நா. சே. ச. இந்துக் கல்லூரி, சங்கனாச்சேரி

ஆள்கூறுகள்: 9°27′10″N 76°32′25″E / 9.4528°N 76.5403°E / 9.4528; 76.5403
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நா. சே. ச. இந்துக் கல்லூரி, சங்கனாச்சேரி
குறிக்கோள்तमसो मा ज्योतिर्गमय
குறிக்கோள் ஆங்கிலத்தில்இருளிலிருந்து ஒளியை நோக்கி என்னை இட்டுச்செல்
நிறுவப்பட்டது1947; 77 ஆண்டுகளுக்கு முன்னர் (1947)
வகைநிதியுதவிக் கல்லூரி
இணைப்புகள்மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
கல்லூரி முதல்வர்எசு. சுஜாதா
அமைவுசங்கனாச்சேரி, கோட்டயம் மாவட்டம், கேரளம்
இணையதளம்www.nsshinducollege.org

நா. சே. ச. இந்துக் கல்லூரி, சங்கனாச்சேரி (NSS Hindu College, Changanassery) கேரளாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது 1947-ல் பாரத கேசரி மன்னத்து பத்மநாபனால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் அமைந்துள்ளது. இந்துக் கல்லூரி நாயர் சேவை சங்கத்தின் ஒரு நிறுவனமாகும்.[1]

வரலாறு[தொகு]

நா. சே. ச. இந்துக் கல்லூரி நாயர் சேவைச் சமூகத்தின் முதல் கல்லூரியாகும், மேலும் இது 1947-ல் உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய நிறுவனமாகும். கேரள சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் நன்கு அறியப்பட்ட நாயர் சேவை சமூக நிறுவனர் மன்னத்து பத்மநாபனின் புகழ்பெற்ற பார்வை மற்றும் நோக்கங்களை இக்கல்லூரி எடுத்துக்காட்டுகிறது. 1956ஆம் ஆண்டு இந்தியக் துணைத் தலைவர் இராதாகிருஷ்ணனால் இக்கல்லூரி முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவிதாங்கூர் மகாராஜா சித்திரைத் திருநாள் பலராம வர்மனால் கொடி ஏற்றி வைத்துத் துவக்கி வைக்கப்பட்டது.[2] இக்கல்லூரி கட்டிடத்தை உத்தரப்பிரதேச ஆளுநர் கே. எம். முன்ஷி முறைப்படி திறந்து வைத்தார்.[3]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

  • ஆச்சார்யா நரேந்திர பூசண், தத்துவவாதி, எழுத்தாளர்
  • அம்பலப்புழா கோபகுமார், எழுத்தாளர்
  • ரமேஷ் சென்னிதலா, அரசியல்வாதி, முன்னாள் கேரள உள்துறை அமைச்சர்
  • ராஜீவ் பிள்ளை, நடிகர்
  • பிரபா வர்மா, எழுத்தாளர்
  • நெடுமுடி ஹரிகுமார், எழுத்தாளர்
  • ஈழச்சேரி ராமச்சந்திரன், எழுத்தாளர்
  • ஜனார்த்தனன்
  • பார்வதி ஜெயராம், நடிகர்
  • சுரேஷ் குருப், அரசியல்வாதி
  • பிரவீணா, நடிகர்
  • கணேஷ் புதூர், எழுத்தாளர், சாகித்திய அகாதமி யுவ புரஸ்கார் விருது பெற்றவர்
  • டோனி மேத்யூ
  • ஜி. மார்த்தாண்டன்
  • ஜெயகிருஷ்ணன்
  • திவ்யா பத்மினி
  • ஜானி ஆண்டனி, நடிகர், இயக்குநர்
  • ஸ்வரூப் பிலிப்
  • விஷ்ணு நாராயண்

மேற்கோள்கள்[தொகு]

  1. V. Balakrishnan & R. Leela Devi, 1982, Mannathu Padmanabhan and the revival of Nairs in Kerala, Vikas Publishing House, New Delhi.
  2. Mahaanaaya Mannathu Padmanabhan - Prof Geethalayam Geethakrishnan, Publisher:Kurukshethra Prakasan
  3. Title Reminiscences of My Life Author Mannathu Padmanabhan Translated by Pisharikovil Chandrasekhara Menon Contributor Kerala (India). Dept. of Cultural Publications Publisher Cultural Publications Department, Government of Kerala, 2003 Original from the University of Michigan Digitized 20 Jul 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186365984 Length 264 pages