உள்ளடக்கத்துக்குச் செல்

சார்கோமியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்கோமியரைக் காட்டும் படிமம்

சார்கோமியர் (sarcomere, கிரேக்கம்: sárx = "சதை", "flesh", méros = "பகுதி", "part") என்பது தசையின் கலத்தில் காணப்படும் குறுக்கு-வரிகளின் அடைப்படை அலகு ஆகும்.

சார்கோமியரை நுண்ணோக்கி வழியாக உற்று நோக்கினால் அடர்த்தியான (A கற்றை) மற்றும் அடர்த்தியற்ற கற்றைகள் (I கற்றை) மாறி மாறி அமைந்திருப்பதைக் காணலாம். A கற்றையின் மத்தியில் ஒரு குறைவான அடர்த்தியை உடைய பகுதி காணப்படுகிறது. அதற்கு H பகுதி என்று பெயர். I கற்றை ஒரு 'Z' வடிவக் கோட்டினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு சார்கோமியரிலும், இரண்டு அடுத்தடுத்த 'Z' கோடுகளுக்கு இடையே வரிசையாக Z கோடு, I கற்றை A கற்றை I கற்றை மற்றும் அடுத்த Z கோடு போன்ற அமைப்புகள் உள்ளன. எலக்ட்ரான் நுண்ணோக்கியின் உதவிகொண்டு வரித்தசைகளை ஆய்வு செய்தபோது, தொடர்ச்சியாக அமைந்த 2 வகை புரத இழைகள், இத்தசைகளில் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது. A கற்றையில், சுருங்கும் தன்மையுடைய மையோசின் என்னும் புரதத்தினாலான தடித்த இழைகளின் தொகுதிகள் காணப்படுகின்றன. இந்த மையோசின் இழைகளின் விட்ட அளவு 110 A0 மற்றும் நீளம் 1.5 மைக்ரான். இரண்டாவது தொகுதி நுண் இழைகள், (50 A விட்ட அளவு) A கற்றையின் நீள் இழைகளைத் தழுவி அமைந்துள்ளன. இரண்டாவது தொகுதி இழைகள் A கற்றையின் மீதும், ஓரளவிற்கு I கற்றையின் மீதும் நீண்டிருக்கின்றன. இக்கற்றைகள் ஆக்டின் என்னும் பொருளினால் ஆனவை. தசைநார்களின் சுருங்கும் செயலில், மையோசின், ஆக்டின், டிரோபோமையோசின் மற்றும் டிரோபோனின் ஆகிய நான்கு முக்கிய புரதங்கள் செயல்படுகின்றன. தசைநார்களின் செயல்களுக்கு தேவையான ஆற்றல் அகூக மூலக்கூறுகளிலிருந்து பெறப்படுகிறது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sarcomeres
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்கோமியர்&oldid=2743615" இலிருந்து மீள்விக்கப்பட்டது