நையோபியம்(III) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நையோபியம்(III) குளோரைடு
இனங்காட்டிகள்
13569-59-0
ChemSpider 75410
EC number 236-985-0
InChI
  • InChI=1S/3ClH.Nb/h3*1H;/q;;;+3/p-3
    Key: VPDYSPXEGTXWEU-UHFFFAOYSA-K
  • InChI=1S/C4H10O2.3ClH.Nb/c1-5-3-4-6-2;;;;/h3-4H2,1-2H3;3*1H;/q;;;;+3/p-3
    Key: SBSZUBUHOUKQMN-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11542954
6096194
  • [Cl-].[Cl-].[Cl-].[Nb+3]
  • COCCOC.Cl[Nb](Cl)Cl
பண்புகள்
Cl3Nb
வாய்ப்பாட்டு எடை 199.26 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
அடர்த்தி 3.75
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
புறவெளித் தொகுதி P3m1
Lattice constant a = 6.744, c = 12.268
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நையோபியம்(III) குளோரைடு (Niobium(III) chloride) என்பது NbCl3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நையோபியமும் குளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. நையோபியம் முக்குளோரைடு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் சரியாக விவரிக்கப்படவில்லை என்றாலும் பல கூட்டுசேர் பொருட்கள் அறியப்படுகின்றன.

தயாரிப்பு[தொகு]

NbCl3(இருமெத்தாக்சியீத்தேன்)(3-எக்சைன் சேர்மத்தின் கட்டமைப்பு).[1]

நையோபியம்(V) குளோரைடை குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் அல்லது சூடுபடுத்துவதன் மூலம் Nb3Cl8 தயாரிக்கப்படுகிறது.

3-எக்சைன் முன்னிலையில் 1,4-டைசிலில்-சைக்ளோயெக்சாடையீனுடன் NbCl5 சேர்மத்தின் டைமெத்தாக்சியீத்தேன் கரைசலை உப்பு இல்லாத குறைப்பு வினைக்கு உட்படுத்தினால் NbCl3(இருமெத்தாக்சியீத்தேன்)(3-எக்சைன்) என்ற ஒருங்கிணைப்பு அணைவுச் சேர்மம் உருவாகிறது:

NbCl5 + C6H6(SiMe3)2 + C2Et2 + dme → NbCl3(dme)(C2Et2) + C6H6 + 2 Me3SiCl

நையோபியம்(III) குளோரைடு சேர்மத்தின் அசுத்தமான டைமெத்தாக்சியீத்தேன் கூட்டுசேர் பொருளானது முப்பியூட்டைல்வெள்ளீயம் ஐதரைடுடன் நையோபியம் பெண்டாகுளோரைடின் டைமெத்தாக்சியீத்தேன் கரைசலைக் குறைப்பதன் மூலம் தயாரிக்கப்பட்டது::[2]

NbCl5 + 2 Bu3SnH + MeOCH2CH2OMe → NbCl3(MeOCH2CH2OMe) + 2 Bu3SnCl

கட்டமைப்பு[தொகு]

Nb3Cl8 சேர்மத்தின் கட்டமைப்பு குளோரைடு அயனிகளின் அறுகோண நெருக்கப் பொதிவு வரிசையைக் கொண்டுள்ளது. குளோரைடு வரிசையில் எண்முக இடைவெளிகளில் நையோபிய முக்கோணங்கள் உருவாகின்றன. அதிக குளோரைடுகள் கொண்ட சேர்மங்களில் சில நையோபியம் அணுக்கள் கட்டமைப்பில் காணப்படுவதில்லை. இதனால் காலியிடங்கள் உருவாகி விகிதவியலற்ற சேர்மங்கள் உருவாகின்றன. நையோபியம் அணுக்கள் முக்கோணங்களாக உருவாகாமல் இணையாக இருக்கும் வரை NbCl4 சேர்மத்தில் இந்த மாதிரியான காலியிடங்கள் இருக்கின்றன. எனவே NbCl3 ஆனது Nb3Cl8 மற்றும் Nb2Cl8 ஆகியவற்றின் திண்ம கரைசலாகக் கருதப்படுகிறது.[3]

நையோபியம்(III) குளோரைடு நிறம் நையோபியம்:குளோரைடு விகிதத்தைப் பொறுத்து மாறுபடும். NbCl2.67 பச்சை நிறத்திலும், NbCl3.13 பழுப்பு நிறத்திலும் இருக்கும்..[4]

வினைகள்[தொகு]

Nb2Cl6(SMe2)3 அணைவுச் சேர்மத்தின் கட்டமைப்பு.[5]

600 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கப்படும் போது நையோபியம் முக்குளோரைடு சேர்மம் நையோபியம் உலோகம் மற்றும் நையோபியம் பெண்டாகுளோரைடு என விகிதாசாரமற்று மாறுகிறது.

கூட்டுசேர் பொருள்கள்

NbCl3(டைமெத்தாக்சியீத்தேன்) கார்போனைல்கள் மற்றும் இமைன்களின் குறைப்பு இணைப்புக்கான வினைபொருளாக குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இது 1,2-டைமெத்தாக்சியீத்தேன் அணைவுச் சேர்மமாக விற்கப்படுகிறது. 1,4-டையாக்சேன் மற்றும் டை எத்தில் ஈதர் ஆகியவற்றிற்கும் Nb(III) கூட்டுசேர் பொருள்கள் அறியப்படுகின்றன.

நையோபியம்(III) குளோரைடு Nb=Nb இரட்டைப் பிணைப்புடன் Nb2Cl6Lx என்ற வாய்பாட்டுடன் சேர்மங்களின் வரிசையை உருவாக்குகிறது. மூவிணைய பாசுபீன்கள் மற்றும் ஆர்சீன்களுடன் உருவாகும் அணைவுச் சேர்மங்கள் ஈரெண்முகங்கள் விளிம்புகளை பகிர்ந்து கொள்கின்றன. உதாரணமாக Nb2Cl6(PPhMe2)4சேர்மத்தைக் கூறலாம். [6] ஒரு பாலமாகும் தயோயீத்தருடன் தயோயீத்தர்கள் கூட்டுசேர் பொருள்களை உருவாக்குகின்றன. முகங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த ஈரெண்முகங்கள் Nb2X6(R2S)3 (X = Cl, Br) என்ற வாய்பாட்டைக் கொண்டிருக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tsurugi, Hayato; Mashima, Kazushi (2019). "Salt-Free Reduction of Transition Metal Complexes by Bis(trimethylsilyl)cyclohexadiene, -dihydropyrazine, and -4,4′-bipyridinylidene Derivatives". Accounts of Chemical Research 52 (3): 769–779. doi:10.1021/acs.accounts.8b00638. பப்மெட்:30794373. 
  2. Pedersen, Steven F.; Hartung, Jack B.; Roskamp, Eric J.; Dragovich, Peter S. (1992). "Niobium(III) and (IV) Halide Complexes". Inorganic Syntheses. Vol. 28. pp. 119–123. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132609.ch28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132609.
  3. Cotton, F. Albert; Wilkinson, Geoffrey (1966). Advanced Inorganic Chemistry: A Comprehensive Text. John Wiley. p. 927.
  4. Gutmann, Viktor (1967). Halogen Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14847-4.
  5. Kakeya, Masaki; Fujihara, Takashi; Nagasawa, Akira (2006). "Di-μ-chloro-μ-(dimethyl sulfide)-bis[dichloro(dimethyl sulfide)niobium(III)]". Acta Crystallographica Section E 62 (3): m553–m554. doi:10.1107/S1600536806005149. Bibcode: 2006AcCrE..62M.553K. 
  6. Sharma, Sangeeta; Vermani, O. P.; Narula, A. K. (January 1996). "Synthesis and Structural Studies of Complexes of Niobium(III) Chloride with Ditertiary Phosphines". Indian Journal of Chemistry, Section A 35A (1). பன்னாட்டுத் தர தொடர் எண்:0975-0975. http://nopr.niscair.res.in/handle/123456789/41226. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபியம்(III)_குளோரைடு&oldid=3959534" இலிருந்து மீள்விக்கப்பட்டது