தோலி பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோலி பள்ளிவாசல்
பனை மரங்களால் சூழப்பட்ட இடைக்கால கருங்கல் பள்ளிவாசல், 2019
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
சமயம்இசுலாம்
செயற்பாட்டு நிலைசெயல்பாட்டிலுள்ளது

தோலி பள்ளிவாசல் (Toli Masjid) (கி.பி 1671), தம்ரி பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின்தெலங்காணாவின் ஐதராபாத்தில் கார்வானில் உள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது சார்மினார் செல்லும் வழியில் கோல்கொண்டா கோட்டையிலிருந்து 2 கி.மீ. (1082 ஏ.எச்) தொலைவில் அமைந்துள்ளது.[1]:66 குதுப் ஷாஹி வம்சத்தின் ஏழாவது சுல்தான் அப்துல்லா குதுப் ஷா ஆட்சியின் போது மிர் மூசா கான் மஹால்தரால் கட்டப்பட்டது.[2] :66 கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் விருது பெற்ற இது இந்திய தொல்ல்லியல் ஆய்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட பாரம்பரியத் தளமாகும். [3] கட்டிடக்கலை அளவில் இது மக்கா பள்ளிவாசலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.[4]

பொ.ச.1671இல் சுல்தான் அப்துல்லா குதுப் ஷாவின் ஆட்சியில் மக்கா பள்ளிவாசலை கட்டியவரும் அரச கட்டிடக் கலைஞரான மிர் மூசா கான் மஹால்தரால் கட்டப்பட்டது. இது குதுப் ஷாஹி கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். [4]

அரச பதிவுகளில் "குல்சார்-இ-அசாஃபியா" என்று ஒரு அத்தியாயம் உள்ளது. அரச கட்டிடக் கலைஞர் பள்ளிவாசலைக் கட்டும் போது, அதற்காக செலவழித்த ஒவ்வொரு ரூபாயிலும் ஒரு தமரி / தம்பிடியாக (அப்போது புழக்கதிலிருந்த நாணயம்) அவருக்கு வழங்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகையை இந்த பள்ளிவாசலைக் கட்ட மூசா கான் பயன்படுத்தினார். எனவே, இந்த பள்ளிவாசல் 'தம்ரி பள்ளிவாசல்' என்றும் அழைக்கப்படுகிறது. [5]

கட்டிடக்கலை[தொகு]

முன் முகப்பில் விரிவான வேலைப்பாடுகள்

இந்த பள்ளிவாசல் ஒரு உயரமான மேடையில் இரண்டு மண்டபங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் ஐந்து வளைவு திறப்புகளைக் கொண்டுள்ளது. ஐந்து வெளிப்புற வளைவுகளில் மத்திய வளைவு மிகப்பெரியது. மேலும் மிகவும் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மத்திய வளைவு மீதமுள்ள நான்கை விட சற்று அகலமாகவும் அலங்காரமாகவும் இருக்கிறது. [2]:66–67

கடைசி குதுப் ஷாஹி சுல்தான், அபுல் ஹசன் குதுப் ஷா கோல்கொண்டாவின் அரியணைக்கு நுழைவதில் முக்கிய பங்கு வகித்த மூசா கான், இதனைக் கட்டியதாக பிரார்த்தனை மண்டபத்தில் உள்ள கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. கோல்கொண்டா கோட்டையின் மூசா புர்ஜ்ஜும் (கோட்டை) இவரது பணியாகும். [2]:66–67

சீரழிவு[தொகு]

தி இந்து நாழிதழின் கூற்றுப்படி, இந்த பள்ளிவாசலைச் சுற்றியுள்ள நிலம் அரசியல் செல்வாக்கின் கீழ் உள்ளூர்வாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. [6] மேலும் மாசுபாடு மற்றும் பராமரிப்பு இல்லாததால் இதன் மினார்கள் அதன் செதுக்கப்பட்ட அழகை இழந்து வருகின்றன. [7]

புகைப்படத் தொகுப்பு[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bilgrami, Syed Ali Asgar (1927). Landmarks of the Deccan. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0543-8.
  2. 2.0 2.1 2.2 Landmarks of the Deccan.
  3. "INTACH". Archived from the original on 2007-01-22. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  4. 4.0 4.1 India: past & present, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7648-455-5, by Prakash Chander, Page-148
  5. Toli Masjid in Hyderabad India
  6. "'Toli Masjid land encroached'". தி இந்து (Chennai, India). 23 September 2008 இம் மூலத்தில் இருந்து 25 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080925183655/http://www.hindu.com/2008/09/23/stories/2008092359170400.htm. 
  7. "Indian Ecological Society". Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோலி_பள்ளிவாசல்&oldid=3559786" இலிருந்து மீள்விக்கப்பட்டது