்னோக்கியதற்கு உருவாக்குகிறது, ஆனால் எதிர்காலத்திற்கு மிக அதிகமாக உருவாக்குவதில்லை. எளிமையாகக் கூறுவதென்றால், முன்னோக்கிய ஒப்பந்தத்தில் இருக்கும் இடர்பாடானது அளிப்பாளர் குறிப்பிட்ட சொத்தினை விநியோகிக்க இயலாது அல்லது விநியோகிக்கப்படும் நாளில் வாங்குவோர்க்கு முடியாத போது அல்லது முதல் தரப்பு ஒப்பந்தத்தை முடிக்கும் நாளில் ஆகியவையாக இருக்கும்.

எதிர்காலங்களின் விளிம்பு இத்தகைய கடன் இடர்பாட்டை வைத்திருப்போரை அன்று வாங்கப்படும் சம அளவிலிருக்கும் எதிர்காலம் ஒன்றோடு தினசரி புதுப்பித்துக்கொள்ள கட்டாயப்படுத்தி இடர்பாட்டை நீக்குகிறது. இதன் பொருள் வழக்கமாக மிக குறைந்தளவிலான கூடுதல் பணம் எதிர்கால ஒப்பந்தம் தீர்க்கப்படும் நாளில் பற்றுடமிருக்கும் என்பதாகும்; இறுதி நாளின் ஆதாயம் அல்லது இழப்பு மட்டுமே எஞ்சியிருக்கும், ஒப்பந்தத்தின் வாழ்நாள் ஆதாயம் அல்லது இழப்பினை அல்ல.

கூடுதலாக, தினசரி எதிர்காலத்-தீர்வுத் தோல்வி இடர்பாட்டினை தனி நபரைக் காட்டிலும் பங்குச் சந்தையால் ஏற்கப்படுகிறது, மேற்கொண்டு கடன் இடர்பாட்டினை எதிர்காலங்களில் குறைக்கிறது.

எடுத்துக்காட்டு: $100 விலையுடைய எதிர்கால ஒப்பந்தம் ஒன்றைக் கவனத்திற் கொள்க: 50 ஆவது தினம் ஒன்றில், ஒரு எதிர்கால ஒப்பந்தம் $100 விநியோக விலையிலிருப்பது $88 மதிப்புடையதாக இருக்கிறது (அதே கீழிலிருக்கும் சொத்தினை எதிர்கால ஒப்பந்தமாக கொண்டிருப்பது). 51 ஆவது நாள், எதிர்காலப் ஒப்பந்தம் $90 மதிப்புடையதாக உள்ளது. இதன் பொருள் "குறியீட்டிலிருந்து சந்தை வரை" யிலானக் கணக்கு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை வைத்திருப்போரை 51 ஆவது நாள் முன்னோக்கியதன் விலை மாற்றத்தை தடமறிய $2அளிக்க தேவைப்படுத்துகிறது ("$2 விளிம்பினைக் குறித்தல்"). இந்தப் பணம் வரம்பெல்லைக் கணக்குகளின் வழியாக எதிர்கால ஒப்பந்தத்தை வைத்திருக்கும் மறு தரப்பினரைச் சென்றடைகிறது. அதாவது, நட்டமடையும் தரப்பினர் மற்றொரு தரப்பினருக்கு ரொக்கத்தை வழங்குகிறார்.

இருப்பினும், ஒரு முன்னோக்கு ஒப்பந்ததாரர் இறுதி நாளிலான கணக்குத் தீர்த்தலைத் தவிர வேறெங்கும் பணம் செலுத்தமாட்டார், இதனால் மிகப் பெரிய சமநிலை உருவாகிறது; இது வரவு ஆபத்துக்கான படியின் குறிப்பில் தெரியக்கூடும். ஆகவே, மிகச் சிறிய விளைவுகளைத் தவிர்த்து (வரம்பெல்லை மீதான வட்டியை செலுத்துதல் அல்லது பெறுதலின் காரணமாக ஏற்படும்) பிற குவிவு சார்பின் விளைவுகளுக்கு எதிர்கால ஒப்பந்தங்களும் சமமான வழங்கல் விலைகள் கொண்ட முன்னோக்கு ஒப்பந்தங்களும் ஒரே இலாப அல்லது நட்ட அளவுகளில் முடிகின்றன. ஆனால் எதிர்கால் ஒப்பந்தம் வைத்திருப்பவர்கள் அந்த இலாபம் அல்லது நட்டத்தை முனோக்கு ஒப்பந்தங்களின் தினசரி விலை மாற்றங்களைக் கண்காணிக்கும் தினசரி அதிகரிப்புகளாக எதிர்கொள்வர். ஆனால் முன்னோக்கு ஒப்பந்தத்தின் உடனடி விலையானது ஒருங்கிணைந்து கணக்குத் தீர்த்தல் விலையாகிறது. இதனால் சந்தைக் குறிப்பு (mark to market) கணக்குப் பதிவில், இரு சொத்துகளுக்கும் இலாபம் அல்லது நட்டம் வைத்திருக்கும் காலத்தில் வளர்கிறது: ஒரு எதிர்கால ஒப்பந்தத்திற்கு இந்த இலாபம் அல்லது நட்டமானது தினசரி உணரப்படுகிறது, அதே நேரம் முன்னோக்கு ஒப்பந்தத்திற்கு இந்த இலாபம் அல்லது நட்டமானது காலாவதியாகும் வரை உணரப்படாததாகவே உள்ளது.

சரியாகச் சொன்னால், நிதியளிப்பின் பாதைச் சார்பின் காரணமாக ஒரு எதிர்கால ஒப்பந்தமானது ஓர் ஐரோப்பிய வழித்தோன்றல் அல்ல : வர்த்தகத்தின் மொத்த இலாபம் அல்லது நட்டமானது குறிப்பிடப்பட்ட சொத்தின் காலாவதியாகும் போதுள்ள மதிப்பையே சார்ந்துள்ளது; ஆனால் விலையின் போக்கையும் ஓரளவு சார்ந்துள்ளது. இருப்பினும் பொதுவாக இந்த வேறுபாடு மிகச் சிறியதே ஆகும்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Sullivan, Arthur (2003), Economics: Principles in action, Upper Saddle River, New Jersey 07458: Prentice Hall, p. 288, ISBN 0-13-063085-3, archived from the original on 2016-12-20, retrieved 2021-02-26 {{citation}}: Unknown parameter |coauthors= ignored (help)CS1 maint: location (link)
 2. Forward Contract on Wikinvest
 3. Hull, John C. (2005), Options, Futures and Other Derivatives (excerpt by Fan Zhang) (6th ed.), Pg 6: Prentice-Hall, ISBN 0-13-149908-4, archived from the original on 2010-04-11, retrieved 2010-06-11{{citation}}: CS1 maint: location (link)
 4. Aristotle, Politics, trans. Benjamin Jowett, vol. 2, The Great Books of the Western World, book 1, chap. 11, p. 453.
 5. Cash settlement on Wikinvest
 6. Futures & Options Factbook, Institute for Financial Markets, archived from the original on 2011-06-13, retrieved 2010-06-11
 7. Björk: Arbitrage theory in continuous time, Cambridge university press, 2004
 8. Henriques, D Mysterious discrepancies in grain prices baffle experts, International Herald Tribune , March 23, 2008. ஏப்ரல் 25, 2008 இல் அணுக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

U.S. Futures exchanges and regulators[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்பேர_ஒப்பந்தம்&oldid=3642020" இருந்து மீள்விக்கப்பட்டது