நீல பிடரி கிளி
நீல பிடரி கிளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பிளைத், 1842
|
இனம்: | சி. சையனுரசு
|
இருசொற் பெயரீடு | |
சிடினசு சையனுரசு (பார்சுடர் 1795)[2] |
நீல பிடரி கிளி (சிடினசு சையனுரசு) என்பது மியான்மர், தீபகற்ப தாய்லாந்து, மலேசியா, போர்னியோ, சுமத்ரா மற்றும் அருகிலுள்ள தீவுகளின் தெற்கு முனையில் காணப்படும் கிளி சிற்றினம் ஆகும்.
விளக்கம்
[தொகு]நீல பிடரி கிளி ஒரு சிறிய வகை கிளி (18 செ.மீ.) ஆகும். முதன்மையாக இது பச்சை நிறத்தில் பிரகாசமான சிவப்பு நிற கீழ்விரிகை உறைகளுடன், சிவப்பு நிற தோள்பட்டை மற்றும் இறக்கை உறைகளில் மஞ்சள் நிற ஓரங்களுடன் காணப்படும். பாலின வேறுபாடுகள் இச்சிற்றினத்தில் காணப்படும். பெண் கிளி சாம்பல்-பழுப்பு நிற தலையினைக் கொண்டுள்ளது. ஆணு கிளியின் தலையில் கருப்பு மேலங்கி, சிவப்பு மேல் தாடை மற்றும் நீல நிற தலை மற்றும் பிடரியினைக் கொண்டுள்ளது.
வகைப்பாட்டியல்
[தொகு]நீல பிடரி கிளி முன்னர் சிடினசு பேரினத்தின் ஒரே ஒரு சிற்றினமாகக் கருதப்பட்டது. ஆனால் பன்னாட்டுப் பறவை வாழ்க்கை அபோட்டியை துணையினத்தை சிமியூலு கிளி எனத் தனி சிற்றினமாக அங்கீகரித்தது. பன்னாட்டு பறவையிலாளர்கள் சங்கம் பின்னர் இதைப் பின்பற்றி, இதை ஒரு தனித்துவமான இனமாக ஆதரித்தது.[3][4]
துணையினங்கள்
[தொகு]இரண்டு துணையினங்கள் உள்ளன:
- சி. சி. சைனுரசு பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், போர்னியோ, சுமத்ரா.
- சி. சி. பொன்டியசு : சிபெருத் தெற்கே மொண்தாவி தீவுகள். பரிந்துரைக்கப்பட்ட துணையினங்களை விட பெரியது.
வாழிடமும் உணவும்
[தொகு]நீல பிடரி கிளி பொதுவாக 700 மீட்டருக்கு கீழ் உள்ள தாழ் நில காடு, திறந்த காடு, பழத்தோட்டங்கள் மற்றும் தோட்டங்கள், சதுப்புநிலங்கள், அடர்ந்த புதர்கள் மற்றும் தென்னந்தோப்புகளில் காணப்படுகிறது. இவை 20 பறவைகள் வரை கொண்ட மந்தைகளாக வாழ்கின்றன. இவை விதை, பழம் மற்றும் பூக்களை சாப்பிடுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Psittinus cyanurus". IUCN Red List of Threatened Species 2016: e.T22727599A94953803. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22727599A94953803.en. https://www.iucnredlist.org/species/22727599/94953803. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "Psittinus cyanurus" Integrated Taxonomic Information System. Retrieved October 12, 2011.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
- ↑ Birdlife datazone species factsheet Simeulue parrot
- Juniper & Parr (1998) Parrots: A Guide to Parrots of the World ;பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-07453-0 .
வெளி இணைப்புகள்
[தொகு]- ஓரியண்டல் பறவை படங்கள்: நீல நிறக் கிளி தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்