தாக்சாயனி வேலாயுதன் விருது
Appearance
தாக்சாயனி வேலாயுதன் விருது Dakshayani Velayudhan Award | |
---|---|
பெண்கள் மேம்பாடு 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது | |
விளக்கம் | கேரளாவில் பெண்கள் மேம்பாட்டிற்கான விருது |
இதை வழங்குவோர் | கேரள அரசு |
நாடு | இந்தியா |
தாக்சாயனி வேலாயுதன் விருது (Dakshayani Velayudhan Award) கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். கேரள சட்டசபையில் இடம்பிடித்த முதலாவது மற்றும் தனி தலித் பெண் தாக்சாயனி வேலாயுதன் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது. [1] 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருது கேரள மாநிலத்தில் மற்ற பெண்களை மேம்படுத்துவதில் பங்களிக்கும் பெண்களுக்காக வழங்கப்படுகிறது. [2] 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 அன்று 2019 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது தாக்சாயனி வேலாயுதன் விருதை கேரள நிதி அமைச்சர் டாக்டர் தாமசு ஐசக் அறிவித்தார். [3] நிதிநிலை அறிக்கையில் இவ்விருதிற்காக ரூ இரண்டு கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dakshayani Velayudhan: The First & Only Dalit Woman in India’s Constituent Assembly
- ↑ "Kerala government constituted the Dakshayani Velayudhan Award in 2019". Archived from the original on 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
- ↑ Kerala Budget 2019
- ↑ "Kerala government allocates Rs 2 crore for Dakshayani Velayudhan award". Archived from the original on 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.