சிபெருத்

ஆள்கூறுகள்: 1°23′S 98°54′E / 1.383°S 98.900°E / -1.383; 98.900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிபெருத்
Siberut
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Mentawai Islands Topography.png" does not exist.
புவியியல்
அமைவிடம்தென் கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்1°23′S 98°54′E / 1.383°S 98.900°E / -1.383; 98.900
தீவுக்கூட்டம்மெந்தாவாய் தீவுகள்
பரப்பளவு4,030 km2 (1,560 sq mi)
நிர்வாகம்
Indonesia
மாகானம்மேற்கு சுமாத்திரா
பதிலாட்சிமெந்தாவாய் தீவுகள்
மக்கள்
மக்கள்தொகை2010 இல் 35,091
அடர்த்தி8.71 /km2 (22.56 /sq mi)
இனக்குழுக்கள்மெந்தாவாய்.மக்கள் தொகையில் 10% இந்தோனேசியாவின் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள்.


சிபெருத் (Siberut) இந்தோனேசியாவின் சுமாத்திராவிற்கு மேற்கில் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மெந்தாவாய் தீவுக்கூட்டத்தில் வடகோடியில் உள்ள மிகப்பெரியத் தீவு ஆகும். தீவின் பெரும்பகுதி மழைக்காடுகளால் மூடப்பட்டிருக்கும் என்றாலும் மரத்தொழிலுக்கு பெரிதும் உதவுகிறது. இந்தோனேசியாவின் ஒரு பகுதியான இத்தீவு மெந்தாவாய் மக்களின் முக்கியமான வாழ்விடமாகும்[1].

சிபெருத்திற்குத் தெற்கில் இருக்கும் பங்காலவுட் நீரிணையில் உள்ள சிறிய தீவுகளான கரமாத் , மசோகுத் தீவுகளும் இத்தீவிற்கு உட்பட்டவையாகும்.

மெந்தாவாய் கிப்பன்கள், பன்றிவால் அனுமான் குரங்கு, மெந்தாவாய் அனுமான் குரங்கு, மெந்தாவாய் நாட்டுக்குரங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான முதனி இனங்கள் வாழுமிடமாக இத்தீவு உள்ளது.

2014 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உருவான சுனாமிப் பேரலையால் இத்தீவும் பாதிக்கப்பட்டது. ஆனால், மனித உயிர்கள் இழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் அறியப்படவில்லை. ஆனால் இந்நில நடுக்கத்தின் விளைவாக தீவு இரண்டு மீட்டர்கள் உயர்ந்ததாக நம்பப்படுகிறது.

புவியியல்[தொகு]

சிபெருத் தீவில் வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த வெப்பமண்டல மழைக்காட்டுக் காலநிலை நிலவுகிறது. இத்தீவு ஆண்டிற்கு 4000 மில்லி மீட்டர் மழையைப் பெறுகிறது. வெப்பநிலை 22 முதல் 31 பாகை செல்சியசும், ஈரப்பதம் 81-85 சதவீதமும் கொண்டதாக இத்தீவு உள்ளது. கிழக்கு கடற்கரையில் பல தீவுகள், வளைகுடாக்கள், பவளப்பாறைகள் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு அகன்ற மாங்குரோவ் காடுகளால் சூழப்பட்டுக் காணப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து கிழக்கிந்தியப் பனைமரக் காடுகள் செறிந்துள்ளன.பூக்கும் தாவரவகையிலான பாரிங்டோனியா வகைக் காடுகள் தீவின் மேற்கு கடற்கரையில் காணப்படுகின்றன. கடினமான கடல்கள் மற்றும் செங்குத்தான பாறைகள் இப்பகுதியில் காணப்படுவதால் இக்காடுகளுக்குள் செல்வது மிகவும் கடினமாகும். 1260 அடி உயரமுள்ள மலைப்பாங்கான பகுதிகள் கானகத்தின் உட்புறம் காணப்படுகின்றன. இங்கிருந்து பல அருவிகள் தோன்றி சவ்வரி தோப்பு விளையும் தாழ்நிலங்கள் மற்றும் சதுப்பு நிலக்காடுகளில் பாய்ந்தோடுகின்றன. சில பகுதிகள் திப்டெரோகார்பாசியே வகையினக் காடுகளும் முதனிலைக் காடுகளாக உள்ளன.

பல்லுயிர் பெருக்கம்[தொகு]

கடையூழிக் காலந்தொட்டே சுந்தா அடுக்கிலிருந்து சிபெருத் தனிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இங்கு பெரணி பொன்ற 900 இனங்களைச் சேர்ந்த கடத்துத்திசு தாவரங்களும் ஆசிய மரநாய் போன்ற 31 வகையான பாலூட்டி இனங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள பாலூட்டிகளில் அறுபத்தைந்து சதவீதமும் பிற விலங்குகளில் பதினைந்து சதவீதமும் வகைப்பாட்டியல் நிலை அளவுக்கு தீவினுள் உட்பரவி சிபெருத் தீவை தனித்தன்மை மிக்கதாக மாற்றுகின்றன. இதேபோல இங்குள்ள 134 பறவை இனங்களில் 19 இனங்களளும், நான்கு வகையான முதனி இனங்களும் வகைப்பாட்டியல் நிலை அளவுக்கு தீவினுள் உட்பரவி நிலத்திணை பறவையாகவும் உயர் பாலூட்டியாகவும் மாறியுள்ளன[2]

சுற்றுச்சூழல்[தொகு]

1981 ஆம் ஆண்டி சிபெருத் ஒர் உயிர்க்கோளக் காப்பகமாக அங்கீஅரிக்கப்பட்டது. 1993 இல் தீவின் மேற்குப் பகுதியானது 736 சதுரமைல் அல்லது 1905 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஓர் உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள 70 சதவீதக் காட்டுப்பரப்பு மரம்வெட்டும் வணிகத் தொழிலுக்காக அனுமதிக்கப்பட்டது.

உள்ளூர் வளர்ச்சி மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டில், யுனெசுகோ நிறுவனம் சிபெருத் திட்டம் ஒரு புதிய திட்டத்தினை இக்கட்டத்தில் கொண்டு வந்தது. உள்ளுர் சமூகங்கள், இயற்கைப் பாதுகாப்புக் குழுக்கள், உள்ளூர் அரசாங்கப் பிரிவு ஆகியவர்களிடையே ஒரு கூட்டுக்குழுவை உருவாக்குவதற்கு இத்திட்டம் முனைந்தது. இந்த தொலைநோக்கு அணுகுமுறை உள்ளூரில் பிரபலமாகக் கருதப்பட்டாலும், ஊழலும் திறமை குன்றிய ஆட்சித்திறனும் சட்டத்துக்குப் புறம்பாக மரம்வெட்டுதலை வளர்த்து விட்டன[3]

கலாச்சாரம்[தொகு]

வட சுமத்ராவைச் சேர்ந்த பதக் இன மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிபெருத்தில் வந்து குடியேறியிருக்கலாம் என்று சில மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள். இவர்களே இத்தீவில் குடியேறிய முதலாவது மனிதராககள் என்றும் இவர்கள் நம்புகிறார்கள்[4]. எனினும், தீவில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றில் கணிசமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இரீமர் சிக்கிபோல்டு என்ற சுவிசு நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் சிபெருத் தீவைச் சேர்ந்த சாகுத்தை என்ற இனக்குழுவுடன் சிலகாலம் வாழ்ந்து பார்த்துள்ளார்[5].

தீவின் மேற்குப் பகுதியில், உமா என அழைக்கப்படும் நீண்ட பாரம்பரிய வீடுகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ryan Ver Berkmoes, Celeste Brash, Muhammad Cohen, Mark Elliott, Guyan Mitra, John Noble, Adam Skolnick, Iain Stewart, Steve Waters (2010). Lonely Planet Indonesia: Travel Guide (illustrated ). Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-742203485. https://books.google.com/books?id=4GMBFsaFNN4C&pg=PA425&dq=siberut+mentawai&hl=en&sa=X&ved=0ahUKEwih94qwuqLLAhUW4GMKHePpCBQ4ChDoAQglMAA#v=onepage&q=siberut%20mentawai&f=false. 
  2. Siberut World Biosfer
  3. "Business as usual in the Mentawais", in Down to Earth, no.50, August 2001
  4. "Siberut Island". indonesia-tourism.com. பார்க்கப்பட்ட நாள் 1 November 2010.
  5. McNeely, Jeffrey A.; Sochaczewski, Paul Spencer (1995). Soul of the tiger: searching for nature's answers in Southeast Asia. University of Hawaii Press. பக். 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8248-1669-2. https://books.google.com/books?id=U8wlr690kacC&pg=PA161. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபெருத்&oldid=2147652" இலிருந்து மீள்விக்கப்பட்டது