எலும்புத்தசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Skeletal striated muscle
Skeletal muscle.jpg
A top-down view of skeletal muscle
இலத்தீன் textus muscularis striatus skeletalis

எலும்புத் தசை அல்லது வன்கூட்டுத்தசை (Skeletal muscle) புறநரம்புத் தொகுதியின் ஒரு பிரிவான உடல்சார் நரம்பு மண்டலத்தினால் (somatic nervous system), அதாவது இச்சைவழி இயங்கும் நரம்புத் தொகுதியால் இயக்கப்படுகின்றன. இவை உடலிலுள்ள மூன்று விதமான தசைகளில் ஒரு வகையாகும் (ஏனையவை இதயத்தசை, மழமழப்பான தசை). இவற்றின் பெயருக்கு ஏற்ப இவை எலும்புகளுடன் கொலாஜன் (Collagen) கற்றைகளால் ஆன தசைநாண் (tendon) களினால் இணைக்கப்படுகின்றன. ஒரு வரித்தசையில் பல தசை நார்கள் கற்றைகளாக அமைந்துள்ளன. தசைநார்களின் குறுக்கு விட்ட அளவு 10 முதல் 100 மைக்ரான்கள் வரை வேறுபடுகிறது. தசை நார்களின் நீளம் 1 மி.மீ. முதல் 20 மி.மீ. வரை காணப்படுகிறது. ஒவ்வொரு தசை நாரைச் சுற்றியும் சவ்வுப்படலம் காணப்படுகிறது. இதற்கு சார்கோலெம்மா என்று பெயர். ஒவ்வொரு தசை நாரிலும், 4 முதல் 20 வரை மெல்லிய இழைகள் காணப்படுகின்றன. இவற்றிற்கு மையோஃபைபிரில்கள் என்று பெயர். இவ்விழைகள் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ளன. இந்த மையோஃபை பிரில்களின் விட்ட அளவு 1 முதல் 3 மைக்ரான் வரை வேறுபடுகிறது. இந்த இழைகளுக்கிடையே சார்கோபிளாசம் உள்ளது. இந்த மையோஃபைபிரிலின் ஒரு தனி துண்டிற்கு சார்கோமியர் என்று பெயர்.

வெளி இணைப்பு:[தொகு]

http://en.wikipedia.org/wiki/Skeletal_muscle

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்புத்தசை&oldid=1909269" இருந்து மீள்விக்கப்பட்டது