தாழைக் கோழி
Common moorhen | |
---|---|
![]() | |
G. c. chloropus from Mangaon, Maharashtra, இந்தியா | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | நாரை |
குடும்பம்: | Rallidae |
பேரினம்: | Gallinula |
இனம்: | G. chloropus |
இருசொற் பெயரீடு | |
Gallinula chloropus (Linnaeus, 1758) | |
Subspecies | |
About 5, see text | |
![]() | |
Range of G. chloropus Breeding range Year-round range Wintering range | |
வேறு பெயர்கள் | |
தாழைக்கோழியானது ஆங்கிலத்தில் Common Moorhen என்றழைக்கப்படுகிறது இது ஒரு நீர்க்கோழி வகையயாகும் Rallidaeகுடும்பத்தை சார்ந்தது,இது உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது.
பெயர்கள்[தொகு]
தமிழில் :தாழைக் கோழி
ஆங்கிலப்பெயர் :Common Moorhen
அறிவியல் பெயர் :Gallinula chloropus [2]
உடலமைப்பு[தொகு]
32 செ.மீ. - தண்ணீரில் நீந்தும்போது வாத்துப் போலவும் தரையில் திரியும் போது கானான் கோழி போலவும் தோற்றம் தருவது. சிலேட் சாம்பல் நிற உடலைக் கொண்ட இதனை வாலடி வெள்ளையாக இருப்பது கொண்டு அடையாளம் காணலாம்.
காணப்படும் பகுதிகள் ,உணவு[தொகு]
தமிழகம் எங்கும் பரவலாகக் காணப்படும் நீர்க்கோழி இனம் இது ஒன்றே. ஆணும் பெண்ணும் இணையாக நீர்ப்பரப்பின் மீது வாலை அசைத்தபடி வாத்தைப் போல நீந்தியவாறு தாவர விதைகள், நத்தை, தவளை, சிறு மீன் ஆகியவற்றைத் தேடித்தின்னும், கரையோரத்தில் உள்ள நாணல், தாழைப் புதர்களை விட்டு தண்ணீரில் நெடுந்தொலைவு நீந்திச் செல்லும் பழக்கம் முற்படும்போது சற்று நேரம் இறக்கை அடித்துப் பின் எழுந்து பறக்கும். பறக்கும் திறமை குறைந்தது எனினும் இடம் பெயர நேரும் போது உயர்ந்த மலைகளையும் கடந்து பறந்து செல்லும். நீரில் மூழ்கி மறைந்தபடி ஆபத்திலிருந்து தப்பிக்கவும் முயலும். க்க்ரீக் க்ரெக் ரெக் ரெக் என இனப்பெருக்க காலத்தில் குரல் கொடுக்கக் கேட்கலாம். [3]
இனப்பெருக்கம்[தொகு]
சூன் முதல் செப்டம்பர் வரை நீரருகே நாணல், தாழை புதர்களிடையே நீர்த்தாவரங்களைச் சேகரித்து மேடையிட்டு 5 முதல் 12 முட்டைகளிடும்.
படங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- (Common) Moorhen species text in The Atlas of Southern African Birds
- தாழைக் கோழி videos, photos, and sounds at the Internet Bird Collection
- Common Gallinule Species Account – Cornell Lab of Ornithology
- Common Moorhen Information - Gallinula chloropus - USGS Patuxent Bird Identification InfoCenter
- Madeira Birds – Moorhen breeding in Madeira Island
- Ageing and sexing (PDF; 5.7 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze
- BirdLife species factsheet for Gallinula chloropus
- தாழைக் கோழி photo gallery at VIREO (Drexel University)
- Audio recordings of Common moorhen on Xeno-canto.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Gallinula chloropus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2014). பார்த்த நாள் 7 June 2015.
- ↑ "தாழைக் கோழிCommon_moorhen". பார்த்த நாள் 31 அக்டோபர் 2017.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:39