பார்வதி ஜெயராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்வதி ஜெயராம்
Parvathi actress.jpg
பிறப்புஅஸ்வதி குருப்
4 ஏப்ரல் 1970 (1970-04-04) (அகவை 50)
திருவல்லா, கேரளம்
இருப்பிடம்வளசரவாக்கம், தமிழ்நாடு
தேசியம் இந்தியா
செயல்பட்ட 
ஆண்டுகள்
1986 – 1993
பெற்றோர்இராமச்சந்திர குருப், பத்மா பாய்
வாழ்க்கைத்
துணை
ஜெயராம் (நடிகர்) (1992 முதல் தற்போது வரை)
பிள்ளைகள்காளிதாசு ஜெயராம் (பிறப்பு.1993)[1]
மாளவிகா ஜெயராம்[2]

பார்வதி ஜெயராம் (Parvathy Jayaram) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த விருது பெற்ற திரைப்பட நடிகையாவார். இவரது உண்மையான பெயர் அஸ்வதி என்பதாகும். பார்வதி மலையாள சினிமா துறையின் பிரபலமான நடிகையாகவும் மற்றும் 1987 மற்றும் 1996 க்கு இடையில் திரைப்படங்களில் தீவிரமாக இருந்தார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் "அம்ருதம் காமயா", "ஓரு மின்னாமினுஜினே நூருங்கு வெட்டம்" மற்றும் "கிரீடம்" ஆகியவை அடங்கும். பின்னர் மலையாள திரைப்பட நடிகர் ஜெயராம் என்பவரை மணந்தார், இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்தார்.

தனது மேடைப் பெயரான பார்வதி என்றப் பெயரால் நன்கு அறியப்பட்ட இவர், ஒரு இந்திய திரைப்பட நடிகையும் மற்றும் பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார். [3]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

திருவல்லாவில் இராமச்சந்திர குருப் மற்றும் பத்மா பாய் ஆகியோருக்கு மூன்று குழந்தைகளில் அஸ்வதி குருப் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை ஆலப்புழாவில் சம்பாகுளம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தாய் திருவல்லாவின் காவியூர் நகரைச் சேர்ந்தவராவார். இவருக்கு ஜோதி என்ற ஒரு மூத்த சகோதரி இருக்கிறார். மேலும் தீப்தி என்ற ஒரு தங்கை இறந்துவிட்டார். பார்வதி திருவல்லாவின் தேவஸ்வம் போர்டு மேல்நிலைப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவரது தாயார் இவர் படித்த அதே பள்ளியில் கணித ஆசிரியராக இருந்தார். [4] இவர் சங்கநாசேரியிலுள்ள என்.எஸ்.எஸ். இந்து கல்லூரியில் பட்டம் பெற்றார். இயக்குனர் லெனின் ராஜேந்திரன் இவரைக் கண்டுபிடித்தார். இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் வெளியிடப்படவேயில்லை. பின்னர். தனது 16 வயதில் பாலச்சந்திர மேனன் இயக்கிய விவாஹிதரே இதிஹைலி என்றத் திரைப்படத்தில் (1986) நடித்தார்.

திரைப்படம்[தொகு]

பார்வதி 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும் மலையாளத் திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக இருந்தார். இவரது முதல் திரைப்படத்தை லெனின் ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். ஆனால் அது வெளியிடப்படவில்லை. 1986ஆம் ஆண்டில் விவாகிதரே இத்திலே என்றத் திரைப்படத்தின் மூலம் நடிகரும், இயக்குனருமான பாலச்சந்திர மேனன் என்பவரால் இவர் நடிப்புத்தொழிலுக்கு அறிமுகமானார். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் அம்ருதம் காமயா, ஓரு மின்னாமினுங்கிண்டே நூருங்குவெட்டம், தூவநதும்பிகல் (1987), பொன்முட்டாயதுன்ன தரவு (1988), வடக்குனொக்கியந்த்ரம், பெருண்ணாபுரதே விசேசங்கள் மற்றும் கிரீடம் (1989) ஆகியவை அடங்கும்.

சொந்த வாழ்க்கை[தொகு]

பார்வதி திரைப்பட நடிகர் ஜெயராமை மணந்தார். 1992 செப்டம்பர் 7 அன்று எர்ணாகுளத்தின் டவுன் ஹாலில் இவர்களது திருமணம் நடைப்பெற்றது. பல படங்களில் நடித்திருந்த பார்வதி ஜெயராமுடன் தனது திருமணத்திற்குப் நடிப்பதை விட்டுவிட்டார். [5] இவர் இப்போது தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மாளவிகா ஜெயராம் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பார்வதி தனது வருங்கால கணவர் ஜெயராமை 1988ஆம் ஆண்டில் ஆலப்புழாவில் உள்ள உதயா அரங்கில் அபரன் என்ற மலையாளத் திரைப்பட விழாவில் சந்தித்தார். 1992 செப்டம்பர் 7 அன்று நடந்த திருமணத்திற்குப் பிறகு, பார்வதி நடிப்பை நிறுத்திவிட்டார். பின்னர், இதனால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறினார். [6] [7]

இந்த தம்பதிக்கு காளிதாஸ் ஜெயரம் மற்றும் மாலவிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். காளிதாஸ் ஜெயராம் சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை என்டீ வீடு அப்புவின்டியம் (2003) திரைப்படத்திற்காக வென்றார், இதில் அவர் தனது தந்தை ஜெயராமுடன் இணைந்து நடித்திருந்தார். [6] தற்போது, இவர் குடும்பத்துடன் தமிழ்நாட்டின் வளசரவாக்கத்தில் வசிக்கிறார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Kalidasan starts shooting on Jayaram's birthday - Times of India". மூல முகவரியிலிருந்து 7 February 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 March 2018.
  2. "Malavika Jayaram, daughter of actors Jayaram and Parvathy, enters the fashion world". The Hindu. பார்த்த நாள் 2020-03-02.
  3. "Infocus - Parathy Jayaram". மூல முகவரியிலிருந்து 3 March 2011 அன்று பரணிடப்பட்டது.
  4. "Katha Ithuvare with Parvathy". Mazhavil Manorama. மூல முகவரியிலிருந்து 24 March 2016 அன்று பரணிடப்பட்டது.
  5. "How male superstars have an uninterrupted run, wonders Parvathy Jayaram" (20 January 2013). மூல முகவரியிலிருந்து 24 September 2016 அன்று பரணிடப்பட்டது.
  6. 6.0 6.1 "He is an instant story-maker: Parvathy". மூல முகவரியிலிருந்து 4 March 2016 அன்று பரணிடப்பட்டது.
  7. "'പ്രിയപ്പെട്ട പാര്‍വതി; ഞാന്‍ കലാഭവനിലെ മിമിക്രി ആര്‍ട്ടിസ്റ്റാണ്, പേര് ജയറാം' | Parvathy Jayaram love story malayalam celebrity couple actors kalidas jayaram movies films". Mathrubhumi.com (2019-07-25).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_ஜெயராம்&oldid=2930586" இருந்து மீள்விக்கப்பட்டது