ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா

ஆள்கூறுகள்: 17°21′37″N 78°28′24″E / 17.360305°N 78.473416°E / 17.360305; 78.473416
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா
ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்குல்பர்கா, கர்நாடகா,இந்தியா.
புவியியல் ஆள்கூறுகள்17°21′37″N 78°28′24″E / 17.360305°N 78.473416°E / 17.360305; 78.473416
சமயம்இசுலாம்
நிலைபள்ளிவாசல்

ஜும்ஆ பள்ளிவாசல் (Jama Masjid Gulbarga) இந்தியா நாட்டின் கர்நாடகா மாநிலத்தில் குல்பர்கா மாவட்டத்தில் குல்பர்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி.1367 இல் கட்டப்பட்டது.

அமைப்பு[தொகு]

இப்பள்ளிவாசலும் ஐதராபாத்து நகரில் உள்ள எசுப்பானியப் பள்ளிவாசலும் இந்தியாவில் எசுப்பானியா நாட்டின் கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டவை.[1].[2][3][4]

வரலாறு[தொகு]

பாமினி சுல்தானகத்தை தோற்றுவித்த அலாவுதின் பாமன் சா ஆட்சியில் கி.பி.1347 இல் குல்பர்கா கோட்டை கட்டப்பட்டது. பின்னர் முதலாம் முகம்மது ஷா (1358-75) மன்னரால் இப்பள்ளிவாசல் கி.பி.1347 இல் குல்பர்கா கோட்டைக்கு உள்ளே கட்டப்பட்டது.அவரது ஆட்சியில் குல்பர்கா பாமினி சுல்தானகத்தின் தலைநகராக இருந்தது.[5]

கட்டிடக்கலை[தொகு]

ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா மினார் இல்லாமல் கட்டப்பட்டது.இப்பள்ளிவாசல் குல்பர்கா கோட்டைக்கு உள்ளே பெரிய குவிமாடம் கொண்டு கட்டப்பட்டது.இது எசுப்பானியா நாட்டின் மூரிஸ் வடிவமைப்பில் கி.பி.1367 இல் கட்டப்பட்டது.[6] எசுப்பானியா நாட்டின் கோர்தோபா பள்ளிவாசல் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.[7] மேற்கே பெரிய குவிமாடம்,நான்கு மூலைகளில் சிறிய குவிமாடங்கள் கொண்டுள்ளது.முற்றத்தில் 63 சிறிய குவிமாடங்கள் கொண்டுள்ளது. தெற்காசியாவில் அதன் வடிவம் மற்றும் கட்டமைப்பில் சிறந்த பள்ளிவாசலாக கருதப்படுகிறது.[8]

புகைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. Malipatil, Sumitra (22 April 2014). "Mosque with a Spanish touch". Deccan Herald. http://www.deccanherald.com/content/400967/mosque-spanish-touch.html. பார்த்த நாள்: 19 January 2015. 
  2. Cumming, Sir John (2006). Revealing India's Past. Read Books. பக். 424. ISBN 9781406704082. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4067-0408-3. https://books.google.com/books?id=ygg3vZvUoDIC&pg=PA258&lpg=PA258&dq=Gulbarga+Fort&source=bl&ots=UA-7lBAee8&sig=ZMi9Rso5ZOW1M9RyTJNGJ9ElTuw&hl=en&ei=y-fySoXsGMqX8AbXudjYAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CBAQ6AEwBDgU#v=onepage&q=Gulbarga%20Fort&f=false. பார்த்த நாள்: 2009-11-08. 
  3. Sathyan, B. N. Sri (1965). Karnataka State Gazetteer: Gulbarga. The Director of Print., Stationery and Publications at the Govt. Press, Government of Karnataka. பக். 218 and 462. https://books.google.com/books?id=uZkBAAAAMAAJ&q=Gulbarga+Fort&dq=Gulbarga+Fort. பார்த்த நாள்: 2009-11-10. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-20. பார்க்கப்பட்ட நாள் 2017-01-12.
  5. Gulbarga
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-20. பார்க்கப்பட்ட நாள் 2017-01-12.
  7. [1]
  8. [2]