நிறப்புரி பிறட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறப்புரிகளின் மூன்று முக்கிய திடீர்மாற்றங்கள்; நீக்கம் பெறுதல்(1), இரட்டிப்பாதல்(2) மற்றும் தலைக்கீழ் திருப்பம்(3).
நிறப்புரிகளின் இரண்டு முக்கிய திடீர்மாற்றங்கள்; உட்புகுதல்(1) மற்றும் இடம்பெயர்தல்(2).

நிறப்புரி பிறட்சிகள் அல்லது குரோமோசோம் பிறட்சிகள் (Chromosome abnormality) என்பது இருமய நிறப்புரிகளின் எண்ணிக்கை அல்லது அமைப்பில் ஏற்படக்கூடிய இயல்புக்கு மாறான மாற்றமாகும். ஒரு உயிரினத்தின் அனைத்து தொகுப்பு நிறப்புரிகளும் கணக்கில் கொண்டு ஒரு இனத்தின் இயல்பான நிறப்புரிகள் அடையாளம் காணப்படுகிறது. அந்த இயல்பு நிறப்புரியைக் கொண்டே இயல்பற்ற நிறப்புரிகள் அடையாளம் காணப்படுகின்றன. கலப்பிரிவின் போது ஏற்படும் இத்தகைய பிறட்சிக்கு காரணம் ஒடுக்கற்பிரிவு அல்லது இழையுருப்பிரிவு ஆகும். இத்தகைய இயல்பற்ற நிறப்புரிகளை எண்ணிக்கை அடிப்படையிலும் அமைப்பு அடிப்படையிலும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன.

எண்ணிக்கை அடிப்படையில்[தொகு]

ஒவ்வொரு இனத்தின் சிற்றினங்களின் உயிரணுக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிறப்புரிகள் உள்ளன. இவைகள் இணை இணையாகவே இருக்கும். பாலணுக்கள் உண்டாகும் போது நிறப்புரிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைகிறது. அதனால் பாலணுவில் ஒற்றைமய நிறப்புரிகள் உருவாகின்றன. இருமய நிறப்புரிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படில் அது நிறப்புரி எண்ணிக்கைப் பிறட்சி அல்லது பிளாய்டி எனப்படுகிறது. இருவகையான எண்ணிக்கைப் பிறட்சி தோன்றிகின்றன. அவை யூபிளாய்டி மற்றும் அன்யூபிளாய்டி ஆகும். மனிதருக்கு ஏற்படும் நிறப்புரிகளின் எண்ணிக்கைப் பிறட்சியால் உண்டாகும் நோய் டெளன் நோய்க்கூட்டறிகுறி ஆகும்.

அமைப்பு அடிப்படையில்[தொகு]

அமைப்பின் அடிப்படையில் ஏற்படும் நிறப்புரிகளின் பிறட்சி நான்கு வகைப்படும். அவை நீக்கம் பெறுதல், இரட்டிப்பாதல், தலைக்கீழ் திருப்பம் மற்றும் இடம் பெயர்தல் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறப்புரி_பிறட்சிகள்&oldid=2745395" இலிருந்து மீள்விக்கப்பட்டது