உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாப்லைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கிரேக்க ஹாப்லைட்

ஹாப்லைட்கள் (Hoplite, ˈhɒpl aɪts / HOP -lytes HOP-lytes [1] [2] [3] ) ( பண்டைக் கிரேக்கம்ὁπλίτης  : hoplítēs) என்பவர்கள் பண்டைய கிரேக்க நகர அரசுகளின் குடிப்படையினர் ஆவர். இவர்கள் முதன்மையாக ஈட்டிகள் மற்றும் கேடயங்களை ஆயுதமாக ஏந்தியிருந்தனர். ஹோப்லைட் வீரர்கள் குறைவான வீரர்களுடன் போரில் திறம்பட போரிட பலன்க்ஸ் என்ற கூட்டுப் போர்முறையைப் பயன்படுத்தினர். இந்த போர்முறை சிப்பாய்கள் தனியாக செயல்படுவதை தடுத்தது. ஏனெனில் இந்த போர்முறையில் சமரசம் செய்தால் இதன் பலம் குறையுகும். [4] ஹாப்லைட்டுகள் முதன்மையாக சுதந்திர குடிமக்களைக் கொண்டதாக இருந்தது, அதாவது சொத்துரிமையுடைய வேளாண் மக்கள் மற்றும் கைவினைஞர்கள் போன்றோர் ஆவர். இவர்கள் கைத்தறி கவசம் அல்லது வெண்கல கவசம், ஆயுதம் போன்றவற்றை வாங்கும் பொருளாதார பலம் கொண்டவர்கள் (இவர்களின் உடல் திறன் வயது வந்த ஆண் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பாதியாக மதிப்பிடப்பட்டுள்ளது). [5] பெரும்பாலான ஹாப்லைட்டுகள் தொழில்முறை வீரர்கள் அல்ல மேலும் பெரும்பாலும் போதுமான இராணுவ பயிற்சி பெற்றவர்களும் அல்ல. சில நகர அரசுகள் எபிலெக்டோய் ("தேர்ந்தெடுக்கப்பட்ட") என அழைக்கப்படும் ஒரு சிறிய உயரடுக்கு தொழில்முறை படைப் பிரிவை பராமரித்து வந்தன. அவர்கள் பொதுவாக குடிமக்கள் காலாட்படையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த படைகள் சில சமயங்களில் ஏதென்ஸ், ஆர்கோஸ், தீப்ஸ், சிராக்கூசா போன்ற இடங்களில் இருந்தன. [6] [7] ஹோப்லைட் வீரர்கள் பண்டைய கிரேக்கப் படைகளின் பெரும்பான்மையினராக இருந்தனர்.

கிமு 8 அல்லது 7 ஆம் நூற்றாண்டில், கிரேக்கப் படைகள் ஃபாலன்க்ஸ் உத்தியை ஏற்றுக்கொண்டன. முதல் கிரேக்க-பாரசீகப் போரின் போது கிமு 490 இல் மராத்தான் போரில் ஏதெனியர்களால் பணியமர்த்தப்பட்டபோது பாரசீகர்களை தோற்கடிப்பதில் இந்த அமைப்பின் உத்தி வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. மராத்தான் போரில் போராடிய பாரசீக வில்லாளிகள் மற்றும் இலகு இரக துருப்புக்கள் தோல்வியுற்றன. ஏனெனில் அவர்களின் வில் அம்புகள் மிகவும் பலவீனமாக இருந்ததால், ஃபாலங்க்ஸ் அமைப்பைக் கொண்டிருந்த கிரேக்க கேடயங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பைத் தாண்டி ஊடுருவ முடியவில்லை. கிமு 480 இல் தேர்மோபைலே போரிலும், கிமு 479 இல் இரண்டாம் கிரேக்க-பாரசீகப் போரின் போது பிளாட்டியா போரிலும் கிரேக்கர்களால் ஃபாலங்க்ஸ் முறை பயன்படுத்தப்பட்டது.

ஹாப்லைட் என்ற சொல் ( கிரேக்கம் : ὁπλίτης hoplítēs ; pl. ὁπλῖται hoplĩtai ) ஹோப்லானில் இருந்து வந்தது ( ὅπλον : ஹாப்லான் ; பன்மை hopla ὅπλα ), ஹாப்லைட்டின் கவசத்தைக் குறிக்கிறது. [8] நவீன ஹெலெனிக் இராணுவத்தில், ஹாப்லைட் என்ற சொலானது ( கிரேக்கம் : oπλίτης : oplítîs ) காலாட் படை வீரரைக் குறிக்கப் பயன்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "hoplite | Definition of hoplite in English by Oxford Dictionaries". Oxford Dictionaries | English. Archived from the original on 20 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Definition of Hoplite". www.merriam-webster.com (in ஆங்கிலம்).
  3. "hoplite". www.dictionary.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.
  4. Neer, Richard T. (2012). Art & Archaeology of the Greek World: A New History, C. 2500-c. 150 BCE. New York: Thames & Hudson. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780500288771. இணையக் கணினி நூலக மைய எண் 745332893.
  5. Gat, Azar (2006). War in Human Civilization. New York, NY: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199236633.
  6. Lawrence A. Tritle. Phocion the Good (Routledge Revivals). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-75050-5.
  7. Daniel J. Geagan. Inscriptions: The Dedicatory Monuments. American School of Classical Studies at Athens. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62139-001-5.
  8. Schwartz, Adam (2009). "Reinstating the hoplite. Arms, Armour and Phalanx Fighting in Archaic and Classical Greece". Historia Einzelschriften 207: 25. https://archive.org/details/reinstatinghopli0000schw. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாப்லைட்&oldid=3581057" இலிருந்து மீள்விக்கப்பட்டது