உள்ளடக்கத்துக்குச் செல்

டெலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெலியம் (Delium, கிரேக்கம்: Δήλιον , Dḗlion ) என்பது கிரேக்கத்தின், பண்டைய பொயோட்டியாவில் இருந்த ஒரு சிறிய நகரமாகும். இது அப்பல்லோவின் புகழ்பெற்ற கோவிலைக் கொண்டதாக இருந்தது. இது போயோட்டியாவில் உள்ள தனக்ரா பிரதேசத்தின் கடற்கடற்கரையில் அமைந்திருந்தது. இது ஓரோபஸ் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு மைல் (1.6 கிமீ) தொலைவில் அமைந்திருந்தது. டெலோஸ் தீவின் பெயரிலிருந்து இந்த கோயிலின் பெயர் உருவானது. லிவியால் விவரிக்கப்பட்டுள்ள இந்தக் கோயில், தனக்ராவிலிருந்து 5 மைல்கள் (8.0 கிமீ) தொலைவில் இருந்துள்ளது. டனாக்ராவிலிருந்து, யூபோயாவின் அருகிலுள்ள பகுதிகளுக்குச் செல்லும் பாதை 4 மைல்களுக்கும் (6.4 கிமீ) குறைவாக இருந்துள்ளது. இசுட்ராபோ டெலியத்தை அப்பல்லோவின் கோவிலாகவும், ஆலிசிலிருந்து 40 ஸ்டேடியா தொலைவில் உள்ள டனாக்ரேயின் ஒரு சிறிய நகரமாகவும் (πολίχνιον) குறிப்பிடுகிறார்.

டெலியத்தில் இரண்டு முக்கியமான போர்கள் நடந்தன. டெலியம் போர் என்று அழைக்கப்படும் முதல் போரானது, பொ.ச.மு. 424 இல் பெலோபொன்னேசியப் போரின் எட்டாவது ஆண்டில் நடந்தது. அதில் ஏதெனியர்கள் போயோட்டியர்களிடமிருந்து ஒரு குறிப்பிடத்தக்க தோல்வியை சந்தித்தனர். இந்த போர் பல நாட்கள் நீடித்தது. ஏதெனியனின் தளபதியான இப்போகிரட்டீசு, டெலியம் கோவிலைக் கைப்பற்றி, தற்காலிக கோட்டையாக மாற்றினார். அங்கு ஒரு சிறுபடையை வைத்துவிட்டு அங்கிருந்து அணிவகுத்து 10 ஸ்டேடியா தொலைவில் உள்ள ஓரோபஸ் பிரதேசத்தை அடைந்தார். அங்கு அவர் போயோடியன் இராணுவத்தை சந்திக்கவேண்டி இருந்தது. தொடர்ந்து நடந்த போரில், ஏதெனியர்கள் பெரும் இழப்புடன் தோற்கடிக்கப்பட்டனர்; ஏதெனிய தளபதி இப்போகிரட்டீசு கொல்லப்பட்டார்; போருக்குப் பிறகு பதினேழாவது நாளில், போயோட்டியர்கள் கோயிலை மீட்டனர். சாக்கிரட்டீசு இந்த போரில் ஹாப்லைட்டுகளுடன் ஒருவராக இருந்து சண்டையிட்டார். மேலும் தரவின்ன்படி, செனபோனின் உயிரைக் காப்பாற்றினார். போயேட்டியர்கள் மொத்த எண்ணிக்கையில் ஏதெனியர்களை விட அதிகமாக இருந்த காரணத்தால், போயேட்டியர்கள் வெற்றி பெற்றனர்.பாரசீகர்களின் பெரும் நிதி உதவியுடன் பொ.ச.மு. 404 இல் இப்போரில் வெற்றி பெற்றனர் [1] ஏதெனியர்கள் 15,000 பேருடன் போரைத் தொடங்கினர், போயோட்டியர்கள் 18,500 பேருடன் போரிட்டனர். எந்தவொரு போரையும்விட, இப்போகிரட்டீசின் மரணத்துடன், ஏதெனியர்கள் பலரைஉம் இறந்தனர். [2] ஏதெனியர்கள் 1,200 பேரை இழந்த அதேசமயத்தில் போயோட்டியர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையாக, 500 பேரை மட்டுமே இழந்தனர். அடுத்து இங்கு நடந்த முக்கியமான போரில், ரோமானியர்கள் பொ.ச.மு. 192 இல் பேரரசர் முன்றாம் அந்தியோகசால் தோற்கடிக்கப்பட்டனர்.

இந்த தளம் நவீன டிலேசிக்கு அருகில் அமைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Brice, Lee L. "The Peloponnesians won the war in 404 with Persian financial support. Among the terms of the surrender was the dissolution of the Delian League." Greek Warfare: From the Battle of Marathon to the Conquests of Alexander the Great (2012): 48.
  2. Hanson, Victor Davis. Ripples of Battle: How Wars Fought Long Ago Still Determine How We Fight, How We Live, and How We Think. Doubleday, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-50400-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெலியம்&oldid=3439807" இலிருந்து மீள்விக்கப்பட்டது