சரியத்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத்தில் சரியத்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

சரியத்பூர் மாவட்டம் (Shariatpur District) (வங்காள மொழி: শরিয়তপুর জেলা, தெற்காசியாவில் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் மையத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சரியத்பூர் நகரம் ஆகும்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

சரியத்பூர் மாவட்டத்தின் வடக்கில் முன்சிகஞ்ச் மாவட்டமும், தெற்கில் பரிசால் மாவட்டமும், கிழக்கில் சந்திரபூர் மாவட்டமும், மேற்கில் மதாரிபூர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

1174.05 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சரியத்பூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக சரியத்பூர் சதர், தமுத்தா, வெதோர்கஞ்ச், ஜாகிரியா, கோஷிர்ஹட் மற்றும் நரியா என ஆறு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

இம்மாவட்டம் ஐந்து நகராட்சி மன்றங்களையும், அறுபத்தி ஐந்து கிராம ஒன்றியக் குழுக்களையும், 556 வருவாய் கிராமங்களையும், 1254 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 8000 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0601 ஆகும். இம்மாவட்டம் மூன்று வங்காள தேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டத்தில் பத்மா ஆறு, மெக்னா ஆறு, கீர்த்திநசா ஆறு, பலோங் ஆறு, தமுதியா ஆறு, ஆரியல் முதலிய ஆறுகள் பாய்வதாலும்[3], ஆண்டு சராசரி மழைப் பொழிவு 2105 மில்லி மீட்டராக இருப்பதாலும், இம்மாவட்டம் நீர் வளமும், மண் வளமும் கொண்டதாக உள்ளது. இங்கு நெல், கோதுமை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தக்காளி, எண்ணெய் வித்துக்கள், வாழை, மா முதலியன பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல்[தொகு]

1174.05 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 11,55,824 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,59,075 ஆகவும், பெண்கள் 1 5,96,749 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.65% ஆக உள்ளது. பாலின விகிதம் 94 ஆண்களுக்கு, 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 984 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 47.3% ஆக உள்ளது.[4] இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள்[தொகு]

சரியத்பூர் மாவட்டத்தில் 772 தொடக்கப் பள்ளிகளும், 19 இளையோர் பள்ளிகளும், 83 உயர்நிலைப் பள்ளிகளும், மூன்று அரசுக் கல்லூரிகளும், பதின்மூன்று தனியார் கல்லூரிகளும், ஒரு தனியார் பல்கலைக்கழகமும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. District Statistics 2011: Shariatpur (PDF), archived from the original (PDF) on 4 மார்ச் 2016, பார்க்கப்பட்ட நாள் 23 February 2016 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  2. "Official Website". 12 March 2015. Archived from the original on 3 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Shahidul Haque (2012). "Shariatpur District". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Shariatpur_District. 
  4. Shariatpur District, Bangladesh
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரியத்பூர்_மாவட்டம்&oldid=3929625" இலிருந்து மீள்விக்கப்பட்டது