தேர்டு கிளாஸ் டிக்கெட்
நூலாசிரியர் | ஹீதர் வுட் |
---|---|
பட வரைஞர் | பெரில் சாண்டர்ஸ் (Beryl Saunders) |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டாளர் | பென்குவின் புக்ஸ் |
வெளியிடப்பட்ட நாள் | செப்டம்பர், 1990 |
ISBN | பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140095276 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0140095272 |
தேர்டு-கிளாஸ் டிக்கெட் (Third-class Ticket), ஹீதர் வுட் எனும் ஆசிரியரால் எழுதப்பட்ட ஆங்கில மொழி நூல். ஒரு வங்காள கிராமத்தைச் சேர்ந்த 44 பேர் கொண்ட குழு ஒன்று அறிவைப் பெறுவதற்காகவே இந்தியாவை சுற்றிப்பார்க்க ரயிலில் மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய தனித்தன்மை கொண்ட நூலாகக் குறிப்பிடப்படுகின்றது. இது உண்மையாகவே நடந்த நிகழ்ச்சி என்று குறிப்பிடப்படுகின்றது. இந் நூலை இதனை அற்புதமான நூல் என்று இதனை குறிப்பிடுகின்றார்.[1]
கல்கத்தா, காசி, சாரநாத், லக்னோ, ஹரித்துவார், டெல்லி, ஆக்ரா, ஜான்சி, குஜராத், அஜ்மீர், ஜெய்ப்பூர், பம்பாய், ஹைதரபாத், மைசூர், ஊட்டி, கோயம்புத்தூர், கொச்சி, கன்னியாகுமரி, மதுரை, ராமேசுவரம், மகாபலிபுரம், பூரி, கொனார்க், டார்ஜிலிங், காங்டாக், கல்கத்தா என ரயிலில் சுற்றி வரும் வங்காள கிராமத்தினரின் அனுபவங்களின் பதிவாகவும் அவர்களுக்கு எழும் வித்தியாசமான சிந்திக்க வைக்கும் கேள்விகளின் பதிவாகவும் அறியப்படுகின்றது.[1]