உள்ளடக்கத்துக்குச் செல்

மதாரிபூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 23°10′N 90°06′E / 23.17°N 90.10°E / 23.17; 90.10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேச தேசத்தில் மதாரிபூர் மாவட்டத்தின் அமைவிடம்

மதாரிபூர் மாவட்டம் (Madaripur District) (வங்காள மொழி: মাদারিপুর), தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மதாரிபூர் நகரம் ஆகும். [1]

மாவட்ட எல்லைகள்

[தொகு]

மதாரிபூர் மாவட்டத்தின் வடக்கில் முன்சிகஞ்ச் மாவட்டம் பரித்பூர் மாவட்டமும், தெற்கில் கோபால்கஞ்ச் மாவட்டம் மற்றும் பரிசால் மாவட்டமும், கிழக்கில் சரியத்பூர் மாவட்டமும் மேற்கில் கோபால்கஞ்ச் மாவட்டம் மற்றும் பரித்பூர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

1125.69 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மதாரிபூர் சதர், சிப்சார், ராஜ்பாரி, மற்றும் கல்கினி என நான்கு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் மதாரிபூர், சிப்சார் மற்றும் ராஜ்பாரி என மூன்று நகராட்சி மன்றங்களையும், ஐம்பத்தி ஒன்பது கிராம ஒன்றியக் குழுக்களையும், 479 வருவாய் கிராமங்களையும், 1062 கிராமங்களையும் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 7900 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0661 ஆகும். இம்மாவட்டம் மூன்று வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

இம்மாவட்டத்தில் பத்மா ஆறு, மெக்னா ஆறு, ஆரியல் ஆறு, குமார் ஆறு, பலோர்டி ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், சணல், கோதுமை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கரும்பு, மிளகாய்,பருப்பு வகைகள், காய்கறிகள் முதலிய பயிரிடப்படுகிறது. மேலும் இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 2105 மில்லி மீட்டராக உள்ளது.

வேளாண் விவசாயிகள் 33.32%, மீன் பிடி தொழிலில் 1.1%, வேளாண் கூலித் தொழிலாளர்கள் 23.53%, பிற கூலித் தொழிலார்கள் 3.87%, தொழிற்சாலை பணியாளர்கள் 1%, வணிகர்கள் 11.98%, போக்குவரத்து ஊழியர்கள் 1.93%, கட்டுமானப் பணியாளர்கள் 1.19%, சேவைத் துறையில் 10.14% மற்றும் பிற துறைகளில் 11.94% பணி செய்கின்றனர்.

மக்கள் தொகையியல்

[தொகு]

1125.69 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 11,65,952 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,74,582 ஆகவும், பெண்கள் 5,91,370 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.17% ஆக உள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1036 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 46% ஆக உள்ளது.[2]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள்

[தொகு]

இம்மாவட்டத்தில் பதினேழு கல்லூரிகளும், 117 உயர்நிலைப் பள்ளிகளும், 437 தொடக்கப் பள்ளிகளும், 262 தனியார் தொடக்கப் பள்ளிகளும், அறுபது மதராசாக்களும் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shahidul Haq (2012). "Madaripur District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Community Report Madaripur Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]

23°10′N 90°06′E / 23.17°N 90.10°E / 23.17; 90.10

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதாரிபூர்_மாவட்டம்&oldid=3618097" இலிருந்து மீள்விக்கப்பட்டது