தாஸ்மான் கடல்
Jump to navigation
Jump to search
தாஸ்மான் கடல் (Tasman Sea) ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர்கள் (1250 மைல்கள்) குறுக்களவு கொண்ட கடல் ஆகும். இது தெற்கு பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குக் கூறு ஆகும். நியூசிலாந்தையும் தாஸ்மானியாவையும் முதன் முறையாக அடைந்த முதலாவது ஐரோப்பியரான டச்சு நாடுகாண் பயணியான ஏபல் டாஸ்மான் நினைவாக இக்கடலுக்கு தாஸ்மான் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவருக்குப் பின்னர் பிரித்தானியக் கடற்படைக் கப்டன் ஜேம்ஸ் குக் 1770களில் தனது முதல் பசிபிக் பயணத்தின் போது இக்கடலில் பல தடவைகள் பயணித்தான்.
தாஸ்மான் கடலில் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன.
- லோர்ட் ஹவ் தீவு மற்றும் அதனைச் சார்ந்த தீவுகள்
- பாலின் பிரமிட்
- நோர்போக் தீவு, தாஸ்மான் கடலின் வடக்கு எல்லையில் பவளக் கடலுடன் எல்லையைக் கொண்டுள்ளது.
இவை அனைத்தும் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.