தனக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனக்ரா
Τανάγρα
அமைவிடம்

No coordinates given

Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: நடு கிரேக்கம்
மண்டல அலகு: போயோட்டியா
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகராட்சி
 - மக்கள்தொகை: 19,432
 - பரப்பளவு: 461.02 km2 (178 sq mi)
 - அடர்த்தி: 42 /km2 (109 /sq mi)
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 3,827
 - பரப்பளவு: 122.53 km2 (47 sq mi)
 - அடர்த்தி: 31 /km2 (81 /sq mi)
சமூகம்
 - மக்கள்தொகை: 1,117
 - பரப்பளவு: 27.814 km2 (11 sq mi)
 - அடர்த்தி: 40 /km2 (104 /sq mi)
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (மத்தியில்): 214 m (702 ft)
அஞ்சல் குறியீடு: 322 00, 320 09
தொலைபேசி: 22620
வாகன உரிமப் பட்டை: ΒΙ

தனக்ரா (Tanagra, கிரேக்கம்: Τανάγρα‎ ) என்பது கிரேக்கத்தின் போயோட்டியாவில், ஏதென்சுக்கு வடக்கே உள்ள ஒரு நகர பகுதி ஆகும். இந்த நகராட்சியின் தலைமையகம் ஷிமாடாரியில் அமைந்துள்ளது.[2] இது தீப்ஸிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. மேலும் இப்பகுதியின் பெயரிலான சிலைகளாளான தனக்ரா சிலைகள் எனப்படும் கிரேக்க சுடுமண் சிலைகள் அச்சு-வார்ப்பு மற்றும் சுடுமண்ணாலான சிலைவகைகளுக்கு இப்பகுதி பழங்காலத்தில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்த கிரேக்க டெரகோட்டா சிலைகள் கிமு நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, முதன்மையாக தனக்ராவில் தயாரிக்கப்பட்டன.

அரசாங்கம்[தொகு]

2011 ஆம் ஆண்டு உள்ளூர் அரசாங்க சீர்திருத்தத்தின் போது தனக்ரா நகராட்சியானது பின்வரும் 4 நகராட்சிகளை இணைத்து அதன் மூலம் விரிவுபடுத்தி உருவாக்கப்பட்டது. அவை நகராட்சி அலகுகளாக மாறின:[2]

  • டெர்வெனோகோரியா
  • ஒய்னோஃபைட்டா
  • ஷிமாதாரி
  • தனக்ரா

வரலாறு[தொகு]

பண்டைய காலத்தில், தனக்ரா ( பண்டைக் கிரேக்கம்Τάναγρα ), சில சமயங்களில் தனாக்ரேயா (Tanagraea) என்று எழுதப்பட்டது, பழங்கால போயோட்டியாவின் ஒரு நகரமாக இருந்தது. இது அசோபஸ் ஆற்றின் இடது கரையில், ஒரு வளமான சமவெளியில், ஓரோபஸிலிருந்து 130 ஸ்டேடியா தொலைவிலும், பிளாட்டியாவிலிருந்து 200 ஸ்டேடியா தொலைவிலும் அமைந்துள்ளது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. 2.0 2.1 "ΦΕΚ A 87/2010, Kallikratis reform law text". Government Gazette.
  3. Dicaearch.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனக்ரா&oldid=3476541" இலிருந்து மீள்விக்கப்பட்டது