தேசியப் புலனாய்வு முகமையால் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள்
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் (NIA Most Wanted) பட்டியல் பராமரிக்கப்படுகிறது. பொதுவாக மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பிடிபட்டால் அல்லது இறந்தால் அல்லது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் போது மட்டுமே பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்.[1]
வரலாறு
[தொகு]மே 2011ல், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் மிகவும் தேடப்படும் 50 தப்பியோடிய குற்றவாளிகளின் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டது. சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)[2] இந்திய உளவுத்துறை (ஐபி)[3][4] மற்றும் பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.[5] உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஓன்கர் கேடியாவின் கூற்றுப்படி, சிபிஐ 40 பேரையும்[6], என்ஐஏ அமைப்பு 10 பயங்கரவாதிகளையும் மிகவும் தேடப்படும் குற்ற்வாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. இருப்பினும் சிபிஐ சமர்ப்பித்த பட்டியலில் உள்ளவர்களில் இருவர் உண்மையில் இந்தியாவில் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது (ஒருவர் சிறையில், மற்றவர் பிணையில் வெளியே வந்துள்ளார்). அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் பட்டியலை மறுபரிசீலனை செய்யும்படி புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. இந்தியா 48 பெயர்களைக் கொண்ட மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் கொண்ட புதிய பட்டியலைத் தயாரித்து[7][8], சூலை 2011ல் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.[9] இந்தப் பட்டியலில் இண்டர்போல், சிவப்பு மூலை அறிக்கையில் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளின் பெயர்கள், மாற்றுப்பெயர்கள், குற்றங்களின் விவரங்கள், பாகிஸ்தானிய பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் அடையாள ஆவண எண்கள் கொண்டிருக்கும்..[10]
2004, 2007, 2010[11] மற்றும் மார்ச் 2011ல் இதே போன்ற பட்டியல்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. இருப்பினும் அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மே 2011 இல் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளியிடுவது என்பது ஒரு சடங்கு என விவரித்தார்.[11][12] 2011 பட்டியலில் உள்ள பிழைகளுக்கு சிபிஐ மீதும் அவர் குற்றம் சாட்டினார்.[13]
26 மே 2013 அன்று, டிஎன்ஏ தனது பட்டியலில் உள்ள தப்பியோடியவர்கள் பற்றிய சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் உளவுத்துறையின் அறிக்கையை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு அறிக்கையை அனுப்புமாறு ஒவ்வொரு மாநிலத்தையும் கேட்டுக்கொண்டதாக டிஎன்ஏ தெரிவித்துள்ளது. "இந்த தப்பியோடியவர்களின் சமீபத்திய இருப்பிடங்கள், அவர்கள் இறந்துவிட்டார்களா அல்லது உயிருடன் இருக்கிறார்களா மற்றும் அவர்கள் சமீபத்தில் ஏதேனும் மத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்களா என்பது பற்றிய சமீபத்திய தகவல்களை வழங்க வேண்டும்" என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி செய்தித்தாளிடம் கூறினார். 2011 ஆம் ஆண்டு பட்டியலில் காணப்பட்ட தவறுகளைப் போன்று பட்டியலில் உள்ள தவறுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[14]
26 மே 2013 அன்று டெய்லி நியூஸ் அனலைஸ் எனும் செய்தி ஊடகம் (Daily News and Analysis|DNA), மாநில மற்றும் ஒன்றியப் பகுதி அரசுகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்தியாவில் குற்றம் புரிந்து வெளிநாட்டிற்கு தப்பியோடியவர்கள் பட்டியலை கேட்கும். அக்டோபர் 2018ல் தேசிய புலனாய்வு முகமை 15 பெண்கள் உள்ளிட்ட 258 பேர்களை கொண்ட மிகவும் தேடப்படும் குற்றவாளிகளின் புதிய பட்டியலை வெளியிட்டது. அதில் முப்பாள லட்சுமண ராவ் என்பவரைப் பற்றிய துப்பு கொடுத்தால் அதிக சன்மானம் வழங்கப்படும் என புலனாய்வு அமைப்பு தெரிவித்திருந்தது.[15]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Investigation Agency Most Wanted". Government of India. Archived from the original on 2016-01-26. பார்க்கப்பட்ட நாள் 2018-07-16.
- ↑ "Wazhul Khan's name on most-wanted list an oversight by Mumbai police: Chidambaram". Truthdive.com. 2011-05-18. Archived from the original on 2015-02-15. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "India may give Pak a corrected list of wanted terrorists". Sify. 2011-05-20. Archived from the original on 2015-06-30. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
- ↑ "Red-faced govt orders inquiry into 'most wanted' goof". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-05-18 இம் மூலத்தில் இருந்து 2013-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130713024514/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-18/india/29555598_1_home-minister-red-corner-mumbai-police.
- ↑ "Pakistan seeks clarification on most-wanted list". தி எகனாமிக் டைம்ஸ். 2011-05-30. http://articles.economictimes.indiatimes.com/2011-05-30/news/29598770_1_pakistani-army-officers-india-s-most-wanted-list.
- ↑ "Terror list goof-up: CBI admits mistake, action against three". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-05-20 இம் மூலத்தில் இருந்து 2013-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130713024506/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/india/29563842_1_home-ministry-terror-list-cbi.
- ↑ "Govt prepares fresh list of 48 wanted criminals". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN. 2011-07-14 இம் மூலத்தில் இருந்து 2013-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130713024524/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-14/india/29772706_1_feroz-abdul-rashid-khan-wazhul-kamar-khan-mohammed-ahmed-dosa.
- ↑ "India's new Most Wanted list for Pakistan". NDTV.com. 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
- ↑ "India to send new 'wanted' list to Pakistan". Timesnow.Tv. 2011-07-13. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
- ↑ "India to press Pakistan on fugitives". Atimes.com. 2011-07-30. Archived from the original on 2011-07-29. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "No apologies for goof-ups in wanted list: Chidambaram". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-05-22 இம் மூலத்தில் இருந்து 2012-04-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120403214503/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-22/india/29571005_1_genuine-human-error-home-minister-list.
- ↑ "Leading News Resource of Pakistan". Daily Times. 2011-05-22. Archived from the original on 3 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
- ↑ "Chidambaram shirks blame on goof-up in most-wanted list". இந்தியா டுடே. 2011-05-24. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
- ↑ Dighe, Sandip (26 May 2013). "NIA wants latest info on fugitives". DNA. http://www.dnaindia.com/pune/1839607/report-nia-wants-latest-info-on-fugitives.
- ↑ NIA’s ‘Most Wanted’ list has 258 names but it badly wants this man, Indianexpress.com, 21 October 2018 (accessed on 26 June 2019)