டம்போ (2019 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டம்போ
இயக்கம்டிம் புர்டன்
தயாரிப்பு
  • ஜஸ்டின் ஸ்பிரிங்கர்
  • எஹ்ரன் க்ரூகர்
  • கேட்லி பிரவுன்ஃபெல்டர்
  • டெரெக் ஃப்ரே
மூலக்கதைவால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் டம்போ
திரைக்கதைஎஹ்ரன் க்ரூகர்
இசைடேனி எல்ஃப்மேன்[1]
நடிப்பு
ஒளிப்பதிவுபென் டேவிஸ்
படத்தொகுப்புகிறிஸ் லெபென்சோன்
கலையகம்
விநியோகம்வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்
வெளியீடுமார்ச்சு 11, 2019 (2019-03-11)(லாஸ் ஏஞ்சலஸ்)
மார்ச்சு 29, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்112 minutes[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$170 மில்லியன்
மொத்த வருவாய்$116 மில்லியன்[3]

டம்போ (Dumbo) என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு கற்பனைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் டிம் புர்டன் இயக்க, எஹ்ரன் க்ரூகர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். 1941ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டம்போ என்ற திரைப்படத்தை 78 ஆண்டுகளுக்கு பிறகு மறு தயாரிப்பு செய்து மார்ச்சு 29, 2019 அன்று உலகம் முழுவதும் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தில் வெளியானது.

இந்த படத்தில், கோலின் பார்ரெல், மைக்கேல் கீட்டன், டேனி டேவிடோ, இவா கிரீன், ஆலன் அர்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் பறக்கும் திறன் கொண்ட, பெரிய காதுகளை உடைய குட்டி யானையை சர்க்கஸ் பிண்ணனியையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியானது.

கதைச் சுருக்கம்[தொகு]

நஷ்டத்தில் செல்லும் டேனி டிவிட்டோவின் சர்க்கஸில் உள்ள பெரிய யானைக்கு புதிதாக ஒரு குட்டி யானை பிறக்கிறது. ஆனால் அந்த யானை குட்டி காதுகள் வித்தியாசமாக தரையைத் தொடும் அளவுக்கு நீண்டுள்ளது. அதனால் அந்த குட்டியணையை யாருக்கும் பிடிக்கவில்லை. அந்த சர்க்கஸில் வேலை செய்யும் கொலின் பரலின் குழந்தைகள் தனிமையில் இருக்கும் குட்டியானைக்கு டாம்போ என்ற பெயர் வைத்து அன்பாக விளையாடி வருகிறார்கள். அப்போது இறகை வைத்து விளையாடும் போது டம்போ காதை சிறகுகளாகப் பயன்படுத்தி பறக்கிறது. இதை மற்றவர்களிடம் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள்.

ஒருநாள் சர்க்கஸின் போது, டம்போவால் பறக்க முடியும் என்ற விஷயம் அனைவருக்கும் தெரியவருகிறது. அதன் திறமையை பயன்படுத்தி சர்க்கஸை பிரபல படுத்திக்கின்றனர். சர்க்கஸும் செழிப்பாகிறது. இதை அறிந்த பெரிய சர்க்கஸ் கம்பெனி நடத்தி வரும் மைக்கேல் கீட்டன் டம்போவை எப்படியாவது வாங்க முயல்கிறார். அதை விற்கமறுக்கும் சர்க்கஸ் குழுவினரை கூட்டு தொழில் செய்வதாக சொல்லி டம்போவை வாங்கி அவர் இடத்திற்கு கொண்டு சென்று விடுகிறார். புதிய சர்க்கஸில் ஒரு விபத்து ஏற்படுகிறது. இதில் தன்னுடைய தாய் யானை இருப்பதை டம்போ அறிந்து அங்கு சென்று விடுகிறது. இதை பிரிக்க நினைக்கிறார் மைக்கேல் கீட்டன். இறுதியில் இவரது திட்டம் தோழ்வியடைந்து டாம்போ தனது தாயுடன் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Danny Elfman to Score Tim Burton’s ‘Dumbo’". Film Music Reporter. October 4, 2017. http://filmmusicreporter.com/2017/10/04/danny-elfman-to-score-tim-burtons-dumbo//. பார்த்த நாள்: October 4, 2017. 
  2. "DUMBO (2D)". March 15, 2019 இம் மூலத்தில் இருந்து மார்ச் 25, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190325175814/https://www.bbfc.co.uk/releases/dumbo-film. பார்த்த நாள்: March 25, 2019. 
  3. "Dumbo (2019)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் March 31, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டம்போ_(2019_திரைப்படம்)&oldid=3267251" இலிருந்து மீள்விக்கப்பட்டது