தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீஃவன் ஹாக்கிங் இந்நோய் பெற்றவர்களில் ஒருவர்

தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் (Amyotrophic lateral sclerosis) அல்லது ஏ.எல்.எஸ் (ALS) என்பது ஒரு நரம்பு நோய். இந் நோய் லூ கெரிகு நோய் என்றும் கூறப்படுகின்றது. மால்டி டி சார்க்கோட், மோட்டர் நியூரான் நோய் என்றும் அழைக்கப்படுகின்றது.

தசையை இயக்கும் நரம்பணுக்கள் படிப்படியாய்க் கெட்டு சிதைவடைவதால் உடலில் உள்ள நம் விருப்பத்தால் இயக்க்கப்படும் தசைகள் எல்லாம் இயக்க இயலாமல் பழுதடைகின்றன. தசைகளை இயக்க நரம்புவழி வரும் உடலியக்கச் செய்திகள் மெல்ல மெல்ல அருகி, கடைசியில் மூளை செய்திகள் அனுப்பும் வல்லமையையே இழந்து விடுகின்றது. ஆனால் இந்நோயினால் நோயுற்றவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் முதலான மூளையின் பிற இயக்கங்களில் கெடுதி (பாதிப்பு) ஏதும் ஏற்படுவதில்லை. உடல் இயக்கம் மிகவும் கெட்டாலும் மூளையின் நினைவாற்றல், அறிவாற்றல், அவர்களின் ஆளுமை இயல்புகள் ஏதும் மாற்றம் அடைவதில்லை.

இந் நோயின் பெயரில் உள்ள அமையோட்ரோபிக் என்னும் சொல் கிரேக்க மொழியில் இருந்து பெறுவதாகும். இது மூன்று சொற்களால் ஆனது : அ + மையோ + ட்ரோபிக் (அ = அல்ல, மையோ = தசை, ட்ரோபிக் = ஊட்டம்) அதாவது தசை ஊட்டம் பெறாமை என்பது அதன் பொருள். லேட்டரல் என்பது பக்கக் கிளை என்னும் பொருள் தரும். அதாவது தண்டுவடத்தின் பக்கங்களில் கிளக்கும் நரம்புகள் தசைகளைக் கட்டுப்படுத்தும் பகுதியைக் குறிக்கும். ஸ்க்லெரோசிஸ் என்பது இருகிக் கெடுவது என்னும் பொருள் தரும். எனவே இது நரம்பணுக்களின் குறைபாடால் தசைகள் ஊட்டம் பெறாமல் உடல் குறைவுறும் நோய் ஆகும்.

நோய் குறித்த விழிப்புணர்வு இயக்கம்[தொகு]

இந்த நோயைக் குறித்த விழிப்புணர்வை கூட்டும் பொருட்டு ஆகத்து 14 அன்று பல உயர்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் மீது பனிக்குளிரூட்டிய நீரைக் கொட்டிக் கொண்டு பரப்புரை ஆற்றினர்[1].

மேற் சான்றுகள்[தொகு]

  1. Ben Fox Rubin (14 ஆகத்து 2014). "Tech leaders get soaked in ALS Ice Bucket Challenge". cnet. பார்த்த நாள் 15 ஆகத்து 2014.