ராணி திரிபுரசுந்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணி திரிபுரசுந்தரி
நேபாள ராணி
நேபாள இராச்சியத்தின் அரசப்பிரதிநிதி
நேபாள இராச்சியத்தின் ராணி திரிபுரசுந்தரி
துணைவர்ராணா பகதூர் ஷா
முழுப்பெயர்
லலிதா திரிபுரசுந்தரி தேவி
அரச குலம்ஷா வம்சம் (திருமணத்தால்), தாபா வம்சம் (பிறப்பால்)
தந்தைநயின் சிங் தாபா
தாய்ராணா குமாரி பாண்டே
பிறப்பு1794
இறப்பு6 ஏப்ரல் 1832
அனுமான் தோகா, காட்மாண்டு
சமயம்இந்து சமயம்
ராணி திரிபுரசுந்திரியின் சிலை

ராணி திரிபுரசுந்தரி அல்லது லலிதா திரிபுரசுந்தரி தேவி (Queen Tripurasundari of Nepal) (1794 - 1832) (also known as Lalita Tripura Sundari Devi) (நேபாளி: रानी ललित त्रिपुरासुन्दरी), ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தின் மூன்றாவது மன்னரான ராணா பகதூர் ஷாவின் இரண்டாவது ராணியும், தாபா வம்சத்து இளவரசியும் ஆவார்.

இளம் வயதில் மன்னர் ராணா பகதூர் ஷாவை இழந்து விதவையான குழந்தை அற்ற ராணி திரிபுரசுந்தரி, அரசப்பிரதியாக, நேபாள இராச்சியத்தை நிர்வகித்தவர்.

வரலாறு[தொகு]

நேபாள இராச்சியத்தின் படைத்தலைவரும், தாபா வம்சத்தவரான நயின் கஜியின் மகள் லலிதா திரிபுரசுந்திரி ஆவார். இவரது சித்தப்பா பீம்சென் தபா நேபாள இராச்சியத்தின் படைத்தலைவர் ஆவார்.

1805ல் தமது 11வது வயதில் திரிபுரசுந்தரி, நேபாள மன்னர் ராணா பகதூர் ஷாவிற்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை பட்டவர். [1] முப்பது வயதில் ராணா பகதூர் ஷா, தமது மாற்றாந்தாய் மகனால் கொல்லப்படும் போது, ராணா பகதூர் ஷாவின் மூன்றாம் ராணியின் குழந்தையான ஒன்றறை வயது கீர்வான் யுத்த விக்ரம் ஷாவிற்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது. இளவரசன் கீர்வான் யுத்த விக்ரம் ஷா பருவ வயது எய்தும் வரை, தன் சித்தப்பா பீம்சென் தபா துணையுடன் அரசப்பிரதிநிதியாக நேபாள இராச்சியத்தை நிர்வகித்தவர்.

1819ல் கீர்வான் யுத்த விக்ரம் ஷா இறந்த போது, அவரது குழந்தை ராஜேந்திர விக்ரம் ஷாவிற்கு இளவரசு பட்டம் சூட்டி, பாட்டி ராணி திரிபுரசுந்தரி, நேபாள இராச்சியத்தின் அரசப் பிரதிநிதியாக இரண்டாம் முறையாக நிர்வகித்தார்.

காத்மாண்டில் பரவிய காலராத் தொற்று நோயால், 6 ஏப்ரல் 1832 அன்று திரிபுரசுந்தரி காலமானார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Royal Ark
  2. Nepali, Chitranjan (1965). General Bhimsen Thapa ra Tatkalin Nepal. Kathmandu: Ratna Pustak Bhandar. பக். 38–39. 
  • Yadav, Pitambar Lal (1996). Nepal ko rajnaitik itihas. Benaras: Modern Deepak Press. பக். 142. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_திரிபுரசுந்தரி&oldid=2692978" இலிருந்து மீள்விக்கப்பட்டது