தபா வம்சம்
தபா வம்சம் ( Thapa dynasty) (நேபாளி: थापा काजी वंश) ஷா வம்ச மன்னர்களின் நேபாள இராச்சியத்தின் ஆட்சி நிர்வாகத்தை 1806 முதல் 1837 முடியவும்; பின்னர் 1843 முதல் 1845 முடியவும், முக்தியார் எனும் பெயரில் தலைமை அமைச்சர்களாகவும், தலைமைப் படைத்தலைவர்களாகவும் பணியாற்றிய சத்திரியர்கள் ஆவர்.[1]
ராணா வம்சத்தவர்கள் நேபாள இராச்சியத்தின் பரம்பரை பிரதம அமைச்சர்களாக பணியாற்றுவதற்கு முன்பு, தபா வம்சத்தினர், ஷா வம்ச நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சர்களாக இருந்தனர்.[1]
18 ஆம் நூற்றாண்டின் முடிவில், நேபாள அரசவையில் தீவிர ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த பாண்டே போன்ற பிரபுகளுக்கு எதிராக, தபா கஜிகள் போராடி வந்தனர்.[2]
வகேலா தாபா குலத்தின் பீம்சென் தபா, நேபாள இராச்சியத்தில் தபா வம்சத்தை நிறுவியர் ஆவார்.[3] நேபாள மன்னர் ஜங் பகதூர் ராணாவின் மாமனார் ஆன தபா வம்சத்தின் பாலநரசிங் குன்வரை, நேபாள இராச்சியத்தின் அரசவையில் முக்கிய பதவி வழங்கினார்.
இவ்வம்சத்தினர் நேபாள அரசவையில் அதிகாரம் மிக்க உயர்குடி பிரபுக்களாக பாண்டேக்களுடன் நெருக்கம் கொண்டிருந்தனர்.[4]
தபா வம்சத்தின் எழுச்சி
[தொகு]நேபாள இராச்சியத்தை நிறுவிய ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சியில் செல்வாக்குடன் விளங்கிய தபா வம்சத்தினர், ராணா பகதூர் ஷா ஆட்சிக்காலத்தில் செல்வாக்குடன் விளங்கினர். [5]
பீம்சென் தபா, மன்னர் ராணா பகதூர் ஷாவை கொலை செய்த எதிரிகளின் கூட்டத்தைப் பிடித்துக் கொன்றதால், தனது பலத்தை நேபாள அரச குடும்பத்தினருக்கு உணர்த்தினார்.[6] இதனால் நேபாள இராச்சியத்தின் துணை பிரதம அமைச்சர் பதவியும், துணை தலைமைப் படைத்தலைவர் பதவியும், தபா வம்சத்தவர்களுக்கு பரம்பரையாக வழங்கப்பட்டது.[7] and thus founded Thapa family/dynasty as in the political context of Nepal.[8][9]
அதிகாரத்தில் தாபா வம்சத்தினர்
[தொகு]பீம்சென் தாபாவின் சகோதரர் நயின் சிங் தாபாவின் மகளான ராணி திரிபுரசுந்தரி, நேபாள இராச்சியத்தின் மன்னர் ராணா பகதூர் ஷாவின் மனைவியும், அரசியும் ஆவார்.[10]
மன்னர் ராணா பகதூர் ஷாவின் கொலைக்குப் பின் ஏற்பட்ட பெரும் கலகத்தை அடக்கிய பீம்சென் தாபா, நேபாளத்தின் துணை பிரதம அமைச்சர் ஆனார். அரசி ராணி திரிபுரசுந்தரி, நேபாள அரசின் காப்பாளராகவும், ராஜமாதாவாகவும் விளங்கினார்.[11]
ஆங்கிலேய-நேபாளப் போரில் (1814–16), நேபாள மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா இறக்கும் வரை, ராஜமாதா திரிபுரசுந்தரியின் ஆதரவுடன், நேபாள அரசவையில் தபா வம்சத்தினர் ஆதிக்கம் செலுத்தினர்.[12]
தாபா வம்சத்தினரின் விழ்ச்சி
[தொகு]நேபாள இராச்சியத்தின் அரசவையில் முக்கிய நபரான தாமோதர் பாண்டே மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை விதித்த தபா வம்சத்தின் பீம்சென் தபா, பாண்டே குடும்பத்தினர்களை கொடுமைப்படுத்தினார்.
நேபாளத்தின் மூத்த இராஜமாதா சாம்ராஜ்ஜிய லெட்சுமியின் ஆதரவுடன், தாமோதர் பாண்டேவின் இளைய மகன் ராணா ஜங் பாண்டே, நேபாள அரசவையில் 31 ஆண்டுகால தபா வம்சத்தின் அதிகாரத்தை நீக்க திட்டமிட்டார். [13] நேபாள அரசவையில் மூத்த இராஜமாதா, பாண்டே வம்சத்தினர்களையும், இளைய ராஜாமாதா தாபா வம்சத்தினரையும் ஆதரித்தனர். [14] எனவே பீம்சென் தபா, நேபாளத்தின் தற்காலிக பிரதம அமைச்சராக ரணவீர சிங் தாபாவை நியமித்து விட்டு, கோர்க்காவிற்கு திரும்பினார். [15] பாண்டே குலத்தின் ராணா ஜங் பாண்டேவும், அவரது தம்பியும் நேபாள இராச்சியத்தின் அரசவையில் அதிகாரம் மிக்கவர்களாக விளங்கினர்.[16]
மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவின் குழந்தை தேவேந்திர விக்கிரம் ஷா, 24 சூலை 1837ல் தீடீரென இறந்தது. [16][17] குழந்தையின் இறப்பிற்கு தபா வம்சக் குடும்பத்தினரே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. [17][18][19]இக்குற்றச்சாட்டுகள் பேரில், நேபாள அரசவையில் அனைத்துப் பொறுப்புகளில் இருந்த தபா வம்சத்தினர்களை நீக்கி, அனைவரையும் நாட்டை விட்டு துரத்தப்பட்டதுடன், அவர்களது உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டது. [17][18][20][21]
தபா வம்ச ஆட்சியாளர்களும், குடும்ப உறுப்பினர்களும்
[தொகு]வ. எண் | ஆட்சியாளர் | படம் | பதவி | ஆட்சிக் காலம் |
---|---|---|---|---|
1 | பீம்சென் தபா | பிரதம் அமைச்சர் & தலைமைப் படைத்தலைவர் | 1806 - 1837 | |
2 | ரணவீர சிங் தாபா | தற்காலிக பிரதம அமைச்சர் [15] | 1837 | |
2 | மதாபர் சிங் தாபா | பிரதம அமைச்சர் & தலைமைப் படைத்தலைவர் | 1843 - 1845 |
வ. எண் | பிற தபா வம்சத்தினர் | படம் | பதவி | செயல்பட்ட ஆண்டு | குறிப்பு |
---|---|---|---|---|---|
1 | நேபாள ராணி திரிபுரசுந்தரி | நேபால இளைய ராணி & நேபாள இளைய ராஜமாதா | 1805 - 1932 | ||
2 | அமர் சிங் தபா | மாகாண ஆளுநர் | மேற்கு படைத் தலைவர் | ||
3 | நயின் சிங் தபா | அமைச்சர் & படைத்தலைவர் | |||
4 | உஜ்ஜிர் சிங் தபா | ஆளுநர் & கர்ணல் | நயின் சிங் தாபாவின் மகன்[22] | ||
5 | பக்தபர் சிங் தபா | கர்ணல் | பீம்சென் தாபாவின் இளைய சகோதரர் | ||
6 | செர் ஜங் தபா | கர்ணல் | பீம்சென் தாபாவின் வளர்ப்பு மகன் | ||
7 | அம்ரித் சிங் தபா | பீம்சென் தாபாவின் சகோதரன் | |||
8 | ரன்சாவர் தபா | பீம்சென் தாபாவின் சகோதரன் | |||
9 | ரணபம் தபா | பீம்சென் தாபாவின் சகோதரன் |
படக்காட்சிகள்
[தொகு]-
நேபாள இளைய ராணி திரிபுரசுந்தரியின் சிலை
-
மதாபர் சிங் தபா
-
இரு மனைவியர்களுடன் பீம்சென் தபா
-
மதாபர் சிங் தபா
-
ரணவீர் சிங் தபா
-
உஜ்ஜிர் சிங் தபா
-
துறவியான ரணவீர சிங் தபா
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Joshi & Rose 1966, ப. 23.
- ↑ Pradhan 2012, ப. 9.
- ↑ "Thapa and Shah families animosity". p. 26.
- ↑ JBR, PurushottamShamsher (1990). Shree Teen Haruko Tathya Britanta (in Nepali). Bhotahity, Kathmandu: Vidarthi Pustak Bhandar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99933-39-91-1.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Pradhan 2012, ப. 21-22.
- ↑ Pradhan 2012, ப. 16.
- ↑ Pradhan 2012, ப. 22.
- ↑ Pradhan 2012, ப. 16.
- ↑ Adhikari 2015, ப. 120.
- ↑ Acharya 2012, ப. 3.
- ↑ Acharya 2012, ப. 71.
- ↑ Acharya 2012, ப. 74–75.
- ↑ Acharya 2012, ப. 155.
- ↑ Nepal 2007, ப. 108.
- ↑ 15.0 15.1 Acharya 2012, ப. 157.
- ↑ 16.0 16.1 Acharya 2012, ப. 158.
- ↑ 17.0 17.1 17.2 Nepal 2007, ப. 105.
- ↑ 18.0 18.1 Acharya 2012, ப. 159.
- ↑ Whelpton 2004, ப. 28–29.
- ↑ Acharya 1971, ப. 13.
- ↑ Oldfield 1880, ப. 310.
- ↑ Hamal 1995, ப. 206.
- ↑ Pradhan 2012, ப. 22-23.
- ↑ Joshi & Rose 1966.
- ↑ "Nepalese Army | नेपाली सेना". nepalarmy.mil.np. Archived from the original on 28 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
ஆதாரங்கள்
[தொகு]- Joshi, Bhuwan Lal; Rose, Leo E. (1966), Democratic Innovations in Nepal: A Case Study of Political Acculturation, University of California Press, p. 551
- Pradhan, Kumar L. (2012), Thapa Politics in Nepal: With Special Reference to Bhim Sen Thapa, 1806–1839, New Delhi: Concept Publishing Company, p. 278, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180698132
- Oldfield, Henry Ambrose (1880), Sketches from Nipal, Vol 1, vol. 1, London: W.H. Allan & Co.
- Shaha, Rishikesh (1982), Essays in the Practice of Government in Nepal, Manohar, p. 44, இணையக் கணினி நூலக மைய எண் 9302577
- Adhikari, Indra, Military and Democracy in Nepal, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-58906-8
- Acharya, Baburam (2012), Acharya, Shri Krishna (ed.), Janaral Bhimsen Thapa : Yinko Utthan Tatha Pattan (in Nepali), Kathmandu: Education Book House, p. 228, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789937241748
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Nepal, Gyanmani (2007), Nepal ko Mahabharat (in Nepali) (3rd ed.), Kathmandu: Sajha, p. 314, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789993325857
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Hamal, Lakshman B. (1995), Military history of Nepal, Sharda Pustak Mandir
- Whelpton, John (2004), "The Political Role of Brian Hodgson", in Waterhouse, David (ed.), Origins of Himalayan Studies: Brian Houghton Hodgson in Nepal and Darjeeling, Royal Asiatic Society Books (1 ed.), Taylor & Francis, p. 320, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134383634