டுவோலிங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Duolingo
Duolingo logo.png
டுவோலிங்கோ இலச்சினை
வலைத்தள வகைமின் கற்றல், மொழியாக்கம், கூட்டவழி மூலம் பெறுதல்
கிடைக்கும் மொழி(கள்)
மகுட வாசகம்Free language education for the world
பதிவு செய்தல்கட்டணமில்லை
வெளியீடு30 நவம்பர் 2011; 11 ஆண்டுகள் முன்னர் (2011-11-30)
தற்போதைய நிலைஅனைவருக்கும்
உரலிduolingo.com


டுவோலிங்கோ (Duolingo) என்பது கூட்டவழி மூலம் மொழிகளைக் கற்றுக்கொள்ளவும், மொழி பெயர்க்கவும் உதவும் இலவச இயக்கமுறைமை .[1]

தள வடிவமைப்பு[தொகு]

இத்தளத்தின் பயனர்கள் ஒரு மொழியைக் கற்கும்பொழுதே, பிற வலைத்தளங்களையும் ஆவணங்களையும் மொழிபெயர்க்க உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. [2]ஆகத்து 2014 வரை இந்த தளம் ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு இலத்தீன் அமெரிக்க ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், பிரேசிலிய போர்ச்சுக்கீசு, இத்தாலி, டச்சு, டேனிஷ், ஐரிஷ் ஆகிய மொழிகளைக் கற்க வகை செய்துள்ளது மட்டுமல்லாது , பிற மொழி அறிந்தோருக்கு அமெரிக்க ஆங்கிலம் கற்கவும் இது பயன்படுகிறது. [3]

இயங்கு முறைமைகள்[தொகு]

வலைத்தளம் மட்டுமல்லாது ஆண்டிராய்டு [4]மற்றும் ஆப்பிளின் ஐஓஎஸ்[5] கருவிகளிலும் இதற்கான மென்பொருள்களை வழங்குகிறது. விண்டோஸ் போன் இயங்கு முறைமைக்கான மென்பொருள் வெளியிடுவது குறித்த ஒரு துருப்பை டுவோலிங்கோவின் டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது[6]. ஏறத்தாழ டுவோலிங்கோ துவங்கி மூன்று ஆண்டுகள் கழித்து விண்டோஸ் போனுக்கான மென்பொருள் வெளியிடப்படுகிறது[7].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meet Duolingo, Google's Next Acquisition Target; Learn A Language, Help The Web". TechCrunch.
  2. "Translating the Web While You Learn". Technology Review. 2011-12-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-29 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Duolingo Language Courses". 26 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. Farber, Dan (2013-07-11). "Duolingo brings free language courses to the iPad". News.cnet.com. 2014-02-21 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Duolingo on the go. Our iPhone App is here!". Duolingo. 13 November 2012. 12 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
  6. https://twitter.com/duolingo/status/530047935393038337
  7. http://www.windowsphone.com/en-us/store/app/duolingo-learn-languages-for-free/2d89520e-d360-4b5b-ba5a-5a15064aa935
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவோலிங்கோ&oldid=3556707" இருந்து மீள்விக்கப்பட்டது