நீலத்தலைப் பூங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலத்தலைப் பூங்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மாண்டிக்கோலா
இனம்:
M. cinclorhyncha
இருசொற் பெயரீடு
Monticola cinclorhyncha
(விகோர்சு, 1831)
வேறு பெயர்கள்

Monticola cinclorhynchus

நீலத்தலைப் பூங்குருவி ( Monticola cinclorhyncha ) என்பது என்பது மஸ்சிகாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனமாகும்.

விளக்கம்[தொகு]

மோலெம், கோவா, இந்தியா நவம்பர் 1997

ஆண் பறவைக்கு தலை, கன்னம், தொண்டை ஆகியவை நீல நிறத்தில் இருக்கும். எஞ்சிய உடலின் மேற்பகுதி நீலமும் கறுப்புங் கலந்து காட்சியளிக்கும். பிட்டமும் அடிப்பகுதியும் நல்ல செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இறக்கையில் ஒரு வெள்ளைத் திட்டு காணப்படும், அது பறக்கும் போது தெரியும். பெண் பறவையின் உடலின் மேற்பகுதி வெளிர் மஞ்சளாக ஆலிவ் நிறங் கலந்து காணப்படும். தலையின் பக்கங்கள் பழுப்பாக இறக்கைகள் மங்கிய கருப்பு நிறக்கோடுகளோடு காட்சியளிக்கும். கன்னமும் தொண்டையும் செம்மஞ்சள் தோய்ந்த வெண்மையாக இருக்கும். மார்பும் வயிறும் வெண்மையாகச் செதில்கள் போன்ற பழுப்புநிறக் கறைகள் கொண்டிருக்கும். [2][3]

பரவலும் இனப்பெருக்கமும்[தொகு]

நீலத்தலைப் பூங்குருவி இமயமலையின் அடிவாரத்திலும், தென்னிந்தியாவின் மலைக் காடுகளிலும் குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. குளிர்காலத்தில் இது பாக்கித்தான், வங்காளதேசம் (செல்லும் வழியில்), மியான்மர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகள், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படுகிறது.

நடத்தை[தொகு]

தனித்துக் காடுகள், காபித் தோட்டங்கள், மூங்கில் புதர்கள் ஆகியவற்றுக்கு இடையே கிளைகளில் அமர்ந்திருக்கக் காணலாம். புழு, பூச்சிகள், தவளை, ஒணான் போன்றவற்றைக் காண்டால் பாய்ந்து வேட்டையாடி பின்னர் மீண்டும் பழைய இடத்திற்குத் திரும்பி வந்தமரும். தரையில் இரைதேடும் பூங்குருவிப் போலச் சருகுகளிடையேயும், தழைக்கூளங்களிடையேயும் இரை தேடும். எதாவது தொந்தரவு நேர்ந்தால் விரைந்து கிளைகளுக்குள் பாய்ந்து பறக்கும்.[3] இது ஆப்கானித்தானின் சில பகுதிகளிலும், பாக்கித்தானிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வரையிலான இமயமலைப் பகுதிகளிலும் கோடைகாலத்தில் செல்கிறது. கோடையில் இது பைன் காடுகள் மற்றும் மலைச் சரிவுகளில் காணப்படுகிறது. குளிர்காலத்தில் இது அடர்ந்த காடுகளில் காணப்படும். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2019). "Monticola cinclorhyncha". IUCN Red List of Threatened Species 2019: e.T22708271A155602124. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22708271A155602124.en. https://www.iucnredlist.org/species/22708271/155602124. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. The Book of Indian Birds. 1996. 
  3. 3.0 3.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 462-463. 
  4. Rasmussen, P and Anderton, J. C. (2005) Birds of South Asia.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Monticola cinclorhyncha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலத்தலைப்_பூங்குருவி&oldid=3817917" இலிருந்து மீள்விக்கப்பட்டது