தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்)
South Asian Association for Regional Cooperation (SAARC)
உறுப்பினர்கள் • பார்வையாளர்கள்
உறுப்பினர்கள் • பார்வையாளர்கள்
தலைமையகம்கத்மந்து, நேபாளம்
அங்கத்துவம்8 உறுப்பு நாடுகள்
6 பார்வையாளர்கள்
தலைவர்கள்
• பொதுச் செயலாளர்
அஹ்மது சலீம்
உருவாக்கம்டிசம்பர் 8, 1985
பரப்பு
• மொத்தம்
5,130,746 km2 (1,980,992 sq mi) (7வது1)
மக்கள் தொகை
• 2004 மதிப்பிடு
1,467,255,669 (1வது1)
• அடர்த்தி
285.9/km2 (740.5/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
US$ 4,074,031 மில்லியன் (3வது1)
• தலைவிகிதம்
அமெ.$ 2,777
நாணயம்2
நேர வலயம்ஒ.அ.நே+4½ முதல் +6
  1. ஒரு தனி அலகாகக் கருதப்பட்டால்.
  2. ஒற்றை நாணயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    தற்போதைய நாணயங்கள்:AFGBDTBTNINRMVRNPRPKRLKR

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.


உறுப்பு நாடுகள்

தற்போதைய உறுப்பினர்கள்

பார்வையாளர்கள்

எதிர்கால உறுப்பு நாடுகள்

  • சீனா மக்கள் சீனக் குடியரசு சார்க்கில் இணையும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது[3]. பாகிஸ்தானும் வங்காளதேசமும் இதற்கு ஆதரவளித்தாலும் இந்தியா இன்னமும் தனது ஆதரவை வெளிப்படுத்தவில்லை. பூட்டான் சீனாவுடன் இதுவரை தூதரக உறவைப் பேணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[4].
  • ஈரான் ஈரான் வெளிநாட்டமைச்சர் கமால் கராசி பெப்ரவரி 22 2005 இல் சார்க்கில் ஈரான் இணையும் விருப்பத்தை தெரிவித்தார்[5].
  • உருசியா ரஷ்யா இவ்வமைப்பில் பார்வையாளராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா இதற்கு ஆதரவளித்துள்ளது[6][7]
  • மொரிசியசு மொரீசியஸ் பார்வையாளராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளது[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்