கார்வான்
கார்வான் | |
---|---|
அண்டைப்பகுதி | |
ஆள்கூறுகள்: 17°22′28″N 78°26′30″E / 17.37444°N 78.44167°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஐதராபாத்து |
பெருநகரம் | ஐதராபாத்து |
அரசு | |
• நிர்வாகம் | GHMC |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500 006 |
வாகனப் பதிவு | டிஎஸ் |
மக்களவைத் தொகுதி | ஐதராபாத்து |
சட்டப் பேரவை தொகுதி | Karwan |
திட்டமிடல் நிறுவனம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
இணையதளம் | telangana |
கார்வான் (Karwan) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஓர் புறநகர் பகுதியாகும். இது பழைய ஐதராபாத்தின் ஒரு பகுதியாகும். [1]
இது கச்சிபௌலி, ஹைடெக் சிட்டி போன்ற தகவல் தொழிநுட்ப மையங்களிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. குதுப் சாகியின் ஆட்சியில் நடந்த வர்த்தகத்தில் இது முக்கியத்துவம் பெற்றிருந்தது. முந்தைய நாட்களில் இது கார்வான் தொகுதியின் கீழ் உள்ள ஜியர்குடெம் என்று அழைக்கப்பட்டது.
கலாச்சாரம்
[தொகு]கார்வானில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்த மக்கள் தொகை உள்ளது. போனலுதிருவிழா இங்கு மிகவும் பிரபலமானது. மேலும் இது ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது முக்கிய வழிபாடு தர்பார் மைசம்மா கோவிலில் நடக்கிறது. கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கி, ஒரு இறுதி நாளில், திறமையான மாணவர்களுக்கு பரிசு விநியோகத்துடன் பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவிழா வண்டி வேடிக்கைகளுடன் முடிவடைகிறது.
ஐதராபாத் நிசாம் ஆட்சியிலிருந்தே கார்வானுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு, இது நன்கு அறியப்பட்ட முத்து சந்தையாக இருந்தது. இது கைத்தறி ஆடைகளுக்கும் பிரபலமானது. நிசாம் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களும், பிற பழைய கோயில்களும், மசூதிகளும் இன்று வரை நிற்கின்றன.
அண்டாரூன் அல்லது இன்சைட் கார்வானுக்கு சில பழைய கட்டிடங்கள் உள்ளன, மேலும் பழைய முத்து மற்றும் வைர சந்தையின் இடமாக இருந்தது.
விட்டலநாதர் கோயில், சந்தோசி மாதா கோயில், நரசிம்ம சுவாமி கோயில், கேசரி அனுமான் கோயில் ஆகியவை மிகவும் பிரபலமான பழைய கோயில்களாகும்.
நிசாம் காலத்தில் கட்டப்பட்டது என்று கருதப்படும் ரங்கநாதசுவாமி கோயில் என்ற பழைய கோயிலும் உள்ளது. இது இரட்டை நகரங்களில் புகழ்பெற்ற கோயிலாகும், ஜியாகுடாவில் வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டங்களுக்கு பிரபலமானது.