தாமஸ் பெய்ன்
தாமஸ் பெய்ன் (Thomas Paine) என்பவர் (பிறப்பு: சனவரி 29, 1737; இறப்பு: சூன் 8, 1809) புகழ்மிக்க ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர், வேரோட்டப் போக்குநர், கண்டுபிடிப்பாளர், அறிவாளர், புரட்சியாளர், ஐக்கிய அமெரிக்கத் தொடக்குநருள் ஒருவர் என்னும் பல சிறப்புகளைக் கொண்டவர் ஆவார்.[1]
பிறப்பும் அமெரிக்க பயணமும்
[தொகு]தாமஸ் பெய்ன் இங்கிலாந்து நாட்டில் நோர்ஃபோக் மாவட்டத்தில் தெட்ஃபட் என்னும் நகரில் பிறந்தார். அவர் தம் 37ஆம் வயதில் பிரித்தானிய அமெரிக்க குடியேற்றத்திற்குப் பயணமானார். அங்கு 1774இல் அமெரிக்க புரட்சிப் போரில் கலந்துகொண்டார். பிரித்தானியக் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்த்து அமெரிக்கா போராடி, சுதந்திரம் அடைய வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து, பெய்ன் "பகுத்தறிவு" (Common Sense) என்னும் தலைப்பில் ஒரு சிற்றேட்டினை 1776ஆம் ஆண்டு வெளியிட்டார். அது பலராலும் படிக்கப்பட்ட, புகழ்பெற்ற வெளியீடாயிற்று. அவர் எழுதிய இன்னொரு சிற்றேட்டுத் தொடர் "அமெரிக்க நெருக்கடி" (The American Crisis) என்பதாகும் (1776–1783).
பெய்ன் எழுதிய "பகுத்தறிவு" என்னும் சிற்றேட்டின் தாக்கம் எவ்வளவு என்றால், அமெரிக்க நாட்டுக்கு அடித்தளம் இட்டவர்களுள் ஒருவரும் அந்நாட்டின் இரண்டாம் அதிபருமாயிருந்த ஜாண் ஆடம்சு என்பவர்,
“ | 'பகுத்தறிவு' நூலை எழுதியவரின் பேனா இருந்ததால்தான் ஜார்ஜ் வாஷிங்டனின் வாள் பலன் நல்கியது | ” |
என்று கூறியுள்ளார்.[3]
பிரான்சு நாட்டில்
[தொகு]1770களில் பெய்ன் பிரான்சு நாட்டில் வாழ்ந்தார். அப்போது அவர் பிரஞ்சு புரட்சியில் தீவிரமாகப் பங்கேற்றார். பிரஞ்சு புரட்சியை எதிர்த்தவர்களுக்குப் பதில்மொழி கொடுக்கும் வகையில் அவர் "மனிதரின் உரிமைகள்" (Rights of Man) என்னும் நூலை 1791இல் எழுதினார். பிரித்தானிய எழுத்தாளராகிய எட்மண்ட் பர்க் (Edmund Burke) என்பவருக்கு எதிராகவும் தாமஸ் பெய்ன் எழுதினார். இதனால் அரசு துரோகம் என்னும் குற்றம் சாட்டப்பட்டார். பிரஞ்சு அவருடைய தாய்மொழியாக இல்லாதிருந்த போதிலும் அவர் 1792இல் பிரஞ்சு தேசியப் பேரவை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
பிரான்சில் இருந்தபோது பெய்ன் அரசியல் எதிரிகளைச் சம்பாதித்துக்கொண்டார். அதனால் 1793 திசம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு, பாரிசில் சிறையில் அடைக்கப்பட்டார். 1794இல் விடுவிக்கப்பட்டார்.
பெய்ன் 1793-1794ல் "பகுத்தறிவுக் காலம்" என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டார். அந்நூலில் அவர் நிறுவனமாக்கப்பட்ட மதத்திற்கு எதிராகப் பேசினார். கிறித்தவக் கொள்கைகளைத் தாக்கினார். பகுத்தறிவையும் சுதந்திர சிந்தனையையும் உயர்த்திப் பேசினார். பொதுவான கடவுள் நம்பிக்கையே போதும் என்றார். அவர் 1795இல் எழுதிய "வேளாண்மை நீதி" (Agrarian Justice) என்னும் நூலில் சொத்துரிமையின் தோற்றம் குறித்து விவாதித்தார். எல்லா உழைப்பாளருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான குறைந்த ஊதியமாவது கிடைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.
இறப்பு
[தொகு]1802இல் பெய்ன் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றார். அங்கு 1809, சூன் 8ஆம் நாள் உயிர்துறந்தார். அவர் கிறித்தவத்துக்கு எதிராக எழுதியிருந்ததால், அவரது அடக்கத்தின்போது வெறும் ஆறு பேரே பங்கேற்றனராம்.[4]
படத்தொகுப்பு
[தொகு]-
பாரிசு நகரில் தாமஸ் பெய்ன் நினைவுக் குறிப்பு
-
தாமஸ் பெய்ன் பிறந்த இடமாகிய தெட்ஃபட் நகரில் (நோர்ஃபோக், இங்கிலாந்து) எழுப்பப்பட்ட சிலை
-
தாமஸ் பெய்ன் இல்லம் (முன்னாள்: காட்சியகம்), நியூ ரோஷல், நியூயார்க்
-
தாமஸ் பெய்ன் நினைவுச் சின்னம். கலைஞர்: ஜாண் ஃப்ரேசீ. இடம்: நியூ ரோஷல்
-
தாமஸ் பெய்ன் சிலை. இடம்: போர்டண்டவுன், நியூ செர்சி
ஆதாரங்கள்
[தொகு]- குறிப்புகள்
- ↑ Bernstein, Richard B. (2009). The Founding Fathers Reconsidered. Oxford University Press US. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195338324. பார்க்கப்பட்ட நாள் செப்டெம்பர் 7, 2009.
- ↑ Saul K. Padover, Jefferson: A Great American's Life and Ideas, New York: The New American Library, 1952, p. 32
- ↑ The Sharpened Quill The New Yorker, Accessed November 6, 2010,
- ↑ Conway, Moncure D. (1892). The Life of Thomas Paine பரணிடப்பட்டது 2009-04-18 at the வந்தவழி இயந்திரம். Volume 2, pages 417–418.
- நூல் பட்டியல்
- Aldridge, A. Owen, 1959. Man of Reason: The Life of Thomas Paine. Lippincott. Regarded by British authorities as the standard biography.
- Aldridge, A. Owen, 1984. Thomas Paine's American Ideology. University of Delaware Press.
- Ayer, A. J., 1988. Thomas Paine. University of Chicago Press.
- Bailyn, Bernard, 1990. "Common Sense", in Bailyn, Faces of Revolution: Personalities and Themes in the Struggle for American Independence. Alfred A. Knopf.
- Bernstein, R. B. "Review Essay: Rediscovering Thomas Paine". New York Law School Law Review, 1994 – valuable blend of historiographical essay and biographical/analytical treatment.
- Butler, Marilyn, 1984. Burke Paine and Godwin and the Revolution Controversy.
- Claeys, Gregory, 1989. Thomas Paine, Social and Political Thought. Unwin Hyman. Excellent analysis of Paine's thought.
- Conway, Moncure Daniel, 1892. The Life of Thomas Paine, 2 vols. G.P. Putnam's Sons. Vol. 1 பரணிடப்பட்டது 2009-04-18 at the வந்தவழி இயந்திரம், Vol. 2 பரணிடப்பட்டது 2009-01-06 at the வந்தவழி இயந்திரம், Facsimile. Long hailed as the definitive biography, and still valuable.
- Fast, Howard, 1946. Citizen Tom Paine (historical novel, though sometimes mistaken as biography).
- Ferguson, Robert A. "The Commonalities of Common Sense", William and Mary Quarterly, July 2000, Vol. 57#3 pp 465–504 in JSTOR
- Foner, Eric, 1976. Tom Paine and Revolutionary America. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். The standard monograph treating Paine's thought and work with regard to America.
- Trevor Griffiths (2004). These Are the Times: A Life of Thomas Paine. Spokesman Books
- Hawke, David Freeman, 1974. Paine. Regarded by many American authorities as the standard biography.
- Hitchens, Christopher, 2006. Thomas Paine's "Rights of Man": A Biography.
- Kates, Gary, 1989, "From Liberalism to Radicalism: Tom Paine's Rights of Man", Journal of the History of Ideas: 569–587.
- Kaye, Harvey J., 2005. Thomas Paine and the Promise of America. Hill and Wang.
- Keane, John, 1995. Tom Paine: A Political Life. London. One of the most valuable recent studies.
- Lamb, Robert. "Liberty, Equality, and the Boundaries of Ownership: Thomas Paine's Theory of Property Rights," Review of Politics, Summer 2010, Vol. 72 Issue 3, pp 483–511
- Larkin, Edward, 2005. Thomas Paine and the Literature of Revolution. பரணிடப்பட்டது 2011-05-11 at the வந்தவழி இயந்திரம் Cambridge University Press.
- Lessay, Jean. L'américain de la Convention, Thomas Paine: Professeur de révolutions. Paris, éditions Perrin, 1987, 241 p.
- Lewis, Joseph, 1947, "Thomas Paine: The Author of the Declaration of Independence". Freethought Association Press Assn.: New York.
- Nelson, Craig, 2006. Thomas Paine: Enlightenment, Revolution, and the Birth of Modern Nations பரணிடப்பட்டது 2009-03-02 at the வந்தவழி இயந்திரம். Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-03788-5.
- Powell, David, 1985. Tom Paine, The Greatest Exile. Hutchinson.
- Bertrand Russell (1934). The Fate of Thomas Paine
- Solinger, Jason D. "Thomas Paine's Continental Mind," Early American Literature, Nov 2010, Vol. 45 Issue 3, p593-617
- Vincent, Bernard, 2005. The Transatlantic Republican: Thomas Paine and the age of revolutions.
- Wilensky, Mark (2008). The Elementary Common Sense of Thomas Paine. An Interactive Adaptation for All Ages. Casemate. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-932714-36-4.
- மூல ஆதாரங்கள்
- Foot, Michael, and Kramnick, Isaac, 1987. The Thomas Paine Reader. Penguin Classics.
- Paine, Thomas (Foner, Eric, editor), 1993. Writings. Library of America. Authoritative and scholarly edition containing Common Sense, the essays comprising the American Crisis series, Rights of Man, The Age of Reason, Agrarian Justice, and selected briefer writings, with authoritative texts and careful annotation.
- Paine, Thomas (Foner, Philip S., editor), 1944. The Complete Writings of Thomas Paine, 2 volumes. Citadel Press. We badly need a complete edition of Paine's writings on the model of Eric Foner's edition for the Library of America, but until that goal is achieved, Philip Foner's two-volume edition is a serviceable substitute. Volume I contains the major works, and volume II contains shorter writings, both published essays and a selection of letters, but confusingly organized; in addition, Foner's attributions of writings to Paine have come in for some criticism in that Foner may have included writings that Paine edited but did not write and omitted some writings that later scholars have attributed to Paine.
வெளி இணைப்புகள்
[தொகு]- The UK Thomas Paine Society பரணிடப்பட்டது 2012-08-24 at the வந்தவழி இயந்திரம்
- The Thomas Paine Society
- Who was Thomas Paine?
- Essays on the Religious and Political Philosophy of Thomas Paine
- Thomas Paine's Memorial
- Thomas Paine Quotations
- Books of Our Time: Thomas Paine and the Promise of America by Harvey Kaye பரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம் (video)
- Take a video tour of Thomas Paine's birthplace
- Office location while in Alford பரணிடப்பட்டது 2017-06-29 at the வந்தவழி இயந்திரம்
- Thomas Paine-Passionate Pamphleteer for Liberty by Jim Powell
- Thomas Paine on Paper Money, 1786
- Thomas Paine, Liberty's Hated Torchbearer
- Lesson plan – Common Sense: The Rhetoric of Popular Democracy பரணிடப்பட்டது 2009-05-11 at the வந்தவழி இயந்திரம்
- Books of Our Time: Thomas Paine and the Promise of America பரணிடப்பட்டது 2011-04-24 at the வந்தவழி இயந்திரம் (video)
- Correspondence between Paine and Samuel Adams regarding the charge of infidelity பரணிடப்பட்டது 2012-04-14 at the வந்தவழி இயந்திரம்
- One Life: Thomas Paine, the Radical Founding Father exhibition from the National Portrait Gallery, Smithsonian Institution
- Thomas Paine பரணிடப்பட்டது 2015-03-28 at the வந்தவழி இயந்திரம் at C-SPAN's American Writers: A Journey Through History
- படைப்புகள்
- Complete Works of Thomas Paine பரணிடப்பட்டது 2009-04-16 at the வந்தவழி இயந்திரம்
- தாமஸ் பெய்ன் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- குட்டன்பேர்க் திட்டத்தில் Thomas Paine இன் படைப்புகள்
- Deistic and Religious Works of Thomas Paine பரணிடப்பட்டது 2015-03-30 at the வந்தவழி இயந்திரம்
- The theological works of Thomas Paine
- The theological works of Thomas Paine to which are appended the profession of faith of a savoyard vicar by J.J. Rousseau
- Common Sense பரணிடப்பட்டது 2009-06-13 at the வந்தவழி இயந்திரம் by Thomas Paine; HTML format, indexed by section
- Rights of Man book on Google books (full-view)
- Listen to Common Sense at Americana Phonic பரணிடப்பட்டது 2012-07-21 at the வந்தவழி இயந்திரம். m4a audio format