நீளத்தீவு (அந்தமான், நிக்கோபார் தீவுகள்)
![]() Interactive map of நீளத்தீவு Long Island | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | வங்காள விரிகுடா |
| ஆள்கூறுகள் | 12°23′N 92°56′E / 12.38°N 92.93°E |
| தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
| மேலாண்மை | |
| மக்கள்தொகையியல் | |
| மக்கள்தொகை | 1032 |
| மேலதிக தகவல் | |
| நேர வலயம் | |
| அஞ்சல் | 744203[1] |
| தொலைபேசிக் குறியீடு | 031927 [2] |
| ISO code | IN-AN-00[3] |
| அதிகாரபூர்வ இணையதளம் | www |
நீளத்தீவு (Long Island) என்பது இந்தியாவின் மத்திய ஆட்சிப்பகுதியான அந்தமான் தீவுக்கூட்டத்திலுள்ள ஒரு நீளமான தீவு ஆகும். இத்தீவு வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது.[4] இத்தீவானது அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரிலிருந்து வடக்கே 80 கி.மீ (50 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]இத்தீவு கிழக்கு பாரதாங் தீவுக்குழுவில் உள்ள தீவாகும். இது போர்லோப் தீவுக்கு கிழக்கே அமைந்துள்ளது.
நிர்வாகம்
[தொகு]அரசியல் ரீதியாக அந்தமானின் கிழக்கு பாராதாங் தீவுக்குழுவிலுள்ள ரங்கத் தாலுக்காவின் நிர்வாகப்பிரிவின் கீழ் நீளத்தீவு உள்ளது.[5]
மக்கட்தொகையியல்
[தொகு]இத்தீவில் மொத்தம் மூன்று கிராமங்கள் உள்ளன. நீளக்கிராமம், மத்திய கிராமம், மற்றும் லாலாஜி வளைகுடா ஆகியவற்றில் மக்கள் வசிக்கிறார்கள். இத்தீவின் வடமுனையான பர்கின்சன் முனையில் முன்னொரு காலத்தில் மனித குடியேற்றங்கள் இருந்தன. இத்தீவுக்கென தனியாக மின்சார நிலையம், படகு கட்டும் தளம், மேல்நிலைப்பள்ளி, வங்கிகள், கம்பில்லா தொலைத்தொடர்பு சேவைகள், வன காப்பக அலுவலகங்கள் மற்றும் புறக் காவல் நிலையம் ஆகியவை உள்ளன. இத்தீவிற்குச் செல்ல எந்தவொரு சாலை இணைப்பும் இல்லை.
போக்குவரத்து
[தொகு]இத்தீவிற்கு செல்ல படகுப்போக்குவரத்து வசதி மட்டுமே உள்ளது. போர்ட் பிளேரின் போனிக்ஸ் வளைகுடா படகுத்துறையிலிருந்தும் அல்லது ரங்கத்தின் எர்ராத்தா படகுத்துறையிலிருந்தும் வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்படும் இப்படகுச்சேவையை நம்பியே அப்பகுதி மக்கள் உள்ளனர்.[6]
சுற்றுலா
[தொகு]மார்க் வளைகுடா மற்றும் லால்ஜி வளைகுடா[7] ஆகிய இரண்டும் இத்தீவின் உல்லாசப் பயணத்தளங்களாக விளங்குகின்றன. கடற்கரை முகாமுக்கு அத்தீவு பொருத்தமான இடமாகும். உணவு விடுதிகளை வனத்துறை நிர்வகிக்கின்றது. [8] இத்தீவிற்கு அருகாமையிலுள்ள கித்தார் தீவும் சுற்றுலாவுக்கு பெயர்பெற்றதாக உள்ளது. [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on $123 March 2014. Retrieved 22 September 2016.
{{cite cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. Retrieved 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. Retrieved 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. Retrieved 2016-09-23.
- ↑
- ↑ "Lalaji Bay Beach, Long Island".
- ↑ "Official Website of Andaman & Nicobar Tourism -- A & N Administration -- India". www.andamans.gov.in.
- ↑ "Guitar Island, Andaman and Nicobar Islands".
