உள்ளடக்கத்துக்குச் செல்

நீலக்காது மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலக்காது மீன்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
அல்செடினிடே
பேரினம்:
இனம்:
அ. மெனிந்திங்கு
இருசொற் பெயரீடு
அல்சிடோ மெனிந்திங்கு
(கோர்சூபீல்டு, 1821)

நீலக்காது மீன்கொத்தி (Blue-eared kingfisher, அல்சிடோ மெனிந்திங்கு) என்பது ஆசியாவில், இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் காணப்படும் ஒரு மீன் கொத்தி ஆகும். இது முக்கியமாக அடர்ந்த நிழலார்ந்த காடுகளில் இப்பறவை காணப்படுகிறது. அங்கு இது சிறிய நீரோடைகளில் வேட்டையாடுகிறது. இது இருண்ட உச்சியும், இருண்ட பழுப்பு அடிப்பகுதிகளுடன் காணப்படுகிறது. தோற்றத்தில் பொதுவாக சிறு நீல மீன்கொத்தியை (அல்சிடோ அத்திசு) ஒத்திருக்கும் ஆனால் அதற்கு உள்ள புழுப்பு காதுப் பட்டை இதற்கு இல்லை. இது பெரும்பாலும் திறந்த வெளி வாழ்விடங்களில் காணப்படுகிறது. அளவிலும், வண்ணத் திட்டுகளிலும் வேறுபடும் பல கிளையினங்கள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. முதிர்ந்த ஆண் பறவைகளுக்கு முழுவதும் இருண்ட அலகு இருக்கும், பெண் பறவைகளுக்கு சிவப்பு நிறத்தில் கீழ் தாடை இருக்கும்.

வகைபிரித்தல்[தொகு]

1821 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்கை ஆர்வலர் தாமஸ் ஹார்ஸ்ஃபீல்டால் நீலக்காது மீன்கொத்தி விவரிக்கப்பட்டது மேலும் அதன் தற்போதைய இருசொல் பெயரான அல்சிடோ மெனிண்டிங் என்ற பெயர் இடப்பட்டது. [2] அல்சிடோ என்ற பெயர் இலத்தீன் மொழியில் "மீன்கொத்தி" என்பதாகும். மெனிண்டிங் என்ற குறிப்பிட்ட அடைமொழியானது இனத்திற்கான சாவக மொழிச் சொல்லாகும். நீலக்காது மீன்கொத்தி ஆல்சிடோ பேரினத்தில் உள்ள ஏழு இனங்களில் ஒன்றாகும், மேலும் இது பிளைத்தின் மீன்கொத்தியுடன் ( அல்சிடோ ஹெர்குலஸ் ) மிகவும் நெருக்கமாக தொடர்புடையது. [3] [4]

இதன் பரவலான வாழிட வரம்பில் காணப்படும் இப்பறவைகளிளில் உள்ள இறகு மாறுபாடுகளைக் கொண்டு துணை இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [3]

  • A. m. coltarti பேக்கர் இசிஎஸ், 1919 – நேபாளம், வடகிழக்கு இந்தியா, வடக்கு தாய்லாந்து மற்றும் இந்தோசீனா
  • A. m. phillipsi Baker ECS, 1927 - தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கை
  • A. m. scintillans Baker ECS, 1919 - தெற்கு மியான்மர் மற்றும் தாய்லாந்து
  • A. m. rufigastra வால்டன், 1873 - அந்தமான் தீவுகள்
  • A. m. meninting Horsfield 1821 - தெற்கு மலாய் தீபகற்பம், போர்னியோ, தெற்கு பிலிப்பைன்ஸ், சுமாத்திராவின் மேற்கு கடற்கரையில் உள்ள தீவுகள், சாவகம், உலொம்போ, சுலாவெசி, பாங்காய் மற்றும் சுலா தீவுகள் .

verreauxii, callima, subviridis, proxima போன்ற வேறு சில கிளையினங்கள் போதுமான அளவு வேறுபட்டதாகக் கருதப்படவில்லை.

அசாமின் கவுகாத்தியில் காணப்பட்ட நீலக்காது மீன்கொத்தி (ஆண்).

விளக்கம்[தொகு]

நிழலாடிய வன நீரோடைகளை வழக்கமான வாழ்விடமாக கொண்ட, A. m. phillipsi

இந்த மீன் கொத்தி 16 சென்டிமீட்டர்கள் (6.3 அங்) நீளம் கொண்டது. இது கிட்டத்தட்ட சிறு நீல மீன்கொத்தியுடன் ( அல்சிடோ அத்திஸ் ) ஒத்துள்ளது. ஆனால் நீல காது போர்வை இறகுகள், இருண்ட அதிக அடர்த்தியான கோபால்ட்-நீல மேல் பகுதிகள் மற்றும் அடர் செம்பழுப்பான கீழ் பகுதிகளால் இது வேறுபடுகிறது. இளம் நீலக்காது மீன்கொத்திகளுக்கு சிறு நீல மீன்கொத்திகளைப் போலவே காது போர்வை இறகுகள் உள்ளன. மேலும் பொதுவாக தொண்டை மற்றும் மார்பகத்தின் மேல் சில மச்சங்களைக் கொண்டுள்ளது, இது பறவை முதிர்ச்சியடைந்தவுடன் மறைந்துவிடும். இளம் பறவைகள் வெண்மையான நுனிகளுடன் சிவப்பு நிறத்தில் அலகைக் கொண்டிருக்கும்.

பரவலும் வாழ்விடமும்[தொகு]

இந்த இனத்தின் வாழிட எல்லை மேற்கில் இந்தியாவிலிருந்து, கிழக்கு நோக்கி நேபாளம், பூட்டான், வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா வரை நீண்டுள்ளது. இதன் வழக்கமான வாழ்விடம் அடர்ந்த பசுமையான காடுகளில் உள்ள குளங்கள் அல்லது நீரோடைகள் ஆகும். சில நேரங்களில் 1,000 மீட்டர்கள் (3,300 அடி) உயரதிற்கு கீழே அமைந்துள்ள சதுப்புநிலங்களும் ஆகும்.

நடத்தையும் சூழலியலும்[தொகு]

நீலக்காது மீன்கொத்திகள் பெரும்பாலும் அதன் வாழிட எல்லைக்குள் வாழ்கின்றன. இவை பொதுவாக நீரோடைக்கு மேலே உள்ள அடர்த்தியான நிழலுள்ள கிளைகளில் அமர்ந்திருக்கும். அங்கிருந்து இவை தட்டாரப்பூச்சி மற்றும் மீன்கள் போன்ற இரைகளைப் பிடிக்க கீழே செங்குத்தாக பாயும். வெட்டுக்கிளிகள், கும்பிடுப்பூச்சிகள் உள்ளிட்ட பிற பூச்சிகளை இது உண்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. [5]

இந்தியாவில் இதன் இனப்பெருக்க காலம் பொதுவாக மே முதல் சூன் வரை என்றாலும் வட இந்தியாவிலும், தென்மேற்கு இந்தியாவிலும் சனவரி ஆகும். இப்பறவைகள் காட்டில் உள்ள ஓடைக் கரையில் ஒரு மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை அமைத்து அதில் கூடு அமைக்கின்றன. அங்கு சுமார் ஐந்து முதல் ஏழு வெள்ளை நிற முட்டைகளை இடுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Alcedo meninting". IUCN Red List of Threatened Species 2016: e.T22683042A92974788. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683042A92974788.en. https://www.iucnredlist.org/species/22683042/92974788. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Thomas Horsfield (1821). "Systematic arrangement and description of birds from the island of Java". Transactions of the Linnean Society of London. Series 1 13: 133–200 [172]. doi:10.1111/j.1095-8339.1821.tb00061.x. https://biodiversitylibrary.org/page/754905. 
  3. 3.0 3.1 Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
  4. Andersen, M.J.; McCullough, J.M.; Mauck III, W.M.; Smith, B.T.; Moyle, R.G. (2017). "A phylogeny of kingfishers reveals an Indomalayan origin and elevated rates of diversification on oceanic islands". Journal of Biogeography 45 (2): 1–13. doi:10.1111/jbi.13139. 
  5. Henri Jacob Victor Sody, 1892-1959: His Life and Work. Brill Archive.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alcedo meninting
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலக்காது_மீன்கொத்தி&oldid=3786441" இலிருந்து மீள்விக்கப்பட்டது