சித்திரைத் திருநாள் பலராம வர்மன்
சர் சித்திரைத் திருநாள் பலராம வர்மன் | |||||
---|---|---|---|---|---|
திருவிதாங்கூரின் மகாராஜா திருவிதாங்கூர்-கொச்சியின் அரசப்பிரதிநிதி | |||||
அரச உடையில் மகாராஜா சித்திரைத் திருநாள் பலராம வர்மன் | |||||
ஆட்சிக்காலம் | 1924 மார்ச் 7 – 1949 சூலை 1 | ||||
முடிசூட்டுதல் | 1924 ஆகத்து 7 | ||||
முன்னையவர் | மூலம் திருநாள் | ||||
பிரதிநிதி | பூராடம் திருநாள் சேது லட்சுமி பாயி (1924–31) | ||||
பின்னையவர் | முடியாட்சி ஒழிக்கப்பட்டது உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் (பட்டம்) | ||||
பிறப்பு | திருவிதாங்கூர் | 7 நவம்பர் 1912||||
இறப்பு | 20 சூலை 1991 திருவனந்தபுரம் | (அகவை 78)||||
| |||||
மரபு | வேணாடு சொரூபம் | ||||
தந்தை | கிளிமானூர் இரவி வர்மன் | ||||
தாய் | அம்மா மகாராணி மூலம் திருநாள் சேது பார்வதிபாயி |
சிறீபத்மநாபதாச சிறீ சித்திரைத் திருநாள் பலராம வர்மன் (Sree Padmanabhadasa Sree Chithira Thirunal Balarama Varma) சித்திரைத் திருநாள் என்று பிரபலமாக அறியப்பட்ட (1912 நவம்பர் 7 - 1991 சூலை 20) இவர் தென்னிந்தியாவில் 1949 வரை திருவிதாங்கூர் மாநிலத்தின் கடைசி ஆளும் மகாராஜாவாகவும், பின்னர் 1991 வரை திருவிதாங்கூரின் மகாராஜா என்ற பட்டத்துடன் இருந்தார்.[1] இவர் திருவிதாங்கூரைச் சேர்ந்த இளைய மகாராணி, சேது பார்வதி பாயி, கிளிமானூர் அரசக் குடும்பத்தின் பூரம் நாள் இரவி வர்மா கோயி தம்புரான் ஆகியோரின் மூத்த மகனாவார். இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்றார். 1924 ஆம் ஆண்டு ஆகத்து 7 ஆம் தேதி தனது மாமா மூலம் திருநாள் மகாராஜாவின் மரணத்தின் பின்னர், தனது 12 வயதில் திருவிதாங்கூர் மகாராஜா ஆனார். இவர் தனது தாய்வழி அத்தையான சேது லட்சுமி பாய் (1924–31), என்பவரின் கீழ் தனக்கு உரிய வயது வரும் வரையிலும் பின்னர், 1931 நவம்பர் 6 அன்று முழு அதிகாரங்களுடன் ஆட்சி புரிந்தார்.[2]
ஆட்சிக்காலம்
[தொகு]சித்திரைத் திருநாளின் ஆட்சிக் காலம் பல பக்க முன்னேற்றத்தைக் கண்டது. இவர் இப்போது பிரபலமாக இருக்கும் கோவில் நுழைவுப் பிரகடனத்தை 1936 இல் இயற்றினார், 1937 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தை (இப்போது கேரள பல்கலைக்கழகம் ) நிறுவினார். சித்திரைத் திருநாளின் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூரின் வருவாயில் 40% கல்விக்காக ஒதுக்கப்பட்டதாக சாமுக்தா என்ற மகளிர் ஆய்வு இதழ் தெரிவித்துள்ளது.[3] திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், திருவிதாங்கூர் பொதுப் போக்குவரத்துத் துறை (இப்போது கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம், பள்ளிவாசல் நீர் மின்சாரத் திட்டம், திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனத்துக்கான நிறுவனம் போன்றவை நிறுவப்பட்டன. ஏ. சிறீதர மேனன் போன்ற வரலாற்றாசிரியர்கள் திருவிதாங்கூரின் தொழில்மயமாக்கலுக்காகவும் இவருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.[4]
விமர்சனம்
[தொகு]ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 1946 இல் நடந்த புன்னப்பரா-வயலார் போராட்டம் நூற்றுக்கணக்கான பொதுவுடமைக் கட்சித் தொழிலாளர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. 1947 இல் ஒரு சுயாதீன திருவிதாங்கூர் அறிவிக்கப்பட்டது. அவரது திவான் சர் சி.பி.ராமசாமி ஐயருக்கு அதிக அதிகாரத்தையும் அனுமதித்தது. இது சித்திரை திருநாளின் ஆட்சியின் எதிர்மறை அம்சங்களாகும்.[5]
இந்தியாவுடன் இணைதல்
[தொகு]1947 ஆகத்து 15, அன்று ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததும், இவர் ஆரம்பத்தில் தனது ஆட்சிப் பகுதியை ஒரு சுதந்திர நாடாக வைத்திருக்க நினைத்தார். இது இந்திய அரசால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதால், மகாராஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இறுதியாக 1949 இல் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இவர் திருவிதாங்கூரை அதிகாரப்பூர்வமாக இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இணைக்க ஒப்புக்கொண்டார். 1949 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் கொச்சியுடன் ஒன்றிணைந்தது. சித்திரை திருநாள் திருவிதாங்கூர்-கொச்சி ஒன்றியத்தின் முதல் மற்றும் ஒரே அரசப் பிரதிநியாக (ஆளுநருக்கு சமமானவர்) 1949 சூலை 1 முதல் 1956 அக்டோபர் 31 வரை பணியாற்றினார்.[6] 1956 நவம்பர் 1 அன்று மாநிலத்தில் திருவிதாங்கூர்-கொச்சி ஒன்றியத்தில் மலையாள மொழி பேசும் பகுதிகளை மலபாருடன்ஒன்றிணைப்பதன் மூலம் கேரளா என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது.[7]
இறப்பு
[தொகு]இவர் தனது 78 வயதில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர், ஒன்பது நாட்கள் கோமாவில் விழுந்து 1991 சூலை 20 இல் இறந்தார்.
அறக்கட்டளை
[தொகு]இவர் வழங்கிய நிதி, நிலம், கட்டிடங்களைப் பயன்படுத்தி சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உட்பட, பல தொண்டு அறக்கட்டளைகள் நிறுவப்பட்டன. இந்தியாவின் 10 வது இந்தியக் குடியரசுத் தலைவராக பதவியேற்ற கே.ஆர்.நாராயணனின் இளமைக் காலத்தில் அவரது உயர் கல்விக்கும் இவர் நிதியுதவி வழங்கினார்.[8][9][10]
மேலும் காண்க
[தொகு]- ஜி. வி. ராஜா
- கேரளப் பல்கலைக்கழகம்
- சி.பி.ராமசாமி அய்யர்
- வைக்கம் போராட்டம்
- கோயில் நுழைவுப் பிரகடனம்
- திருவிதாங்கூர் ரூபாய்
- திருவாங்கூர்-கொச்சி
- சுதேச அரசு
குறிப்புகள்
[தொகு]- ↑ . 17 December 2013.
- ↑ Arun, Mohan. "Sree Chithira Thirunal Balarama Varma Maharaja Travancore History". etrivandrum.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2014.
- ↑ "Royal Contributions to Education in Travancore" by SAMYUKTA A Journal of Women Studies
- ↑ The State forged ahead in industrialization and had several industries—cement, fertilizers, chemicals, ceramics, paper, etc. THE STORY OF THE INTEGRATION OF THE INDIAN STATES by V. P. Menon, p. 189
- ↑ Manorama Yearbook 2011; ISSN 0970-9096
- ↑ V.P., Menon (1955). THE STORY OF THE INTEGRATION OF THE INDIAN STATES. p. 189.
- ↑ "THE HIGH COURT OF TRAVANCORE-COCHIN" http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/4175/7/07_chapter%202.pdf
- ↑ celebritiesinfos, .com. "President K R Narayanan". Archived from the original on 16 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The kingdom paid for the education of a poor Dalit [untouchable] boy called KR Narayanan and funded his scholarship to London School of Economics. Mr Narayanan became the first Dalit president of India in 1997." BBC News SOUTH ASIA
- ↑ bbc.co, .uk. "The feisty Indian kings and their temple treasure". https://www.bbc.co.uk/news/world-south-asia-14063061. பார்த்த நாள்: 29 March 2016.