தட்டமுடி சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Chordata
தட்டமுடி சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. platythrix
இருசொற் பெயரீடு
Mus platythrix
பென்னெட், 1832

தட்டமுடி சுண்டெலி (Flat-haired mouse-மசு பிளாட்டிதிரிக்சு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது தென்னிந்தியா மற்றும் மத்திய இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

தட்டமுடி சுண்டெலியின் உடல் நீளம் சராசரியாக 95 மி.மீ. வால் உடல் நீளத்தை விட சிறியதாகக் காணப்படும். முதுகு புறம் அடர் பழுப்பு நிறத்திலிருந்து வெளிர் பழுப்பு நிறமாக இருக்கும். கீழ்ப்பகுதி பொதுவாக வெள்ளை நிறத்தில் தெளிவான கோட்டுடன் காணப்படும். காலில் ஒரு இருண்ட பட்டை ஒன்று காணப்படும். பயிரிடப்பட்ட வயல்கள், மலைப்பாங்கான காடுகள் வறண்ட ஆற்றுப் படுகைகளில் இந்த சுண்டெலி காணப்படும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Molur, S. (2016). "Mus platythrix". IUCN Red List of Threatened Species 2016: e.T13978A22406681. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T13978A22406681.en. https://www.iucnredlist.org/species/13978/22406681. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. J. K. De and Gaurav Sharma, Zoological Survey of India, Zoological Survey of India in Venkataraman, K., Chattopadhyay, A. and Subramanian, K.A. (editors). 2013. Endemic Animals of India(vertebrates): 1–235+26 Plates.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டமுடி_சுண்டெலி&oldid=3930623" இலிருந்து மீள்விக்கப்பட்டது