தசைக்கட்டி
தசைக்கட்டி | |
---|---|
ஒத்தசொற்கள் | தசைத்திசுக்கட்டி, லையோமையோமா, லையோமையோமட்டா |
லையோமையோமாயாவின் ஒரு வகையான கருப்பை லையோமையோமா. | |
சிறப்பு | புற்றுநோயியல் |
தசைக்கட்டி அல்லது தசைத்திசுக்கட்டி அல்லது லையோமையோமா (Leiomyoma) என்பது மழமழப்பான தசைகளில் தோன்றும் ஒரு வகை தீங்கற்ற கட்டி. மிகக் குறைவாகவே புற்றுநோயாக மாறக்கூடிய இந்தக் கட்டி உடலின் எந்தப் பாகத்திலும் தோன்றும். ஆயினும் பொதுவாக இக்கட்டி கருப்பை, இரைப்பை, உணவுக்குழாய், சிறுகுடல் உறுப்புகளில் தோன்றுகிறது. இது தீங்கிழைக்கும் புற்றுநோய்க் கட்டியான லையோமையோசார்க்கோமாவில் (Leiomyosarcoma) இருந்து வேறுபட்டது
இந்தக் கட்டிகளில் ஒரு அரிதான வடிவம், கருப்பையில் மழமழப்பான தசை உயிரணுக்களிலும் கொழுப்பினித் திசுக்களிலும் ஏற்படும் தீங்கற்ற கட்டிகளான லையோமையோமாவாகும். வரியில்லாத் தசைகளில் தோன்றும் இந்த லையோமையோமாவை நார்க்கருப்பை என்பர்.[1] கருப்பை லையோமையோமாக்கள் சூலகத்தில் பிற நோய்களுடன் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் சில கொழுப்புக் கழலைகளாகவும் வளர்ச்சியடைந்துள்ளன.[2][3] இந்தக் கட்டிகள் ஓரிணை படிஉயிரிகள், அவற்றுள் 40% நேர்வுகளில் சீரான நிறப்புரி பிறட்சிகள் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மா.ஜே.ஃபிரடொிக் ஜோசப் (2007). அறிவியல் களஞ்சியம். Vol. பதினொன்று. தஞ்சாவூா்: தமிழ்ப் பல்கலைக்கழகம். p. 346.
- ↑ Pedeutour, F.; Quade, B. J.; Sornberger, K.; Tallini, G.; Ligon, A. H.; Weremowicz, S.; Morton, C. C. (2000). "Dysregulation ofHMGIC in a uterine lipoleiomyoma with a complex rearrangement including chromosomes 7, 12, and 14". Genes, Chromosomes and Cancer 27 (2): 209–215. doi:10.1002/(SICI)1098-2264(200002)27:2<209::AID-GCC14>3.0.CO;2-U. பப்மெட்:10612811.
- ↑ McDonald, A. G.; Cin, P. D.; Ganguly, A.; Campbell, S.; Imai, Y.; Rosenberg, A. E.; Oliva, E. (2011). "Liposarcoma Arising in Uterine Lipoleiomyoma". The American Journal of Surgical Pathology 35 (2): 221–227. doi:10.1097/PAS.0b013e31820414f7. பப்மெட்:21263242.