நம்ருதா ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்ருதா ராய் (Namrrta Raai) இவர் ஓர் இந்திய பாரம்பரிய கதக் நடனக் கலைஞரும் மற்றும் நடன இயக்குனருமாவார். இவர் மறைந்த டாக்டர் மதுகர் ஆனந்த் [1] மற்றும் பண்டிட் உதய் மஜும்தார் ஆகியோரின் சீடராவார். [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

தேராதூனில் பிறந்த நம்ருதா, குரு-சிஷ்யை பராம்பரை எனப்படும் அறிவைப் பெறும் வேத முறைமையில், இலக்னோ கரானாவைச் சேர்ந்த மறைந்த முனைவர் மதுக்கர் ஆனந்தின் கீழ், மிகச் சிறிய வயதிலேயே கதக்கில் பயிற்சியைப் பெறத் தொடங்கினார்.

தேராதூனில் உள்ள தயானந்த ஆங்கிலோ வேதாந்தக் கல்லூரியில் அறிவியல் பட்டதாரியானார். லக்னோவின் பட்கண்டே இசை நிறுவனத்தில் கதக்கில் இளங்கலை பட்டம் பெற்றார். அங்கு 1998-2001 வரை உதவித் தொகையும் பெற்றார். பின்னர், மத்திய பிரதேசத்தின் கைராகர், இந்திரா கலா சங்கீதப் பல்கலைக்கழகத்தில் லக்னோ கரானா வடிவத்தில் பத்ம விபூசண் பண்டிட். பிர்ஜு மகாராஜின் கீழ் முதுகலை பட்டமும் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், இந்திய இசை வல்லுநர் மற்றும் சித்தார் வாசிப்பாளருமான பி. எம். ரவிசங்கரின் மூத்த சீடரான கைம்முரசு இணை மேதை பி. டி. உதய் மஜும்தாரின் கீழ் இந்திய தாளங்களின் சிக்கலைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

2009 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து தேசிய உதவித்தொகை பெற்றார். நம்ருதாவுக்கு இளைஞர்களிடையே இந்திய செம்மொழி இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்திடமிருந்தும் உதவித்தொகை பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டில் உலக புகழ்பெற்ற கதக் மேத பண்டிட். பிர்ஜு மகாராஜிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பினை பெற்றார்.

தொழில்[தொகு]

நம்ருதா இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் ஆவார். இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (இந்தியா) இந்திய தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷன் ஆகியவற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் ஆவார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அஸ்கோனா, சர்வதேச நடன விழா , புது தில்லி, ரவிசங்கர் மையம் [3] (94 வது பிறந்த நாள்) போன்ற உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க விழாக்களில் இவர் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

நிகழ்ச்சிகள்[தொகு]

குஜராத், மோதேரா நடன விழா, தென்-அமெரிக்கா, தேசிய தீபாவளிக் கொண்டாட்டம் , [4] சுவிட்சர்லாந்தின் கலாச்சாரத் திருவிழா, [5] [6] உஸ்தாத் ஷாஃப்கத் அலிகானுடன் சுஃபியானா கதக், [7] சுவிட்சர்லாந்தின் பாசல் பல்கலைக்கழக 550 ஆண்டு கொண்டாட்டம், ஹரித்வார், மகா கும்பமேளா, பாகேசுவர், உத்தராயணி மகோத்சவம், இந்திய தேசிய தொலைக்காட்சிக்கான கீத-கோவிந்தம், [8] உலக நடன தினம், [9] இத்தாலி, மியூசிகா டீ போபோலி, [10] [11] ரோம், சோல்புல் சூஃபி மற்றும் ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஜெர்மனி பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், கயானா & ருமேனியா போன்ற இன்னும் பல குறிப்பிடத்தக்க விழாக்களில் இவரது நிகழ்ச்சிகள நிகழ்த்தபட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நம்ருதா சிறீ எஸ்.கே.ராய் மற்றும் , திருமதி. ஷோபா ராய் ஆகியோருக்கு இளைய மகளாகப் பிறந்தார். இவரது தந்தை இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தேராதூனில் உள்ள தயானந்த் ஆங்கிலோ வேதாந்தக் கல்லூரியில் ஓய்வு பெற்ற ஆங்கில விரிவுரையாளராவார். இவருக்கு சுமித் ராய் என்ற ஒரு மூத்த சகோதரரும் மற்றும் நிதி ராய் மற்றும் நேஹா ராய் என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Dr. Madhukar Anand - Home". Facebook. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  2. "Home". Udhai Mazumdar. Archived from the original on 2017-07-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  3. "Archived copy". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2015-05-18.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Namrrta Raai - Kathak Danseuse at Nationale Divali Manifestatie". யூடியூப். 2012-09-16. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  5. "RED - Unfolding Power, Romance & Passion by Namrrta Raai (Kathak Danseuse)". யூடியூப். 2014-12-17. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  6. "KaalChakra - A Chronology of Kathak by Uhdai Mazumdar". யூடியூப். 2015-11-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  7. "Kafi by Ustad Shafqat Ali Khan and Kathak Danseuse - Namrrta Raai". யூடியூப். 2011-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  8. "DD BHARTI : Yahi Madhav by Namrrta Raai - Kathak Danseuse". யூடியூப். 2010-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  9. "Sufiyana Kathak by Kathak Danseuse - Namrrta Raai". யூடியூப். 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  10. "Kathak Danseuse-Namrrta Raai in Florence, Italy". யூடியூப். 2014-05-08. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  11. "Archived copy". Archived from the original on 6 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-05-18.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Namrata Rai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்ருதா_ராய்&oldid=3617624" இலிருந்து மீள்விக்கப்பட்டது