டாக்கா கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்கா கோட்டம்
ঢাকা বিভাগ
கோட்டம்
நாடு வங்காளதேசம்
தலைமையிடம்டாக்கா
பரப்பளவு
 • மொத்தம்20,593.74 km2 (7,951.29 sq mi)
மக்கள்தொகை (2011 census)
 • மொத்தம்36,054,418
 • அடர்த்தி1,800/km2 (4,500/sq mi)
நேர வலயம்வங்காளதேச சீர் நேரம் (ஒசநே+6)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBD-C
இணையதளம்dhakadiv.gov.bd

டாக்கா கோட்டம் (Dhaka Division) (வங்காள மொழி: ঢাকা বিভাগ, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் எட்டு நிர்வாகக் கோட்டங்களில் ஒன்றாகும்.[1] வங்காளதேசத்தின் தலைநகரான டாக்கா நகரமே இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி டாக்கா கோட்டம் 31177.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், மற்றும் 4,74,24,418 மக்கள் தொகையும் கொண்டது.

டாக்கா கோட்டத்தின் வடக்கில் மைமன்சிங் கோட்டமும், தெற்கில் பரிசால் கோட்டமும், தென்கிழக்கில் சிட்டகாங் கோட்டமும், கிழக்கில் சில்ஹெட் கோட்டமும், வடமேற்கில் ரங்க்பூர் கோட்டமும், மேற்கில் ராஜசாகி கோட்டம் மற்றும் குல்னா கோட்டமும் எல்லைகளாக உள்ளது.

நிர்வாகம்[தொகு]

டாக்கா கோட்டத்தில் இரண்டு மாநகராட்சிகளும், 13 மாவட்டங்களும், 93 துணை மாவட்டங்களும், 1,239 கிராம ஒன்றியக் குழுக்களும் உள்ளது.

பெயர் தலைமையிடம் பரப்பளவு (km²) மக்கள் தொகை
1991
மக்கள் தொகை
2001
மக்கள் தொகை
2011
டாக்கா மாவட்டம் டாக்கா 1,463.60 58,39,642 85,11,228 1,20,43,977
பரித்பூர் மாவட்டம் பரித்பூர் 2,052.68 15,05,686 17,56,470 19,12,969
காஜிபூர் மாவட்டம் காஜிபூர் 1,806.36 16,21,562 20,31,891 34,03,912
கோபால்கஞ்ச் மாவட்டம் கோபால்கஞ்ச் 1,468.74 10,60,791 11,65,273 11,72,415
கிசோர்கஞ்ச் மாவட்டம் கிசோர்கஞ்ச் 2,688.59 23,06,087 25,94,954 29,11,907
மதாரிபூர் மாவட்டம் மதாரிபூர் 1,125.69 10,69,176 11,46,349 11,65,952
மணிகஞ்ச் மாவட்டம் மணிகஞ்ச் 1,383.66 11,75,909 12,85,080 13,92,867
முன்சிகஞ்ச் மாவட்டம் முன்சிகஞ்ச் 1,004.29 11,88,387 12,93,972 14,45,660
நாராயண்கஞ்ச் மாவட்டம் நாராயண்கஞ்ச் 684.37 17,54,804 21,73,948 29,48,217
நரசிங்கடி மாவட்டம் நரசிங்கடி 1,150.14 16,52,123 18,95,984 22,24,944
ராஜ்பாரி மாவட்டம் ராஜ்பாரி 1,092.28 8,35,173 9,51,906 10,49,778
சரியத்பூர் மாவட்டம் சரியத்பூர் 1,174.05 9,53,021 10,82,300 11,55,824
தங்காயில் மாவட்டம் தங்காயில் 3,414.35 30,02,428 32,90,696 36,05,083
மொத்தம் டாக்கா கோட்டம் 31,177.74 3,26,65,975 3,90,44,716 4,74,24,418

மக்கள் தொகையியல்[தொகு]

31177.74 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 4,74,24,418 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2,41,72,317 ஆகவும், பெண்கள் 2,32,52,101 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 1.93 %ஆக உள்ளது. பாலின விகிதம் 104 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1521 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 54.2% ஆக உள்ளது.[2]இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

பொருளாதாரம்[தொகு]

இக்கோட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இக்கோட்டத்தில் பல ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல், மா, பலா, வாழை, எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள், சோளம், உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது.

போக்குவரத்து[தொகு]

ஆறுகளின் நீர் வழித் தடங்கள் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இயந்திரப் படகுகள் மற்றும் பாய்மரப் படகுகள் பயன்படுத்தப்படுகிறது.

டாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம், உலகத்தின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

இந்திய இரயில்வேத் துறை, கொல்கத்தா - டாக்கா நகரங்களுக்கிடையே தொடருந்துகள் இயக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sajahan Miah (2012). "Dhaka Division". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Dhaka_Division. 
  2. "Community Report Dhaka Zila June 2012" (PDF). Archived from the original (PDF) on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2017-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்கா_கோட்டம்&oldid=3556432" இலிருந்து மீள்விக்கப்பட்டது