சார்மினார்

ஆள்கூறுகள்: 17°21′41″N 78°28′28″E / 17.36139°N 78.47444°E / 17.36139; 78.47444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்மினார்
அமைவிடம் இந்தியா , தெலுங்கானா , ஹைதிராபாத்
17°21′41″N 78°28′28″E / 17.36139°N 78.47444°E / 17.36139; 78.47444
நிறுவப்பட்ட ஆண்டு 1591
கட்டிடக்கலைத் தகவல்கள்
கட்டிட மாதிரி இஸ்லாமியக் கட்டிடக்கலை
மினாரா(க்கள்) 4
மினாரா உயரம் 48.7 மீட்டர்கள் (160 அடி)
இரண்டாவது தளத்தில் உள்ள பள்ளிவாசல்

சார்மினார் (Charminar) 1591-ல் கட்டப்பட்டது. இது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பள்ளிவாசல் ஆகும். இது ஐதராபாத்தின் சிறப்பான கட்டிடங்களில் ஒன்றாகும். மேலும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கட்டிடங்களில் இதுவும் ஒன்று.[1] இது முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.[2] உருது வார்த்தையான (சார்= நான்கு, மினார்= கோபுரம்) நான்கு கோபுரங்கள் என்பதே சார்மினார் என வழங்கப்படுகிறது. தற்போது இது இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வரலாறு[தொகு]

சார்மினார் 1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக, அதனை கொண்டாடும் பொருட்டு, முகம்மது குலி குப் ஷா என்பவரால் கட்டப்பட்டது. சார்மினாரை மையமாக வைத்தே பழமையான நகரமான ஐதராபாத் உருவாக்கப்பட்டது.

வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்[தொகு]

முகம்மது குலி குதுப் ஷா என்பவர் இதன் கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டினார். குதுப் ஷாவின் முதன்மை அமைச்சராய் இருந்த மிர் மொமின் அஸ்டாரபடி (Mir Momin Astarabadi) இதன் வடிவமைப்பிலும் ஐதராபாத் நகர வடிவமைப்பிலும் முக்கிய பங்காற்றினார்.[3]. பெர்சியாவிலிருந்தும் கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். எனவே இது இந்திய இஸ்லாமிய பாணி கட்டிட வகையில் காணப்படுகிறது. சார்மிரானது துறைமுக நகரான மசூலிப்பட்டினத்தையும், கோல்கொண்டாவையும் இணைக்கும் சாலையில் கட்டப்பட்டது.[4]

வடிவம்[தொகு]

இது இஸ்லாமிய பாணியில் அமைந்த கட்டிடம். சதுர வடிவமானது . ஒவ்வொரு பக்கமும் 20 மீட்டர் நீளமுடையது.நான்கு புறமும் உள்ள வாசல்கள் உயர்ந்த வளைவுகளைக் கொண்டது. இவை இதைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளைப் பார்த்து இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.இது கிரானைட் மற்றும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டது.சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உண்டு.[5]

தாக்கம்[தொகு]

2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வாழும் ஐதராபாத் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகே பகதூராபத் எனும் இடத்தில் இதைப்போல் சிறிய அளவில் ஒரு சார்மினாரைக் கட்டினர்.[6]

சர்ச்சை[தொகு]

பாக்யலட்சுமி கோவிலின் மேல் தான் சார்மினார் கட்டப்பட்டது என்று ஒரு சர்ச்சை உண்டு. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என 'தி இந்து' நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. [7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Richard Goslan travels to India - Herald Scotland". Archived from the original on 2010-12-18. பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.
  2. Charminar (building, Hyderabad, India), Britannica Online Encyclopedia
  3. வார்ப்புரு:Cite dissertation
  4. Gayer, Lauren; Lynton, Christophe Jaffrelot (2011). Muslims in Indian cities: trajectories of marginalisation. Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780231800853. http://books.google.ae/books?id=Z7J8ITgtkosC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 21 December 2012. 
  5. "Take a walk through history". The Hindu (Chennai, India). February 9, 2010 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 9, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131109001544/http://www.hindu.com/yw/2010/02/09/stories/2010020951491400.htm. 
  6. M. Rafique Zakaria, Charminar in Karachi, Dawn, April 22, 2007
  7. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/as-protests-roil-charminar-hyderabads-heritage-slowly-vanishes/article4116422.ece?homepage=true
  8. http://www.thehindu.com/news/cities/Hyderabad/a-note-on-the-charminar-photograph/article4119747.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்மினார்&oldid=3669561" இலிருந்து மீள்விக்கப்பட்டது