எசுப்பானியப் பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுப்பானிய பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பேகம்பேட்டை, ஐதராபாத்து (இந்தியா), இந்தியா

எசுப்பானிய பள்ளிவாசல் ( Spanish Mosque ) (அசல் பெயர்: ஜமா மஸ்ஜித் ஐவான்-இ-பேகம்பேட்டை) இந்திய மாநிலமான தெலங்காணாவில் ஐதராபாத்திலுள்ள, பேகம்பேட்டையிலுள்ள பைகா அரண்மனைக்குள் உள்ள ஒரு பள்ளிவாசலாகும்.

கட்டுமானம்[தொகு]

ஐதராபாத் இராச்சியத்தின் முதன்மை அமைச்சராக இருந்த சர் விகார்-உல்-உம்ரா இதன் கட்டுமானத்தை 1900 ஆம் ஆண்டில் தொடங்கினார். (பின்னர், 1902இல் அவரது திடீர் மறைவு காரணமாக அவரது வாரிசும் மூத்த மகனுமான பைகாவின் ஆறாம் அமீர் சுல்தான் உல் முல்க் பகதூர் என்பவரால் முடிக்கப்பட்டது. எசுப்பானியாவுக்கு தனது ஒரு பயணத்தின் போது கோர்தோபா பள்ளிவாசல்-தேவாலயத்தால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டு இதன் கட்டுமானத்தைத் தொடங்கினார். இது மூர்ஸ் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. வனப்பெழுத்து, குதிரைவாலி வளைவுகள் மற்றும் பண்டைய ரோம கட்டிடக்கலைகளின் தாக்கங்களைக் கொண்டுள்ளது. [1] [2] [3] எசுப்பானிய பள்ளிவாசலின் வெளிப்புறமும் உட்புறமும் பெரும்பாலும் எசுப்பானியாவிலுள்ள கோர்தோபாவின் தேவாலயம்-பள்ளிவாசல் மற்றும் இந்தியாவின் கர்நாடகாவின் குல்பர்கா ஜும்ஆ பள்ளிவாசல் போன்றவற்றை ஒத்திருக்கிறது. இது அதிநவீன உட்புறங்களையும் கட்டிடக்கலைகளையும் காட்டுகிறது. [4][5]

தனித்துவம்[தொகு]

தனித்துவமான சோனகக் கட்டிடக்கலை (மூர்ஸ்) பாணியால் இது மூர்ஸின் பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது இந்தியாவில் தனித்துவமான ஒன்றாகும். இதில் தனித்துவமான மினாரெட்டுகள் அல்லது குவிமாடங்களுக்கு பதிலாக தேவாலயத்தின் உச்சியில் உள்ள உயரமான கூம்பு வடிவான கோபுரம் என்பது தனித்துவமான அம்சமாகும். இவை இந்த பள்ளிவாசலுக்கு கிறித்தவத் தேவாலயம் போன்ற தோற்றத்தை தருகிறது. ஆரம்பத்திலிருந்து இந்த பள்ளிவாசல் பைகா அமீர் சர் விகார்-உல்-உம்ராவின் வாரிசுகளால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. [6]

பாதுகாப்பு[தொகு]

1940களின் முற்பகுதியில் இருந்து எசுப்பானிய பள்ளிவாசலின் புகைப்படம்

எசுப்பானிய பள்ளிவாசலானது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் அறிவிக்கப்பட்ட பாரம்பரிய தளமாகும். இது யுனெஸ்கோ ஆசியா பசிபிக் நிறுவனத்தின் பரிசீலனைக்கு விவாதிக்கப்படுகிறது. [7] [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Syed Akbar (11 August 2018). "On Independence Day, Spanish mosque in Hyderabad will open to all faiths". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.
  2. Gopalan, Madhumita (24 September 2016). "The Spanish mosque: Moorish architecture in the heart of Hyderabad". The News Minute. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.
  3. "Hyderabad's Spanish mosque: A serene place of worship and acceptance". தி இந்து. 16 August 2018. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.
  4. "Masjid Iqbal-Ud-Daula - Begumpet, Hyderabad". Flickr - Photo Sharing!.
  5. "beautiful mosque in the heart of Begumpet". The Times Of India. http://timesofindia.indiatimes.com/topic/photo/09q740yfAS5o4?q=Begumpet. 
  6. http://www.tourisminap.com/hyderabad/sight_see.php
  7. "Masjid Iqbal-Ud-Daula - Begumpet, Hyderabad". Flickr - Photo Sharing!.
  8. "Mosque in Secunderabad". Flickr - Photo Sharing!. 11 February 2004.

வெளி இணைப்புகள்[தொகு]