தாக்சாயணி வேலாயுதன்
தாக்சாயணி வேலாயுதன் (Dakshayani Velayudhan 4 ஜூலை 1912 - 20 ஜூலை 1978) ஓர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரின் தலைவர் ஆவார். புலையர் சமூகத்தைச் சேர்ந்த இவர், சமூகத்திலிருந்து கல்வி கற்ற முதல் தலைமுறை மக்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் தனது சமூகத்தில் இருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை உட்பட பல சிறப்புகளைப் பெற்றுள்ளார்.தோள் சீலைப் போராட்டத்திற்குப் பின்னர் மேல் சீலை அணிந்த முதல் பெண், இந்தியாவின் முதல் தாழ்த்தப்பட்ட பெண் பட்டதாரி, முதல் அறிவியல் பட்டதாரி, கொச்சி சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் ஒன்பது பெண் உறுப்பினர்களில் ஒன்றாக இருந்தது உட்பட பல சிறப்புகளை இவர் பெற்றுள்ளார் [1][2] ஆனால் இவரது சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் மேல் ஆடை அணிந்தவர்களில் ஒருவர் என்று குறிப்பிடுவது சரியான கருத்து இல்லை என்றும், இவருடைய மூத்த சகோதரி மற்றும் இவரது தாயார் தயிதாரா மணி ஏற்கனவே மேல் சீலை அணிந்ததாகவும் கருதப்படுகிறது. இவரது தாயார், மாணி இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிந்தைய காலம் வரை வாழ்ந்து 1959 இல் இறந்தார்.
முதல் மற்றும் ஒரே தலித் பெண் சட்டசபை உறுப்பினரான தாக்சாயணி வேலாயுதனை கேரள அரசு ' தாக்சாயணி வேலாயுதன் விருதை ' அறிவித்து கௌரவித்தது, இது மாநிலத்தில் மற்ற பெண்களை மேம்படுத்துவதில் பங்களித்த பெண்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும். இந்த விருதிற்காக ரூபாய் இரண்டு கோடு ஒதுக்கப்பட்டது.[3] இதை கேரள நிதி அமைச்சர் டாக்டர் டி. எம். தாமஸ் ஐசக் 31 ஜனவரி 2019 அன்று சட்டசபையில் 2019 கேரள நிதியறிக்கை தாக்கல் செய்யும் போது கூறினார்.[4]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]தாக்சாயணி எர்ணாகுளம் மாவட்டம் கணையன்னூர் வட்டத்தின் முளவுக்காடு கிராமத்தில் 1912இல் பிறந்தார். இவர் 1935இல் இளங்கலைப் பட்டம் முடித்தார். மூன்று வருடங்கள் கழித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்தார். கொச்சி மாநில அரசின் உதவித்தொகையால் இவரது ஆய்வுகள் ஆதரிக்கப்பட்டன. 1935 முதல் 1945 வரை திருச்சூரிலும் திருப்பூணித்துறையிலும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.[5]
குடும்பம்
[தொகு]தாட்சாயணி கல்லச்சம்மூரி குஞ்சன் மற்றும் இவரது மனைவி மணியின் மகள் (வைபின் தீவின் இளங்குன்றப்புழாவைச் சேர்ந்த தாயிதாரா மணியம்மா) ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். தட்சாயணியின் வீட்டுப் பெயர் கல்லச்சம்மூரி என்பதால், இவளுடைய இயற்பெயர் கல்லச்சம்மூரி குஞ்சன் தாட்சாயணி (க. கு. தாட்சாயணி) ஆகும். இவரது சமகால சமூக சேவகர் வல்லோன் கேபி வாலனைப் போலவே, இவர் புலையர் சமூகத்தைச் சேர்ந்தவர்.[1] இவர் ஒரு பட்டியல் சாதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். வேலாயுதனை மணந்தார்.[6]
நாடாளுமன்ற வாழ்க்கை
[தொகு]1945 ஆம் ஆண்டில் தட்சாயணி கொச்சின் சட்டமன்றத்திற்கு மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டார்.
அரசியலமைப்பு சட்டமன்றத்தில் பங்கேற்பு
[தொகு]வேலாயுதன் 1946இல் குழுவினரால் இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்புச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே பட்டியல் சாதிப் பெண் இவர் ஆவார். 1946-1952 வரை இவர் அரசியலமைப்பு சபை மற்றும் இந்தியாவின் தற்காலிக நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பணியாற்றினார் நாடாளுமன்றத்தில் இவர் குறிப்பாக அட்டவணை சாதியினரின் கல்வி தொடர்பான விடயங்களில் சிறப்பு கவனம் செலுத்தினார்.[7]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Dalit Movement in India and Its Leaders, 1857-1956. MD Publications.
- ↑ "India: Meera Velayudhan: New Challenges, but Dreams Persist." Women's Feature Service. பார்க்கப்பட்ட நாள் 1 March 2013.
- ↑ "Dakshayani Velayudhan Award". Archived from the original on 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2021-09-26.
- ↑ Kerala Budget 2019: Highlights
- ↑ Kshirsagar, R K (1994). Dalit Movement in India and Its Leaders, 1857-1956. New Delhi: MD Publications. p. 362. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185880433.
- ↑ "First Lok Sabha State wise Details: Travancore-Cochin". Lok Sabha, India. பார்க்கப்பட்ட நாள் 31 January 2019.
- ↑ Kumar, Ravindra (1992). Selected Works Of Maulana Abul Kalam Azad : Volume 7. New Delhi: Atlantic Publishers. pp. 49–51.