உள்ளடக்கத்துக்குச் செல்

சூதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூதம் (Option) என்பது ஒரு வகை சார்பிய ஒப்பந்தம் (derivative contract) ஆகும். இது ஒரு யூக வர்த்த முறை (speculative trading) ஆனதால் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "சூதம்" என்கிற தமிழ் சொல் சூது என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஒரு சூதத்தின் விலை அதன் அடிப்படையில் அமைந்த பங்கு (stock) அல்லது ஏனைய பிணையத்தால் (security) உறுதிப்படுத்தப்படுகிறது. சூதங்களில் இருவகைகள் உள்ளன - வாங்கல் சூதம் (call option) மற்றும் விற்றல் சூதம் (put option).

"வாங்கல் சூதம்" என்னும் பத்திரத்தை வாங்குபவர்க்கு சூதத்தை வாங்கும் உரிமை அளிக்கப்படுகிறது. இப்பத்திரத்தை விற்றவருக்கு விற்கும் நிர்ப்பந்தம் உள்ளது.

"விற்றல் சூதம்" என்னும் பத்திரத்தை வாங்குபவர்க்கு சூதத்தை விற்கும் உரிமை அளிக்கப்படுகிறது. இப்பத்திரத்தை விற்றவருக்கு வாங்கும் நிர்ப்பந்தம் உள்ளது.

சூதங்களின் வர்த்தக முறைகளில் இரண்டு வகைகள் உண்டு. அமெரிக்க சூதங்களில் (American Options) ஒரு தேதி அல்லது அதற்கு முன்பு அவைகளை செயல்படுத்தலாம் (excercise). ஐரோப்பிய சூதங்கள் (European Options) ஒரு குறிப்பிட்ட தேதியில் மட்டும் செயல்படுத்தலாம்.

சூதங்களில் மேலும் ஒரு வகைபாடு உள்ளது. உன்மைச் சூதங்கள் (Real Options) மற்றும் வணிக சூதங்கள் (Traded Options). சூதங்களில் மேலும் ஒரு வகைபாடு உள்ளது. உன்மைச் சூதங்கள் (Real Options) மற்றும் வணிக சூதங்கள் (Traded Options). உன்மை சூதங்கள் ஒரு நிறுமத்தின் வர்த்த்க தீர்மானங்களுக்கு நிர்ப்பந்தமின்றி உரிமை அளிக்கின்றன (right but not obligation). வர்த்தகச் சூதங்கள் பங்கு மாற்றகங்களில் (stock exchange) பதிவான பிணையங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூதம்&oldid=3679653" இலிருந்து மீள்விக்கப்பட்டது